Tamil Literary Essays·Tirukkural & Ethics·1967·Readable·S31 ↗S39 ↗

திருவள்ளுவர்

Rev. Dr. Xavier S. Thani Nayagam Adigal

Bibliographic record

Annamalai University, 1967 (Open Library: 4, 60 p.). Three comparative lectures. Tamil Digital Library / Internet Archive mirror: 66 scan leaves.

How to read

Full lecture text follows on this page (preface + three sections). Prefer the scan for disputed readings.

திருவள்ளுவர்

அண்ணாமலைப் பல்கலைக்கழக சொர்ணம்மாள் அறக்கட்டளை விரிவுரைகள் (1967). Internet Archive / தமிழ் எண்ணிம நூலக உரைப்பிரதியிலிருந்து நிரப்பப்பட்டது. எழுத்துப் பிழைகள் இருக்கலாம் — ஐயம் இருந்தால் படிமத்தைப் பார்க்கவும்.

உள்ளடக்கம்

  1. முன்னுரை
  2. பொருளடக்கம்
  3. வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும்
  4. வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும்
  5. வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும்

SORNAMMAL ENDOWMENT LECTURES

“திருவள்ளுவர்”

By

டாக்டர் தனிநாயக அடிகள்

ANNAMALAI UNIVERSITY 1967 ௩2 - 00

கீதா பிரஸ், திருச்சிராப்பள்னி-2,

முன்னுரை

பேராசிரியர், சொல்லின் செல்வர், டாக்டர் ரா. பி. சேதுப் பிள்ளையவர்கள் தம் அன்னையார் கவொர்ணம்மடள் அவர்கள் நினை வாகத் தமிழ்நலம் பேணுவங் கருத்துடன் அண் ணுமலைப் பல்கலைக் கழகத்தில் ஆண்டு தோறும் புலவர் விழாச் சொற்பொ ழிவு நிகழ் தற்கென அறக்கட்டளை அமைத்து அதன் பொருட்டு இருபத் தையாயிரம் வெண்பொன் முதற் பொருள் அளித்துள்ளார்கள்.

இவ்வறக் கட்டளையின் சார்பில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய மொழித்துறைத் தலைவர் அருட்டிரு தனி நாயக அடிகளார் அவர்கள் நம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் அருளிய உலகப் பொதுமறையாகிய திருக்குறளைப்பற்றி நிகழ்த்திய மூன்று வீரிவுரைகளின் தொகுப்பாக அமைந்தது இந்நூல், பேராசிரியர் தனிநாயக அடிகளார் 'ஆங்கி லத்திலும் தமிழிலும் இத்தாலிய மொழியிலும் நிரம்பிய புலமை வாய்ந்தவர்கள், ஆங்கில மொழியின் வாயிலாகத் தமிழுக்கு அரும்பணி புரிந்துவரும் நல்லறிஞர் ஆவர்.

தனி நாயக அடிகளார் இயற்றிய விரிவுரைகளின் தொகுப் பாகிய இந்நூலில், திருக்குறள் தரும் நீதிக்கருத்துக்கள் கிரேக்க நாட்டு நீதிக் கருத்துக்களுடன் ஒப்புநோக்கி விளக்கப்பெற் றுள்ளன. உரோமையர் நீதி நூல்களுடன் ஒப்புநோக்கும் முறையில் திருக்குறட் கருத்துக்களின் உயர்வு நன்கு விளக்கப் பெற்றுளது. .புத்தருடைய அறவுரைகளும் அவற்றை விளக்கிய ஏனைய அற நூல்களின் கருத்துக்களும் திருவள்ளுவர் வாய்மொழி களுடன் ஒப்புநோக்கி ஆராயப்பெற்றன. புத்த நூல்கள் துற வறத்தின் மேன்மையையும் திருக்குறள் இல்லறத்தின் சிறப் பினையும் அறிவுறுத்தும் முறையில் அமைந்துல் எமை இனிது புலப் படுத்தப்பெற்றுளது. தெய்வப் புலவர் அருளிய திருக்குறளைப் பற்றிக் கி.பி 16-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை வெளிநாட்டறிஞர்கள் ஆராய்ந்து கூறிய முடிபுகளைத் தனி மாயக அடிகளார் தம் விரிவுரைகளில் அழகுற எடுத்துக்காட்டி யிருப்பது, திருக்குறளைப்பற்றிய அறிவிலும் பெருமையிலும் தம்

4

தாட்டவரினும் மேலை நாட்டறிஞர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ள திறத்தினை நன்கு விளக்குவதாகும். உலகில் உள்ள ஒழுக்க நூல்கள் எல்லாவற்றுக்கும் மேம்பட்டுத் திகழ்வது உலகப் பொது மறையாகிய திருக்குறளே என்னும மெய்ம்மையினை இவ்விரி வுரைகள் சிறப்பாக விளக்குகின்றன எனக் கூறுதல் பொருந்தும்.

இந்நூலின் அச்சுப்படிகளைத் திருத்தி உதவீய துணைப் பேரா சிரியர் திரு. ஆ. இராமசாமிப் பிள்ளை 8.க.,1.॥ , M1. அவர் களுக்கும் இதனை வனப்புற அச்சிட்டுதவிய திருச்சிராப்பள்ளி, கீதா அச்சகத்தார்க்கும் பல்கலைக் கழகச் சார்பில் நமது நன்றி உரியதாகும். *

அண்ணாமலைநகர்,

கோ. சுப்பிரமணியம், 24-10-67. |

தமிழ் ஆராய்ச்சி, கலைத்துறைத் தலைவர்,

பொருளடக்கம்

எண் பொருள் ] வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் 11 வள்ளுவரும் உரோ மிய ஒழுக்க இயலும்

111 வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும்

பக்கம்

45

1. வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும்

திருக்குறளைப் பற்றி எழுதிய மேல் நாட்டு அறிஞர் களுள் டாக்டர் அல்பேட் சுவைட்சர் இணையற்ற முதன்மை வாய்ந்தவராவர். தம்முடைய * இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும் '' (1018 thought and its. Development) என்ற நூலில் சமணமும், புத்தமும் ஏனைய இந்தியச் சமயங்களும் பெரும்பாலும் உலகத்தை யும், வாழ்க்கையையும் மறுத்து அவை மாயையெனுங் குறிக்கோள் உடையன என்கின்றார். எனினும் இந்தி யாவில், பண்டைக் காலத்திலும், உலகத்தையும் வாழ்க் கையையும் மாயை அல்ல, அவை வாய்மையென்று வற் புறுத்தும் எழுச்சிக் கொள்கைகள் பரவி வந்தன என்ப தற்குத் திருக்குறளிலிருக்கும் குறட்பாக்களே ஒப்பற்ற சான்றாவன என்றும் வலியுறுத்தியுள்ளார். உலக இலக் கியத்தில் திருக்குறளைப் போன் றதொரு உயர்ந்த ஞானப் பொன்மொழிகளைக் கொண்ட தொகை நூலைக் காண்பது அரிது என்பதும் அவருடைய கருத்து! டாக்டர் சுவைட்சரின் கூற்றின் பொருத்தத்தை உணர்வதற்கு,

  1. SCHWEITZER ALBERT, Indian Thought and its

Development, Adam & Charles Black, London, 1951,

ற. 203:

“With sure strokes the Kural draws the ideal of simple ethical humanity. On the most varied questions concerning the conduct of man to himself and to the world its utterances are characterised by nobility and good sense There hardly exists in the literature of the world a collection of maxims in which we find so much lofty wisdom."

வெள்ளி விழா மலர், திருவள்ளுவர் கழகம் தென்காசி, 1969, குறள், அல்பர்ட் ஷ்வைட்ஸர், எனும் கட்டுரை யினைக் காண்க.

2 வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் அன்னாருடைய ஆராய்ச்சி வன்மையையும், ஒழுக்க இயல் இலக்கிய அறிவையும் நன்கு உணர்தல் வேண்டும். “இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்? எள்பது அவர் எழுதிய ஒரு நூல்... பண்பாட்டின் தத்துவத்தை ஆராயும் வேறிரு நூல்களையும் அவர் யாத்துள்ளார். இவற்றுள் ப பண்பாடும் ஒழுக்கவியலும் '' என்பது ஒன்று இந்நூலில் ஒழுக்க இயலின் வரலாற்றைக் கூறி, இன்று உலகம் இன்பமாக வாழ்வதற்குச் “ செயல் முறையில் உயிருள்ள ஒழுக்க இயல் '' 3 வண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். தம்முடைய நூல்களில், டாக்டர் சுவைட்சர் இந்திய ஒழுக்க இயல் இலக்கியத்தையும், சீன ஒழுக்க இயல் இலக்கியத்தையும் மேலை நாட்டின் பல்வேறு அறிஞர் எழுதிய அறத்துறை நூல்களையும் ஆராய்ந்துள்ளார். இத்தசைய அறிஞர் திருக்குறளைப் பற்றி உயர்ந்த கருத்துக்களைக் கூறுவாரெனின், திருக் குறள் உலகத்தார் அனைவரின் புகழிற்கும் உரியது என்பதில் சிறி?தனும் ஐயமில்லை. டாக்டர் சுவைட்சர், திருக்குறளை டாக்டர் கிறாவுவினுடைய ஜெர்மன் மொழி பெயர்ப்பின் வழியாகவே அறிந்தவர். அவர் திருக் குறளின் மூலத்தைத் தமிழிற் படித்திருந்தால் இன்னும் அரிய, நுண்ணிய கருத்துக்களைத் தெரிவித்திருப்பார் என்பது திண்ணம்.

1

இவ்வாறு திருக்குறளை த் தமிழ் மொழி வாயிலாகவும் மொழி பெயர்ப்பு மூலமாகவும் கற்ற மேலை நாட்டு அறிஞர் அதனைத் தாமறிந்த மேலை நாட்டு நீதி நூல்க ளுடன் சீர்தூக்கிப் பார்த்திருக்கின்றனர். இதுகாறும் நான் பார்த்த மேலை நாட்டு அறிஞரின் நூல்களில், திருக்குறளைப் பற்றி முதன் முதலில் குறிப்பிட்டவர் போர்த்துகீச அறிஞரும், கத்தோலிக்கத் திருமறைச் செல்வருமாகிய யூவான் தே வில்லா கொன்தே (1௦௨1 02

  1. The Philosophy of Civilization, 2 volumes: 11 Civilizatici and Erhics. Adam & Charles Black, London, 1949.

வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் 8 Vila conde) அவர் பதினாறாம் நூற்றாண்டில், கோட்டையி லிருந்த பூவலிக்கவாகு (1521-1591) எனும் சிங்கள அரசனுடைய அரண்மனையில் தம் திருமறையைப் பற்றிக் கருத்தரங்கம் நடத்தும்போது தம்முடைய கொள்கை களுக்குத் திருக்குறள் எனும் நூல் சான்றாக விளங்குவ தென விளம்பியுள்ளார். * நீங்கள் மறைவாக ஒலித் திருக்கும் வள்ளுவரின் நூலைப் படித்துப் பார்த்தால் அங்கு நான் கூறும் கிறித்துவச் சத்தியங்களையும் மற்றும் ஏனைய கிறித்துவக் கொள்கைகளையும் காண்பீர்கள் '' என்று சிங்கள மன்னன் முன் னிலையில் இயம்பினர். யூவாம் தே வில்லா கொன்தே ஈழ நாட்டினையும், இந் தியத் தமிழ் நாட்டினையும் நன்கு அறிந்தவர். பதினாறாம் நூற்றாண் டின்கண் போர்த்துகீசர் திருக்குறளைப் பற்றி அறிந்திருந்தனரென்பதோடு அந்நூற்றாண்டில் சிங்கள மன்னன் அரண் மனையில் தமிழ் மொழி எத்தகைய செல் வாக்கை அடைந்திருந்தது என்பதையும் இம்மேற்கோள் காட்டுகின்றது.

இத்தாலி நாட்டில் பிறந்த பேரறிஞரும் ஆயிரத் தெழுநூற்று நாற்பத்தேழில் மறைந்த தமிழ்ப் புலவரு மான வீரமா முனிவர் திருக்குறளின் முதலிரு பால்களை யும் இலத்தீனில் மொழி பெயர்த்து அப்பாக்களுக்கு இலத்தீன் மொழியில் ஓர் உரையும் எழுதியுள்ளார். மிகவும் பொருத்தமாகத் திருக்குறளை உரோமைத் தீத் துவஞானி சேனைக்காலின் (கி, மு. 4- கி. பி. 65) ஒழுக்க இயல் நூல்களுடன் ஒப்பிட்டுள்ளார் வீரமா முனிவர் ; பத்தொன்பதாம் நூற்றாண்டின்கண் புதுவையில் சில ஆண்டுகள் (1892 - 1852 ?) வாழ்ந்த ஆரியல் (Ariel) என்னும் பிராஞ்சிய அறிஞர் திருக்குறளை வியந்து போற்றுகின்றார். உலக மக்களினுடைய சிந்தனையில் உயர்ந்த இடம் பெறும் நூல் திருககுறள் என்றும், அந் நூலின் ஆசிரீயர் உலக மாந்தர் அனைவர்க்குமே தம் கருத்துக்களை த் தெரிவிக்கின்றார் என்றும, பூர்னொப்

3 DE QUEYROZ FERNAO, CE/LAO, VOL. Il p: 241.

4 வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் (Bournoff) எனும் கீழ்த்திசைக் கலைவல்லுநர்க்கு ஒரு கடிதத்தில் எழுதினார்.

இ?த நூற்றாண்டில் தே பூவன்தேனோ (De Fointen- neaப) என்பவர் “வள்ளுவரின் காதல் நூல் '' .எனுநீ தலைப்புடன் காமத்துப்பாலைப் பிரஞ்சு மொழியில் வெளி யிட்டார். வான்சோன் |VinS0n) எனும் அறிஞர் இந் நூலிற்கு எழுதிய முன்னுரையில் காரைக்கால் வாழ்நர் ஒருவரால் திருக்குறளின் மூன்று பால்களும் பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டதென்றும், அக்கையெழுத்துப் பிர தி 1761ஆம் ஆண்டு பாரீஸ் தேசீய நூல் நிலையத்தில் வைக்கப்பெற்றதென்றும் கூ றியிருக்கின்றார். ஆயினும் இப்பிரதியை இதுகாறும் எவரும் கண்டிலர். பத்தொன் பதாம் நூற்றாண்டிலேயே டாக்டர் கிறாவுளும் (ரே) திருக்குறளை ஜெர்மன் மொழியில் பெயர்த்துள்ளார்,

இருபதாம் நூற்றாண்டின் தோற்றுவாயில் ஆங்கில மொழியில் திருக்குறளைப் பெயர்த்த பேரறிஞர் போப், கிரேக்கக் குறட்பாக்களுடன் திருக்குறளை ஒப்பிடுதல் கூடுமென்றும், திருக்குறள் காட்டும் சமூக நிலையும் கிரேக்கக் குறட்பாக்கள் காட்டும் சமூக நிலையும் ஒரே தன்மை வாய்ந்தவை யென்றும், தம் மொழி பெயர்ப்பின் முகவுரையில் மொழிகின் றனர், சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் திருக்குறளினுடைய பான் மையைப் பேரறிஞர் அகுஸ்தீனுடைய நடைக்கு ஒப்பிட்டுத் திரு வள்ளுவரைத் தமிழ்ச் சுருக்க வசன அறிஞர் (Magister Sententiarum) என்று அழைக்கின்றனர்.

போப்பையர் தம் மொழி பெயர்ப்பு நூலின் குறிப்புக் களில் காட்டும் மேற்கோளாட்சிகளில் பல்வேறு நாட்டு அறிஞர் களுடைய கருத்துக்கள் தோன்றுகின் றன.

சிறப்பாக உபநிஷதம், ஹித்துபதேசம், பகவத் கீதை, மனுதருமம், தருமபதம், புத்தரைப்பற்றி ஓல்டன் பேர்க் எழுதிய நூல், கிரேக்கப் புலவர் ஈஸ்கிலிஸ், அரிஸ்டாட்லின் ஒழுக்க இயல், இலத்தீன் புலவர்

வள்ளுவரும் கிரேகக ஒழுக்க இயலும் 5 ஹொறஸ், ஓவிட், தெறன்ஸ் வேர்ஜில், அந்தோ னைன்னஸ், கத்துல்லஸ், தியோலிசியுஸ், காத்தோ, இத்தாலியப் புலவர் தாந்தே ஆங்கிலப் புலவர் சேச்ஸ் பியர், தெலிசன், பிறவுணிங், கீபில், உவேட்ஸ்வொர்த், விவிலிய நூலில் பழமொழி, நான்கு நற்செய்தி நூல்கள் முதலியன. போப்பையருக்கு இடமும் காலமும் கிடைத் திருந்தால் இன்னும் விவிலிய நூலிலிருந்தும், கிரேக்க இலத்தீன் புலவர்களிலிருந்தும், சீனத் தத்துவ ஞானி களிலிருந்தும் பல மேற்கோள்களைக் காட்டிபிருந்திருப்

பார்,*

இவ் விரிவுரைகளில் திருக்குறள் தரும் ஒழுக்க நீதிக் கருத்துக்கள், கிரேக்க தாட்டு ஒழுக்க நீதியுடன் முதன் முதல் ஒப்பிட்டுப் பார்க்கப்பெறுகின்றன. இத்தகைய ஆராய்ச்சிக்கு வாய்ப்பளித்த நம் பல்கலைக் கழகத்திற்கும், இதற்கென அறக்கட்டளை ஈந்த பேராசிரியர் சேதுப் பிள்ளை அவர்களுக்கும் தமிழ் பேசும் மக்களின் நன்றி உரித்தாகும்.

2

உலகில் ஒழுக்க இயல் சிந்தனை படிப்படியாகவே வளர்ச்சியுற்றது. அச்சிந்தனை பெரும்பாலும் சமூகத் தின் அமைப்பையும், வளர்ச்சி நிலையையும் ஒட்டியே மாறிக்கொண்டும், செம்மையும் சீரும் அடைந்து கொண்டும் வந்துள்ளது. முன்னொரு காலத்தில் மக்கள் தம் சமூகத்தால் வரையறுக்கப் பெற்ற வாழ்க்கை யையே கடைப்பிடித்து அவ்வழக்கினை மீறாது ஒழுகி வந்தனர். இதனை ஒழுக்க இயல் வரலாற்று வல்லுநர் “வழக்கு ஒழுக்கம் '' (Customary morality) என்பர். பின்னொரு காலத்தில் மக்கள், வழக்கைக் குருட்டு முறையில் கடைப்பிடியாது இது நன்மை இது தீமை 4. ப. Pope, The * Sacred’ Kural of Tiruvalluva - Nayanar,

Allen & Co. London, 1886. See preface and intro-

duction,

6 வள்ளூவரும் கிரேக்க ஒழுக்க இயலும் எனும் உணர்ச்சியுடன் தழுவி வந்தனர். இவ்விரண் டாம் நிலையினை “உணர்ச்சி ஒழுக்கம் '' C5105 3௦78110971 என்பர். நன்மை என்பது யாது, கடமை என்பது யாது. நீதி எள்பது யாது. இவற்றைக் கடைப்பிடிப்பது எக்காரணங்கள் பற்றி என்று ஆராய முற்படுதல் '* பகுத்தறிவு ஒழுக்கம் '' (Rational morality). எனும் மூன்றாவது நிலை. இந்நிலையிலேயே மெய்யுணா வின் வல்லார் ஒழுக்க இயலை மெய்யுணர்வின் ஒரு ப்குகியாக ஆராய்ந்தம், தொகுத்தும், வகுத்தும், கற்பித்தும் வருவர்.

படிட்படியாகவே பண்டைத் தமிழ் மக்களும் ஒழுக்கத்தின் உணர்ச்சியில் வளர்ந்திருக்க வேண்டும். முசலில் ஒரு நிலையில் தம் கூட்டுறவு வாழ்க்கை விதித்த வாறு தம் ஐந்திணை நிலத்திற் கேற்ற பழக்க வழக்கங் களைத் தழுவி வந்தனர். பின்னர், போரிலும், காதலிலும் ஈடுபட்டு வந்த மக்கள், வீரம், புகழ், மானம், வாய்மை, சான்றாண்மை என்ற பண் புகளைப் பற்றியும், அப்பண்பு களைக் கொண்ட வீரரைப் பற்றியும் அகவலரும், பாணரும் பாடக்கேட்டு. அப்பண் புகளைப் பேணிவந்தனர். இறுதிநிலையில் புலவரும், சமயச் சிந்தனையாளரும் அறத்தின் தன்மையையும், அதன் பல துறைகளையும் ஆராய்ந்து நீதி நூல் சளையும் செய்யுட்களையும் யாத்தனர் இம் மெய்யுணர்வின் விரிந்த மலர்ந்த காலத்திலேயே வள்ளுவரும் தம் நூலினைத் தொகுத்திருத்தல் வேண்டும்.

3

ஒழுக்க இயலைப்பற்றி நாம் அறியும் முதல் ஏடுகள் எகிப்தில் தோன்றியவை. இவ் ஏடுகள் நம்மைக் கிறித் வுக்கு முன் ஈராயிரத்திற்கும் நாலாயிரத்திற்கும் இடைப்பட்டுள்ள ஆண்டுகளுக்குக் கொண்டு செல் கின்றன. நைல் நதிக்: கரையோரங்களில் உள்ள எகிப்து மக்கள் உழவிலும், வணிகத்திலும் ஈடுபட்டு வந்தனர், பல வகுப்புகளாகப் பிரிக்கப் பெற்ற சமூகத்

வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் 7

திற்குப் பபவோன் தலைவஞகவும் அவனைத் தொடர்ந்து வலிமை மிக்க சமயக் குரவர்களும், நில உரிமைபெற்ற உயர்குடி மக்களும், அவர்களுக்குப் பணியாற்றும் ஏவலா ளரும், அடிமைகளும் வாழ்ந்துவந்தனர். குத்தகை உழு தொழில் முறையையும், விளை பொருளில் ஒரு பகுதி யினை அரசனுக்கு வரியாகக் கொடுப்பதையும் மக்கள் மேற்கொண்டனர். எகிப்தின் வணிகக் குத்தகைச் சூழ்நிலையில் நீதி நேர்மை, உண்மை, அரசப்பற்று எனும் ஒழுக்கக் கொள்கைகள் தோன்றி நிலை பெற்றன. ஆயினும், எகிப்தியர் ஒழுக்க இயலில் பெரு முன்னேற்றமடைந்திருக்கவில்லை என்பதை ஆராய்ச்சி யாளர் பலர் ஒப்புக்கொள்ளுகின் றனர்.

ஒழுக்க இயல் பற்றிய இலக்கியம் எகிப்தில் வளர்ச்சி யடைந்திருந்ததென்பதற்கு வாழ்க்கையை நடாத்து வதற்கான முறைகளையும், உண்மைகளையும் பழமொழி களையும் கூறும் அவர்களின் நூல்களே எடுத்துக் காட்டாவன. இந் நூல்களே உலகில் நாம் இதுகாறும் அறிந்த முதல் நீதி நூல்களாகவும் இருத்தல் கூடும். இந்நூல்கள் சிறுவரையும், காவலரையும் கற்பிக்க

  • எழுதப் பெற்றன. பிற்காலத்தில் இந்நூல்களைச் சிறார் கல்விப் புத்தகங்களாகப் பயின்றுவந்தனர். மாணாக்கர் இப்பாட நூல்களை யெல்லாம் படியெடுத்கப் படித்தனர். எகிப்தில் இத்தகைய கையெழுத்துப் படிகள் பல கண்டெடுக்கப் பெற்றிருக்கின்றன. பிதாகோதேப் (1118- hotep) என்ற பேரமைச்சர் எழுதிய “ கற்பனைகள் '' என்ற நூல் அவற்றுள் ஒன்று. இந்நூலைத் தம் கிழப் பருவத்தில் தம் புதல்வனின் பயிற்சிக்காக எழுதினார் பிதாகோதேப் (கி. மு 2860). இந்நூலிற் கூறப்பெறும் சில விதிகள் பின்வருமாறு.
  1. சொல்வன்மை வாய்ந்தவன் தான் எந்த அவை யிலும் பேச வல்லவன். எத்தொழிலிலும் பேசு ந்தொழில் மிகவும் கடுமையானது

  2. நேர்மையைச் செழிக்க வளர்ப்பாயாக; அதன் மூலம் உன் பிள்ளைகள் வாழ்வார்கள்.

வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும்

9, நேர்மை வழி நின்றவனே உறுதியாய் வாழ்பவன்,

“மெரீக்கரை (18௨1௭௨) அரசருக்கென (கி. மூ: 2900) எழுதப் பெற்ற அறிவுரைகள் '' எனும் வேறொரு நூலில் இங்ஙனம் கூறுகின்றார் நூலாசிரியர் :

  1. முன்னோர் வழி நின்று பண்பு அடைந்த வனுக்குத்தான் உண்மை வரும்.

2, தந் தையரையும், முன் னோரையும் கண்டு அறிக; அன்னாரின் அறிவுரைகள் எழுத்து வடிவில் உள்ளன. அமென்ஒமப்பே (&ற௭௦௱௦06) என்பவருடைய

“பழமொழிகள் "' கி, மு. ஆயிரத்தில் எழுதப் பெற்றன. இப்பழமொழித்தொகையே உலகில் முதற் பழமொழித் தொகை நூல் என்று கருதுகின்றனர். இந்நூலிலுள்ள இரு பழமொழிகள் கீழ்வருமாறு :

  1. துன்பத்தில் அனுபவிக்கப்படும் செல்வத்திலும், இன்பத்திற் சுவைக்கப்படும் கூழ் இனிது.

  2. வலிமை படைத்தவரின் நன்கொடைகளைக் கொள்ளற்க; எளியாரை வருத்தாதே. திருக்கு றளிலிருக்கும் ஒருசில கூற்றுக்களின் கருத்து

எகிப்தியரின் இப்பழமொழிகளுடன் ஒப்பிடத்தக்கவை. ஆயினும் திருக்குறள் காட்டும் ஒழுக்க நீதி, எகிப்திய ஒழுக்க நீதியினும் பெரும் வளமும் உயர்வும் பெற்றது. எகிப்தியரிடம் மன நலம், ஈகை, ஒப்புரவு, சான்றாண்மை போன்ற ஒழுக்க நீதிக் கலைச் சொற்கள் இருக்கவில்லை. அவர்கள் அருவக் கருத்தக்களைச் செயல் முறையில் உருவமாகவே கண்டனர். ' நடக்கின்றேன் '' எனக் கூறவேண்டிய இடத்து *' என் கால்கள் செல்கின்றன '' என்றே கூறினர். “ செம்மை" யெனுங் கருத்திற்கு । செம்மையான வழி '' யென்றே சொல்லினர். * ஈகை” யெனும் ஒரு சொல் குறிக்கும் பண்பினை :' உணவற்ற வருக்கு உணவு கொடுத்தல், தாகமுள்ளவர்க்குத் தண்ணீர் வழங்குதல், உடையற்றவர்க்கு ஆடை நல்கல்" என விரித்துப் பல செயல்களின் வழியாக ஈகையெனும் பண் பின் கருத்தை விளக்கினர்,

வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் 9

எகிப்தியருடைய கொள்கைகளும் ஒழுக்க நூல் களும் சூமர், பாபிலோன், ஈப்று பண்பாடுகளுக்கு அடிப்படை யாயிருந்தன.்

4

கிரேக்க மக்கள் பண்பாட்டிலும், கலைகளிலும் உலகிற் சிறந்தவர்கள். அவர்களிடம் ஒழுக்க இயல் படிப்படியாகவே வளர்ச்சியுற்றது. அவர்களுடைய காப்பியக்காலத்தில் தோன் நிய (கி. மு. 600 க்கு முன்னர்) இலக்கியங்களில் காணப் பெறும் மானம், புகழ், நாட்டுப் பற்று, பணி முதலிய பண்புகளிலிருந்தே அன்னார் தம் நீதியுணர்ச்சியையும், தத்துவத்தையும் பெற்றனர்.

கிரேக்க, உரோம எழுத்தாளர் தம்முடைய ஒழுக்கத் தத்துவங்களைப் பெரும்பாலும் பரந்த, விரிந்த உரை நடை நூல்களாகவே எழுதினர். அத்தகைய நூல்களில் ஒரு பொருளைப் பல $காணங்களிலிர ந்து ஆராயவும் எடுத்துக்காட்டுக்கள் கதைகள் முதலியவற்றைக் கொண்டு விளக்கவும் கூடும். ஆனால் திருக்குறள் குறட் பாக்களாக அமைந் திருக்கின்றது. செனெக்கா, மார்க்குஸ் அவுறேலியுஸ் போன்ற தத்துவ ஞானிகள் தம் நூல்களின் பலபக்கங்களிலும் பல இடங்களிலும் “ நேரத்தையும் காலத்தையும் வீண் போக்காது அறத்தி லும் மெய்யுணர்விலும் ஈடுபடுதல் வேண்டும். ஏனெனில் வாழ்க்கை நிலையாமையுடையது' என்று வற்புறுத்து கின்றனர். வள்ளுவரோ குறட்பாக்களைக் கையாளுவ தால் விரித்து விளக்காது ஒரே அடியில் அதே கருத்தைச் சுருங்கச் சொல்லுவர் :

“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல் ” (98) “ அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை” : (36)

  1. See EBY and ARROWWOCOD, The History and Philosophy of Education, Ancient and Medieval, New York, Prentice Hall, 1949.

10 வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும்

பல நூல்களில் பிளாத்தோவும், அரிஸ்டாட்டிலும் அரசியலைப்பற்றி விரித்துரைக்கின் றனர். திருக்தறளோ எழுநூறு குறட்பாக்களில், ஆயிரத்திருநூறு அடிகளில் அரசியலுக்கும், குடிகளுக்கும், தனி மக்களுக்கும் பொருந்தும் நீதிகளைக் கூறுகின்றது. ஆயினும் திருக் குறள் அக்காலத்தத் தமிழ்நாட்டில் பரவியிருந்த அரசியற்கொள்கைக் கடலைக் கடைந்து, அங்கு தோன்றும் அமிழ்தத்தை மட்டுமே கொடுக்கின்றது. பிளாத்தோ, அரிஸ்டாடில் காலத்தில் கிரேக்க நாட்டில் பரவியிருந்த கொள்கைகளைப் போல் தமிழ் நாட்டிலும் நல்ல அரசைப்பற்றிய கொள்கைகள் வளம்பெற்றிருந் தன என்பதற்குத் திருக்குறளே சான்று, தமிழ்நாட்டில் பரவிய கருத்துக்களைத் தம் சிந்தனையின் கருத்துக்க ளுடன் சேர்த்துத்தான் தம் நூலை யாத்திருக்கவேண்டும் திருவள்ளுவர். வள்ளுவர் கூறும் நீதிகளுக்கு மேற் கோள்களும் வரலாற்று ஆதாரங்களும் சங்க இலக்கியங் களில் நிரம்பக் கிடைக்கின்றன.

5

சாக்ரெட்டிஸிற்கு (கி. மு 470-999) முன்னிருந்த சொபிஸ்டர் (5௦றhist$) என்போர், ஒழுக்கமென்பது சமூக வாழ்வைத் தருமத்திற்கேற்றவாறு இனிது ஆற்றுப் படுத்தும் ஒரு கருவியென்றே கருதினர் ஒவ்வொரு வனும் தன்னாலியன் றவாறுதான் விரும்பிய இன்பங்களைத் துய்த்தல் கூடும் என்றும் விளம்பினர், சாக்ரெட்டிஸ் தருணத்திற்கேற்றவாறு ஒழுக்கம் மாறும் எனும் இவர் களின் கொள்கையை ஆதரிக்கவில்லை. இன்பமே ஒழுக்கத்தின் நோக்கமாயினும் அவ்வின்பம் மனத்தின் (பகுத்தறிவின்। இன்பமாக (ரர! றleasபாc) இருத்தல் வேண்டும் என்று திருத்திக் கூறினார். அரிஸ்டாட்டில் தன் மகள் நிக்லோமக்சுக்கென எழுதிய “ நிக்கோ மக்கீயன் ஒழுக்க இயல் ” என்னும் நூலில் இன்பமே (happiness) ஒழுக்கத்தின் நோக்கமென்றும், மன நலத்துடன் (80000௦ ஒன்றி இயங்க வேண்டு மென்றும்

வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும 11

எழுதியுள்ளார். பகுத்தறிவால் மக்கள் அடையும் இன்பத்தைத் திருக்குறளும் அறத்தின் நோக்கமாக இயம்புகின்றது. செயல்கள் இன் பம் பயப்பன என்றும், இனிது என்றும், . உவப்பன என்றும் அமைவதைக் காண்க “ அறத்தான் வருவதே இன்பம் '' 909 “ தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது ” 689 “ஈத்து உவக்கும் இன்பம் அறியார் ” --228 உதாம் இன்புறுவது உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார் ” 809 “ உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்” - 994 “இருள் நீங்கி இன்பம் பயக்கும் '' 952 “ இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின் '' - 854 இக்குறட்பா க்களில் கூறப்பெறும் இன்பம், ஐம்புலன்கள் பெறும் இன்பம் ஒழிந்த இன் பம். புதல்வர் மெய் தீண்டியதால் வரும் இன்பம், அன்னாரின் சிறுகை அளாவிய கூழை உண்பதால் வரும் இன்பம், அன்னாரின் மழலைச் சொற்கேட்பதால் வரும் இன்பம் ஆகியவை புலன்களின் இன்பம். தன் மகனைச் சான் றோனெனக் கேட்ட தாயின் உவகை போன்ற இன்பம், புலனிற்கும் உயிருக்கும் இன்பம். ஆயினும், “ மன நலம் ” (00௮௫55) அறத்தால் வரும் இன்பம், உள் ளத்தின் உவகை ஆகிய இவையே அறத்தின் நோக்கமும் பயனு: ரம் “மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் '' 57 “மன நலத்தினாகும் மறுமை --459

அரிஸ்டாட்டில் ஒழுக்க உணர்ச்சியை ஒருவனுக்கு உள்ள இசையினைச் சுவைக்கும் உணர்ச்சியுடன் ஒப்பிடு கிறார். இசையைச் சுவைக்கும் உணர்ச்சி இயல்பாகவே , சிலரிடம் மிகுதியாகவும், வேறு சிலரிடம் குறைவாகவும் இருத்தல் கூடும். அவ்வுணர்ச்சியைப் பயிற்சியால் வளர்த்தலுங்கூடும். இசை விரும்புபவன் இசையில்

12 வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் ஈடுபடுவதுபோல் ஒழுக்கத்தை விரும்புபவன் நல் ஒழுக்கத்தில் ஈடுபட்டு அதனால்வரும் இன்பத்தைப் பெறு கிரான். அறச்செயல்களை மீண்டும் மீண்டும் செய்வதால் அறப்பயிற்சி இயல்பாகவே வரும் என்பர் அரிஸ்டாட்டில். அவ்வாறே ஒழுக்கமுடையவா மறந்தும் தீயவை செய்ய முற்படார் என்கின்றார் திருவள்ளுவர்.

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்” 139

6

இரு பக்கமும் சாராமல் எதிர் பண்புகளுக்கு நடுவில் நிற்கும் தன்மையது அறம் என்று விளக்குகின்றார் அரிஸ்டாட்டில். ஈகை என்பது என்ன ? அதன் அறம் யாது? ஊதாரித்தன்மைக்கும் உலோபியின் தன்மைக் கும் இடையில் நிற்கும் பண்பே ஈகை. காரணமின்றி வரையாது கொடுத்தல் ஊதாரித்தன்மை, கொடுக்க வேண்டிய காலத்தில் கொடுக்காதிருத்தல் உலோபியின் தன்மை. வேண்டிய மக்களுக்கு வேண்டிய அளவுக்கு வேண்டிய காலத்தில் வேண்டிய முறையில் கொடுத்தல் ஈகை என்பர் அரிஸ்டாட்டில். ஒழுக்க இயல் வல்லார் அறத்தின் இயல்பை விரித்துக்கூறும் பொழுது எதிர்ப் பண்புகளையும் கூறி, அறச்செயல்களின் நன்மையைத் துலங்குமாறு செய்வர். திருவள்ளுவரும் இங்ஙனம் விலக்குவகையாலும் கூறியே அறத்தின் இயல்பைப் புலட்படுத்துகின்றார். கல்வியைப் பற்றிக் கூறப் புகுந்த வர் கல்லாமை பற்றியும் கூறுகின்றார். நட்பைப்பற்றிக் கூறுபவர் கூடாநட்பைப் பற்றியுங் கூறுகின்றார். செங்கோன்மையைப் பற்றிக் கூறுபவர் கொடுங் கோன்மையைப் பற்றியுங் கூறுகின்றார். செல்வத்தைப் பற்றிக் கூறுபவர் நல்குரவு பற்றியுங் கூறுகின்றார்.

பண் புடைமை பற்றிக் கூறுபவர், கயமையைப் பற்றியுங்

  1. Nicomachean Ethics.

வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் 13 கூறுகின்றார். மெய்யுணர்வு பற்றிக் கூறுபவர் பேதைமை பற்றியுங் கூறுகின்றார்.”

ஆயினும் திருக்குறள் கடைப்பிடிக்கும் விளக்க முறைக்கும் அரிஸ்டாட்டில் கடைப்பிடிக்கும் விளக்க முறைக்கும் பெரியதொரு வேற்றுமையுண்டு. மிகுதிக்கும் குறைவிற்கும் நடுவில் அறத்தை நிறுத்துவதால் அறத்தின் உயர்வைக் குறைக்கின்றார் அரிஸ்டாட்டில் என்று ஒழுக்க இயல் அறிஞர் பலர் குற்றம்கூறியிருக் கின்றனர். அரிஸ்டாட்டில் அறத்திற்கும், மறத்திற்கும் நிறையளவு வேற்றுமையே காட்டியிருக்கின்றார் என்பர் கான்ட் (1880). அறம் என்பது எடுத்துக் கொண்ட பண்பின் உயர் ந்த நிலையாகவே எப்பொழுதும் இருத்தல் வேண்டும். திருக்குறளோ அறப்பண்பிற்கு எல்லை வகுக்காது அறத்தைச் செயலின் நிறைவாகவும் உயர்ந்த உச்ச நிலையாகவும் காட்டுகின்றது.

ட அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் 9! வரம் ம் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் '' —596 “மேல் உலகம் இல்லெனினும் ஈதலேநன்று 1 222

“ ஒப்புரவினால் வருங்கேடெனின் அஃது ஒருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து” 220

  1. THE MORAL VIRTUES BY ARISTOTLE

Vices of Vices of deficiency Excess action Mean சப் Foolhardiness Courage Cowardice Licentiousness Temperance Insensibility Prodigality Liberality llliberality Vulgarity Magnificence Meanness Vanity Highmindedness Little mindedness Boastfulness Truthfuliness Self-depreciation Buffoonery Wittiness Boorishness Obsequiousness Friendliness Quarrelsomeness Bashfulness Modesty Shamelessness

Envy Righteousness Malice.

14 வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும்

எனவே இப்பண்புகளுக்கு எல்லை வதத்தார் அல்லர் திருவள்ளுவர். தன்னை விற்றுக்கூட ஒப்புரவு செய்தல் வேன் டுமென்று அரிஸ்டாட்டில் எந்த இடத்திலேனும்

கூறியிருக்கமாட்டார்.

இவ்வாறே வாய்மை என்பது மிகைபடக் கூறலுக் கும் தன்னையே இகழ்வதற்கும் இடையில் தோன்றும் பொய்யாமையெனும் பண்பு என்பர் அரிஸ்டாட்டில். வள்ளுவ ரா வாய்மையின் உச்ச நிலைமையைக் கூறி னாரே யொழி! அஃது இரு எதிர் பண்புகளுக்கு நடுவிலி யங்கும் என்று வரைந்தார் அல்லர்.

“பொய்யாமை அன்ன புகழிஷ்லை எய்யாமை

எல்லா அறமும் .தரும் ? --296

[ச

மீண்டும் பிளாத் தோவைப் பற்றிச் சிந்திப்போம். அரசைப்பற்றிப் பல்லாற்றாலும் ஆராய்ந்து அரசின் இயல்பினையும், பண்புகளையும் வரையறுத்துக் கூறியவர் பிளாத்தோ. நாற்பது ஆண்டுகள் கொண்ட அறிஞனாகக் “ குடியரசு” (Republic) எனும் நூலை எழுதினார், எழுபது ஆண்டுகள் கொண்ட முதியோனாகச் “சட்டங்கள் ” (Laws எனும் பெரும் நூலை யாத்தார். குடியரசு எனும் நூல் பூட்கை அரசு ஒன்றினைத் தீட்டுகினறது. ஆனால் “சட்டங்கள் " எனும் நூலில் பிளாத்தோ பிற்காலத்தில் பெற்ற அனுபவங்களின் பயனாகக் :' குடியரசு" எனும் நூலில் காணட்படும் சில துறைகளை நீக்கி நடைமுறை யில் ஆற்றுப்படுத்தக் கூடிய அரசு ஒன்றின் திட்டத்தை வகுத்தனர்.

பிளாத்தோவினுடைய அரசு குலத்தவர் சிலரின் தொகையாட்சி (0112801791. தனிமக்கள், தம்முடைய இன் பத்தையும், மன நலத்தையும், ஆளுமையையும் (personality! அரசு அடையும் நலங்களின் வழியாக அடைகின்றவர். பிளாத்தோவும், அரிஸ்டாட்டிலும் அரசியலை ஒழுக்க இயலின் பகுதியாகவே கருது

வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் 15 கின்றனர். அரசுத்துறை இயல் (Government) குடிகளி டம் நல்லொழுக்கத்தை உண்டாக்க முயலவேண்டும். ஒழுக்கமுள்ள மக்களாகவும் உயர்ந்த செயல்களில் ஈடுபடும் குடிகளாகவும் ஆக்கும் நோக்கம் அரசியற் றுறையின் நோக்கம் என்பார் அரிஸ்டாட்டில். ' மக்கள் தமக்கு வேண்டிய அறத்துறை நலன்களை அறியார். எனவே அரசு அவர்களைச் செம்மையான நெறியில் வற்புறுத்தி நடத்த தல் வேண்டும்” என்பார் பிளாத்தோ. வள்ளுவரோ அரசுக்கேற்ற அறத்தைக் கூறுங்கால், அரசு அறத்தை வலியுறுத்திக் கற்பித்தல் வேண்டும் என்பதுடன் அறமற்ற அரசில் தனி மக்களும் அறத்திற் குன்றுவர் என்றே கருதுகின்றனர். “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்! - 548 ': ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் '' --560 8

பிளாத்தோவின் அரசில் மக்களினுடைய தனி வாழ்க்கைக்கு (1௩பந்ரர்பபகl 11428) வாய்ப்புக்களில்லை, திருக்குறளினுடைய அரசு முடியாட்சி. முடியாட்சியாயி னும் தனிமக்களுக்குத் தம்மில்லத்திலும், தொழிலிலும், வாழ்க்கையிலும் வேண்டிய உரிமைகள் உள. அவற்றைக் கொண்டு இல்லறத்தை இனிது நடத்துகின்றனர் மக்கள், பிளாத்தோவின் அரசியலில் மக்களுக்குத் தத்தம் குடிமை நிலைக்கு ஏற்றவாறு தொழில்கள் விதிக்கப்படுகின் றன. காவலர் என்னும் முதல் வகுப்பி னர்க்குத் தமக்கெனச் சிறப்பான சொத்துரிமைகளில்லை. மனை வியரும், கணவரும், பிள் ளைகளும் பொதுமையாகவே பொது இல்லங்களில் வாழ்ந்து வருவர். ஆடவர், குறிக்கட்பெற்ற நாட்களிலேயே பெண்டிருடன் கலந்து கொள்வர். உயர்ந்த பண்புகளுள்ள ஆடவர் உயர்ந்த பண்புகள் படைத்த பெண்டிருடன் அரசுகுறித்த காலத் தில் கலந்து, உயர்ந்த பண்புள்ள சிறுவரைப் பெற

16 வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும்

முயல்வர். குழந்தைகள் அரசியற் செவிலிகளால் யார் தம் பெற்றோரென அறியாது அரசியற் குழந்தைப் பாசறைகளில் வளர்ந்து வருவர். அரசின் சேவையும், பணியும் அரசிற்காக நன்மக்களைப் பெறுவதுமே குடிகளின் இலட்சியமென்று அறைகின்றார் பிளாத்தோ. மக்களைப் பெரும்பாலும் குடிகளாகவே (பதற) கருதி னர் கிரேக்கர். வள்ளுவரோ, மக்களைத் தனி மக்களாகவே ([ndiஏidயals) கருதி அத்தனிமக்கள் குடிகளின் கடமை களைப் பொது நலத்திற்காகவும் நிறைவேற்ற வேண்டு மென்று வலியுறுத்தியுள்ளார். திருக்குறள் ஆட்சியில் அரசின் அடிமைகளாக அமைவார் அல்லர் மக்கள். தன்னுடைய அரசு வலிமை பெறுவதற்கு மனை வாழ்க்கை யையும், மக்களால் வரும் இன்பத்தையும் அழிக்கின்றார் பிளாத்தோ. காட்டை அமைத்து அது நாடாகும் என்று தம்புகின்றார் பிளாத்தோ. திருவள்ளுவரோ தம் அரசில் களவியல் இன்பம், கற்பியல் இன்பம், மக்கட்பேறு, செல்வம் ஈட்டுதல், விருந்தோம்பல் போன்ற இன்பங் களுக்கும், அறங்களுக்கும் பெரும் இடம் வகுத்து உள்ளார். மனையற வாழ்க்கையை அரசியற் கட்டுப் படுத்தக் கூடும் என்று ஒருகாலும் உடன்பட்டிருக்க

மாட்டார் வள்ளுவர் *

  1. பிளாட்டோவின் அரசியல், வெ. சாமிநாத சர்மா, ஜோதி, சென்னை, 1956, றற 259, 254 :

ஸாக். குழந்தைகளைப் போஷித்து வளர்ப்பதற் கென்று அரசாங்கத்தார் சில உத்தியோகஸ்தர்களை நிய மிக்கவேண்டும். ஆண்களும், பெண்களும் இந்த மாதிரி யான உத்தியோகஸ்தர்களாக இருக்கலாம், இந்த உத்தி யோகஸ்தர்கள் வரத்தில் பிறக்கிற குழந்தைகள் - அவை ஆனாயிருந்தாலும் பெண்ணாயிருத்தாலும்-அனை த்தையும் ஒப்புவித்துவிடவேண்டும். இங்ஙனம் தங்களிடம் ஒப்பு விக்கப்பட்ட குழந்தைகளில் எந்தெந்தக் குழந்தைகள், ராஜ்யத்தின் பிற்கால க்ஷேமத்திற்கு எல்லாவகையிலும் தகுதியுடையன வாயிருக்கின் றன வென்று இந்த உத்தி யோகஸ்தர்கள் பரிசோ தனை செய்துபார்த்து அவற்றைத் தனியாகப் பிரித்து, தனியான சில தாதிமார்களிடம் ஒப்

வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் 17 9

பிளாத்தோவின் அரசியலில் வகுப்பு வேற்றுமைகள் பல உள. குடிகளை மூன்று வகுப்புகளாகப் பிரிக்கின்றார் பிளாத்தோ. காவலர் வகுப்பு, படைவிரர் வகுப்பு, தொழிலாளர் வகுப்பு. குடிகள் தம் பிறப்பால் இவ் வகுப்புக்களுக்கு உரியவராகின் றனர். பொன்னை (பொற் குணங்களை)த் தம் உடலமைப்பில் மிகுதியாகக் கொண்ட வர் பொன் வகுட்பிலிருக்கின் றனர் என் றும், வெள்ளி யைத் தம் உடலமைப்பிற் கொண்டவர் வெள்ளி வகுப்பிற் சேர்ந்தவர் என்றும், இரும்பையும் பித்தளையையும தம் உடம்பிற் கொண்டவர் பித்தளை, இரும்பு வகுப்பிற் சேர்ந்

படைக்கவேண்டும். இந்தத் தாதிமார்கள் ராஜ்யத்தின் (நகரத்தின்) குறிப்பிட்டதோரிடத்தில் தனியாக வசிக்க வேண்டும், நல்லவையென்று பொறுக்கியெடுக்கப்பட்ட குழந்தைகளை நல்லவிதமாக வளர்ப்பது இவர்களுடைய பொறுப்பு. இங்ஙனம் பொறுக்கியெடுக்கப்பட்ட குழந் தைகள் போக, மற்றக் குழந்தைகளை அதாவது குறை பாடுடைய பெற்றோர்களுக்குப் பிறக்கிற குறைபாடுகளை யுடைய குழந்தைகளை ஜனங்களுடைய கணணுக்குப் படாத ஏதேனும் ஓரிடத்தில் ரகசியமாகக் கொண்டுமபாய் விட்டுவிடவேண்டும்.

கிளா. நமது ராஜ்யத்தின் போர்வீரர்களுடைய சந்ததி சிறந்ததாயிருக்கவேண்டுமானால் இப்படித்தான் செய்யவேண்டும்.

ஸாக், குழந்தைகளைப் பொறுக்கி யெடுத்து தாதி மார்களிடம் ஒப்படைப்பதற்காக நியமிக்கப்படும் உத்தி யோகஸ்தர்களைப்பற்றி மேலே சொன்னோமல்லவா ? அந்த உத்தியோகஸ்தர்கள், குழந்தைகள் சரியான போஷணையில் இருக்கின்றனவா வென்பதை மேற் பார்வை செய்யவேண்டும். அவ்வப்பொழுது தாய்மார் களை அழைத்துவரச் செய்து குழந்தைகளுக்குப் பாலூட்டு விக்கவேண்டும். ஆனால், எந்தத் தாய்க்கும், தன் னுடைய குழந்தை இது என்று தெரியா திருக்கும்படி செய்யவேண்டும். போதிய தாய்மார்களில்லாவிட்டால் செவிலித் தாய்மார்களை வைத்துக் குழந்தைகளுக்குப் பாலுண்பிக்கவேண்டும். ஆனால், எந்தத் தாயும். குழத்

18 வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும்

தவர் என்றும், வகுப்பு வேற்றுமைக்குச் சமாதானங் கூற முடியும் என்பர் பிளாத்தோ. சிலவேளைகளில் பித்தளைப் பெற்றோர்களுக்குப் பொன்கலந்த புதல்வன் தோன் றக் கூடும். வெள்ளி வகுப்புப் பெற்றோர்க்குப் பித்தளைப் புதல்வன் இருத்தல் கூடும். அவ்வாறு வகுப்பிற்கு மாறு பட்ட குணங்களுடன் புதல்வர் தோன்றுவாராயின் குணங்களுக்கு ஏற்றவாறு அப்புதல்வர் உயர் வகுப்பிற்கு ஏறவும் அல்லது தாழ்ந்த வகுப்பிற்கு இறங்கவும் வேண்டும். இத்தகைய வகுப்பு மாற்றம் அரிதாகவே நிகழக்கூடும். ஆனால் வகுப்புகளிற் பிறந்தவர்கள் பெரும்பாலும் அந்தந்த வகுப்புகளிலேயே வாழ்ந்து தொழிலாற்றி உயிர் துறப்பர். தொழிலாளர் வகுப்பைச் சேர் ந்தவர்களுக்குக் குடியுரிமைகளில் ௯; அன்னார்க்குக் கல்வியுரிமைகளும் இல்லை; ஒழுக்க வாழ்க்கைக்கு உரிய வர்களாகவும் கருதப்பட்டிலர். ஒருவன் தன் தொழிலி லிருந்து பொருள் வருவாய் பெறுவானாயின் அவன் அறநெறு வாழ்க்கைக்கு உரியனல்லன் என்பர் அரிஸ் தோத்தில் ?

தைகளுக்குப் பால் கொடுக்கிற விஷயத்தில் அதிக நேரரஞ் செலவழிக்கக் கூடாதென்று கணடிப்பான விதி ஏற் படுத்தவேண்டும் குழந்தைகளை இரவிலும பகலிலும் அவ்வப்பொழுது தாதிமார்களும் மற்ற வேலையாட்களும் கவனித்துவரச் செய்யவேண்டும்,

  1. ‘You are brothers, yet God has framed you differently. Some of you have the power of command, and in the composition of these he has mingled gold, wherefore also they have the greatest honour; others he has made of silver, to bz auxiliaries ; others again who are to be husbandmen and crafts men he has composed of brass and 179ற.'' The barriers between the classes are not, however, absolute, nor is the hereditary principle in legislation regarded as infallible, for Plato immediately adds: “But as all are of the same original stock, a golden parent will sometimes have a. silver son, or a silver parent a golden son And

வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் 19 திருக்குறளின் மனப்பான்மையோ உலகளவு பரந் துள்ளது. குடிமையையும், குலத்தையும் போற்றினா ராயினும், கல்வியையும், உயர்வையும், ஒழுக்க வாழ்க்கை யையும் எவர்க்கும் மறுத்த ஈரல்லர் திருவள்ளுவர். “ மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கிழல்லார் கீழல் லவர் ” --978 என்று ஒரு சாதிக்கொரு ஒழுக்கம் என்பதை மறுத்தார். மேலும் மக்கள் தாம் பிறந்த குடியை உயரச்செய்தலே அவர்க்கு ஆண்மையும், சிறப்புமென்றும் வரையறுத்தார். “ நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த வில்லாண்மையாக்கிக் கொளல் !'' 1026

வகுப்பு வேற்றுமைகளைக் கடந்து மக்களனை வரும் மேன்மேலும் முன்னேற்றம் அடைதல் கூடுமென்றும், அவர்களுக்கு முல் னோரிடமிடுந்தும், சூழ் நிலையில் இருந்தும் குணங்கள் சில வந்தடைந்தாலும, மக்கள் தம் முயற்சியால், அத்தீய குணங்களை அகற்றுதல் கூடு மென்றும் வள்ளுவர் வற்புறுத்துகின் றனர்.

God proclaims asa first principle to the ruoers, and above al] else, that there is nothing which they should $0 anxiously guard, or of which they areto be such food guardians, as of the purity of the race. They should observe what elements mingle in their offspring; for if the son of a golden or siver parent has an admixture of brass and iron, the nature orders a transposition of ranks, and the eye of the ruler must not be pitifu{ towards the child because he has to descent in the scale and become a husbandman or artisan just as there may be sons of artisans who having an admixture of gold or silver in them are raised to honour, and become guardians or auxiliaries, For an oracle says that when a man of brass or iron guards the state, it will be destroyed.

From: “The Doctrines of the Great Educators" - by

Robert R. Rusk Macmillan, London, 1952. Pages 11 & 12.

20 வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் “ பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள் ” 751 எனும்பொழுது பொருளியற்றுறையின் நோக்கமே ஒரு பொருளாகக் கருதப் பெறாதவரையும் உயர்நிலைக்கு உயர்த்துவதே யென்று வியப்புத்தரும் இக்காலத் தன்மையுடன் கூறினார் வள்ளுவர்.

10

பிளாத்தோவும், அரிஸ்டாட்டிலும் தம் காலத்து கிரேக்க நாட்டில் இருந்த நகர்-அரசுகளை எடுத்துக் காட்டாகக் கொண்டு தம் அரசியல் தத்துவங்களை வரைந்தனர். கிரேக்கரே பண் புடை யவர் கள். ஏனையோர் பண்பற்றவர்கள் என்பதம் அவர்களுடைய கொள்கை யாக இருந்தது. அரசின் தலைநகர் கடலிலிருந்து ஐந்து கல் அப்பால் ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதும் அரிஸ்டாட்டிலின் கருத்த, துறைமுகத்திற்கு வரும் வேற்றுநாட்டார் தம் தொடர்பால் குடிகளைக் கெடுக்கக் கூடுமென்ற அச்சத்தால். வள்ளுவரோ உலகின் எத் திசையிலும் அமைக்கக்கூடிய அரசியலைத் தீட்டி, உலகம் அனை த்தையும் ஒன்றுபடுத்தி மக்கள் அனைவரையும் ஒரு நாட்டினர் ஆச்குகின்றார்,

“யாதானும் நாடாமால் ஊராமால் என் னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு” -397 வாழ்க்கை முழுவதும் கல்வியில் ஈடுபடுவதற்குக் காரணம் கல்வியின் தன்மையுமன்று, விரிவுமன்று, ஆழமுமன்று, நலமுமன்று, எண்ணத்தின் பெருமையுமன்று, தொகையு மன்று, ஒழுக்கத்தின் அகலமுமன்று - மக்களும், நாடு களும், பல பண்புகளும், பல மொழிகளும், ஞாலத்தில் உள்ளதால் இவையனை த்தையும் கற்பதற்கு வாழ்நாள் போதா. நாடுகள் அனைத்தும் என் நாடு, ஊர்கள் அனைத்தும் என் ஊர்கள், எனவே அவற்றைப்பற்றிப் பயிலக்கூடும் கல்விக்கு எல்லையில்லை எனும் * யாதும் ஊரே யாவருங்கேளிர்” மனப்பான் மையைத்தான் வள்ளு வர் தம் ஒப்பற்ற நூவில் வலியுறுத்துகின்றார்.

வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் 21 11

பிளாத்தோவும், அரிஸ்டாட்டிலும் ஒழுக்க இயல் புக்கு அளவுகளையும், சட்டங்களையும் ஆராய்கின் றனர். மக்களின் பகுத்தறிவுதான் அளவா ? இன்றேல் சமூகத் தில் வழங்கும் குறிக்கோள்கள் சட்டமா ? அறிவைப் பயள் படுத்திக் கொள்ளுகின்ற உயர்ந்த மக்களுடைய ஒழுக்கமும் அவர்கள் கடைப்பிடிக்கும் நற்பண்புகளும் செயள்களும்தாம் ஒழுக்கத்திற்குச் சட்டமாக ஒருவாறு அமையவேண்டுமென்பர் அரிஸ்டாட்டில். அவ்வாறே துளக்கற்ற காட்சியவர், (699) உலகத்தார் (850) உர வோர் (196) மாசற்றார் (106, 911, 312, 646, 800) கற்று அறிந்தார் (999), நீரவர் (782) சான்றோர், (197 656, 657) நல்லர் (828), தூய்மையவர் (711, 721) மேலாயவர் (1016) என்பவரின் நூல்களும் செயல்களும்தாம் ஒழுக்கத் திற்குச் சட்டங்களைத் தருவன என்றே வள்ளுவரும் கூறுகின்றார். அரிஸ்டாட்டில் தனிமகன் தத்தம் சூழ் நிலைக்கும், தத்தம் அரசிற்கும் ஏற்ப ஒழுக்கத்தை உருவாக்கிக்கொள்ளல் கூடுமென்று ஒப்பிட்டு ஒழுக்க முறையை ஆ ரிக்கின்றார் (Relative Ethics. மக்கள் சூழ்நிலைக்கேற்றவாறு ஒழுக்க இயல் மாற்றம் அடையும் எனில் ஒழுக்கத்தில் மேன்மையும், முன்னேற்றமும் எய்துவதற்கு இடமுமில்லை; தன் காலத்து மக்களிலும் ஒருவன் ஒழுக்கத்தில் சிறட்பதற்குச் செவ்வியுமில்லை. வள்ளுவர் இத்தகைய ஒப்பீட்டு ஒழுக் கமுறையை மேற் கொண்டார் அல்லர். எங்கும் என்றும் எவராலும் கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படைக் கொள்கைகளே வள்ளுவர் கூறும் ஒழுக்கக் கொள்கைகள். வள்ளுவர் மக்களின் பூட்கை நிலையையும், அறத்தின் வளத்தையும் இலட்சியங் களையும் தடுத்தும் வரையறுத்தும் அளவையிட்டும் எல்லை வகுத்தும் கூறவில்லை. சான்றோரும் அவர்தாம் எழுதிய நூல்களும் ஒழுக்க இயலுக்கு அடிப்படையாக இருப் பினும், அவற்றை ஆராயாது தழுவுதல் பொருந்தாது.

“ எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு" 429

22 வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும்

12

தம் காலத்தில் கற்றறிந்தவரும் மேற்கொண்ட மறச்செயல்கள் சிலவற்றை பிளாத்தோவும் அரிஸ் டாட்டிலும் ஆதரிக்கின் றனர். அவர் போற்றும் அரசியலில் அடிமை வாழ்வு இன் நியமையாததாகக் கரு கப்பட்டிருந்தது. அவர்தம் அரசில் அடிமைகள் பலரைத் தம் இல்லப்பணியாற்றவும், அரசியல் பணி யாற்றவும் உயர்ந்தோர் விதித்திருந்தனர். பத்தாயிரம் குடி உரிமைகள் உள்ள மக்களுக்கு அதென்ஸ் நகர் அரசில் இருலட்சம் அடிமைகள் பணியாற்றி வந்தனர். மேலும் குருடர்களையும், கூனர்களையும் மெய்வலி குன்றிய குழந்தைகளையும். உடம்பில் குறையுற்றுப் பிறந்த குழவிகளையும் இஞ்ஞானிகள் பொருட்படுத்தின ரல்லர். மெய்யுறுப்புக்களில் குறையுற்ற குழந்தைகளைப் பிறந்த சில நாட்களுக்குப்பின் மலையோரங்களிலும், திறந்த வெளியிலும் எறிந்து கொடிய விலங்குகளுக்கு இறையாகும்படிச் செய்யும் வழக்கத்தை ஆதரித்தனர் பிளாத்தோ, அரிஸ்டாட்டில் வள்ளுவரோ அடிமை வாழ்க்கையை எவ்வாற்றுலு* ஆ கரித்தார் அல்லர், குறளும், கூனும் மங்கல மக்களாக மாளிசையில் பணி ஆற்றுவதை சிலப்பதிகாரத்தில் காண்கின்றோம். எண்பேரெச்சமாகிய பிறட்பால் பொறியின்மை உறுப்பு இன்மை உடையோராயினும் அவை பழியாகா, ஆனால் தாம் அறித்து செய்யும் வினையே குற்றம் காண்பதற்கு இடம் கொடுக்கும்,

“ பொறியின் மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி” 617

காவலர் வகுப்பிற்கு உள்ளத்தையும் உடலையும் பயிற்சி செய்யுமாறு ஓய்வுநிலை அளிக்கின்றார் அரிஸ்டாட்டில். காவலர் பொருள் ஈட்டுதல் போன்ற கவலைக ளின் றி அரசியலில் ஈடுபடுகின்றனர். இந்த ஓய்வோ ஒழுக்கத்தில் மேம்பாடடைவதற்குக்

கொடுக்கப்பட வில்லை,

வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் 28

13

கிரேக்கரின் அரசியல், முன்னேற்றம் காணாது ஒரே தி&யில் இருக்கும் “ இயங்கா அரசு "' [Static state), வள்ளுவர் கூறும் அரசு, உயர்ந்தோர் என்றும் முன்னேற முயலும் “இயங்கும் அரசு” (ிynamic state).

பிளாத்தோ அறிவும் அறமும் ஒருபொருட் சொற்கள் எனக்கருதி ஒருவனுக்கு அதைப்பற்றிய அறிவு இருந்தால் அவ்வறத்தைக் கடைப்பிடிப்பான் என்று நினைக்கின்றார். ஆனால் அறம் வேறு; அறிவு வேறு என்று பிரித்து, அறிவிருப்பினும் மக்கள் அறியும் அறத்தைக் கடைப்பிடிக்கார் என்று வற்புறுத்தினார் வள்ளுவர்,

14

பிளா த்தோவினுடைய அரசு இவ்வுலகில் அமையி னும், அது விண்ணுலகில் இருக்கும் ஓர் அரசின் நிழலும் படியுமா ம். உண்மையான உலகம் மேலுலகிலேயே உண்டு. இங்கிருக்கும் உயிர்களும் பொருட்களும் மேல் உலகில் இருக்கும் உயிர்களின் பொருட் களின் நிழற்படம். இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு பொருளிற்கும், அவ் வுலகில் குற்றமற்ற முதற்பொருள் மூலப்பொருள் ஒன்று உண்டு. எனவே நிறைவு மேலுகத்தில்தான் உண்டு. இவ்வுலகில் உள்ளவையெல்லாம் குறைவு படைத்தவை வள்ளுவரே மேல் உலகில் இருக்கும் ஒரு அரசினைப் படம் பிடித்து இவ்வுலகில் நிறுவ முயலவில்லை. திருக் குறளின் அரசு இவ்வுலகிற்கே உரிய அரசு. திருக் குறளின் அரசினுடைய நிறைவினை இவ்வுலகிலேயே மாந்தர் அடைகில் றனர்.

கிரேச்க தத்துவ ஞானிகளின் நூல்களை வள்ளுவர் நூலுடன் ஒட்பிடுங்கால் கிரேக்க தத்துவ ஞானிகள்

24 வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும் . மெய்யுணர்வு வல்லுநர்போல் பொருளை ஆராய்கின் றனர். திருவள்ளுவரோ ஒழுக்க இயல் வல்லுநர்போல் ஆராய்ந்து ஆசான்போல் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களைக் கூறுகின்றார். ஆயினும் திருக் குறள் காட்டும் ஒழு*க இயலுக்கும் கிரேக்க நூல்கள் காட்டும் மெய்யுணர்வு போன்ற வளம்பெற்ற மெய்யுணர்வே அடிப்படையாக இருந்திருத்தல் வேண்டும்.

  1. வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும்

பிளாத்தோவும், அரிஸ்டாட்டிலும் இறந்தபின், ஒழுக்க இயலிலும், மெய்யுணர்வுச் சிந்தனையிலும் ஒரு பெரிய மாற்றம் இடம் பெற்றுள்ளது. பொருட்களின் தன்மையையும், மெய்யுணர்வின் தன்மையையும் பெரும் பாலும் ஆராயாது மக்களினுடைய செயல்முறை ஒழுக்கத்தையே மெய்யுணர்வு வல்லுநர் ஆராயத் தொடங்கினர். மக்கள் அரசினுடைய நோக்கங்களுக்குக் கீழ்ப்படிந்து இருத்தல் வேண்டும் என்று பிளாத்தோவும் அரிஸ்டாட்டிலும் வற்புறுத்தினர். மெய்யுணர்வுச் சிந்தனையைவிட ஒழுக்க இமற்பண்பு குறைந்த நிலை உடையது என்று வற்புறுத்தியிருந்தார் அரிஸ்டாட்டில். அரசினுடைய நன்மை தனிமக்களின் நன்மைக்கு உயர்ந்ததென்றும் மக்களை விட உயர்ந்த பொருட்களும் சிந்தனையும் உலகில் உள்ளன என்றும் கூறினார். கிரேக்க மக்கள், எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய அரசு ஒன்றை அமைக்கப் பலமுறை முயன்றும், அன்னார் அந்த முயற்சியில் வெற்றிபெறவில்லை. கிரேக்க நாட்டு நகர் அரசுகள் தம்முள் முரண்பட்டுப் போர் செய்ததால் தம் சுதந்திர நிலையையும் செல்வாக்கையும் இழந்தனர். எனவே, அரசின் வழியாகத் தம் நலங்களையெல்லாம் பெற விரும்பிய சிந்தனையாளர் ஏமாற்றம் அடைந்து தனி மக்களின் ஒழுக்கத்தைச் செம்மைப் படுத்துவதிலும், அரசியலாற் பெறாத நலங்களைத் தனிமக்களின் மேம் பாட்டால் பெறுவதிலும் முயன் றனர்.

இவ்வுலகில் ஞானிகள் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவர் தோன்றுவது அரிது. ஒரு சில காலத்தில் பெரும் ஞானிகள் தோன்றுகின் றனர். ஆனால் அவர் களுக்குப்பின் வழித்தோன்றல்களாக வருபவர் தம்

26 வள்ளுவரும் உரோமீய ஒழுக்க இயலும்

ஆசான் களைப்போல் அத்தனைச் சிறப்புப் பெற்றவர் களாக விளங்குகின்றார் அல்லர். கி மு ஐந்தாம் ஆரும் நூற்றாண்டுகளில் பெரும் ஞானிகள் பல நாடுகளில் தோன் நினர். கிரேக்க நாட்டில் சாக்ரெட்டிஸ், பிளாத்தோ, அரிஸ்டாட்டில், பாரசீக நாட்டில் சொ ரா வாஸ்டர், சீனத்தில் கன்பூஷியஸ், லாவோட்சே, இந்தியாவில் மகாவீரர், புத்தர், கோசாலர் போன்ற வர்கள் தோன்றினர். உலகில் பெரும் சிந்தனை முன்னே ற்றத்தையும் இயக்கங்களையும் இப்பெரியார் வளர்த்தனர்.

4

பிளாத்தோவும், அரிஸ்டாட்டிலும் காலஞ்சென்ற பின் ஸ்டாயிக் வாதம் சிப்பிறசிற் பிறந்த சேனா (20) (996-264 கி.மு. எனும் மெய்யுணர்வு வல்லுநரால் பரப்பப்பெற்றது. அதேகாலத் தில் எபிக்யூர ஸ் றய) (941-970 கி.மு.) என்றவர் கிரேக்க நாட்டில் எபிக்யூரஸ் வாதம் எனும் கொள்கையைக் கற்பித்து வந்தார். ஸ்டாயிக் வாதமும், எபிக்யூரஸ் வாதழம் அவை தோன்றிய நாடுகளைவிட இத்தாலிய நாட்டில் பெருஞ் செல்வாக்கு அடைந்தன. கிரேக்கரை உரோமர் பேரில் வென்றாராயினும் கிரேக்கருடைய சிந்தனையும் கலையும் உரோமரை வென்றன என்பர். உரோமருடைய இலக் கியமும், கவீன்கலைகளும் கிரேக்க இலக்கியத்தையும் கவின் கைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. உரோமருடைய பண்பு செயல்முறைப்பண்பு; அன்னார் தத்துவஞானிகளுக்கும் மெய்யுணர்வு வல்லுநர்களுக்கும் ரேக்க நாட்டைப் போல் இடம் கொடுக்க வில்லை. மெய்யுணர்வு வல்லுநர் தத்தம் கொள்கைகளைப் பரப்பி வருவதால் தம் நகரில் கலகங்கள் ஏற்படு கில் றன என்று பன்முறை இத்தகைய ஞானிகளைத் தம் நகரிலிருந்து

உரோமர் கடத்தின தும் உண்டு.

எபிக்யூரஸ்வாதம் கிரேச்க நாட்டில் தோன்றி இத்தாலிய நாட்டில் பரவியது. டெமொகிரிட்டஸ்

வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும் 27 (450-960 கி.மு.) என் பாருடைய அணுவாதமும் பூத வாதமும், எபிக்யூரஸ் வாதத்திற்கு அடிப்படை யாக இருந்தன. சமயத்தை எவ்வகையிலும் போற்றாத எபிக்யூரஸ், இன்பமே வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம் என்றும், இன்பமே மக்களால் பெறவேண்டிய மன நலம் என்றும் வற்புறுத்தினார். இவ்வின்பம் ஐம்புல இன்பமாக இருத்தலும் கூடும்; மனத்தின் இன்பமாக இருத்தலும் கூடும்: பகுத்தறிவின் இன்பமாக இருத்தலும் கூடும். அறம் நலத்தைத் தரும் என்று நாம் கூறும்பொழுது, அறத்தின் தன்மையில் நலமோ நன்மையோ ஒன்றும் இல்லாததால் அறத்தால் வரும் இன் பத்தை 2ய நாம் கருதுகின் றோம். இன்பம் வாழ்க்கையின் குறிக்கோளாக இருப்பது அத்துணைச் சிறப்பன்று. மன அமைதியும் நடுநிலைமையும் பற்றற்ற பான்மையுமே சிறப்பு. மக்கள் இன்பத்தையும், தன்பத்தையும் ஒரே மன நிலையுடன் பார்க்க வேண்டும். இன்பம் வருங்கால் மகிழ்வது நன்றன்று, தன்பம் வருங்கால் வருந்துவதும் நன்றன்று. எபிச்யூரல் வாதமும் ஸ்டாயிக் வாதமும் தத்தம் உயர்ந்த போதனையில் இந்த நொதுமல் தன் மையைப் பாராட்டி வந்தன. இத்தாலிய நாட்டில் எபிக்யூரஸ் வாதத்தின் பெரும் புலவராக விளங்கியவர் லுக்ரேஷியுஸ் Lucretius)

என்பவர். அன்னார் இவ்வாதத்தின் உயர் ந்த தத்தவத்தை அடி படையாகக் கொண்டு எழுதிய நீண்ட செய்யுள் '* பொருட்களின் இயல்பு !'' என்பதா தம்

De Natura Rerum. 5

எபிக்யூரஸ் வாதம் எல்லாவகை இன்பத்தையும் போற்றவில்லை. சிற்றின பங்களில் ஈடுபடுவது அழகன்று என்றும், மிகுதியாய் உண்பத.ம் குடிப்பதும் முறையன்று என்றும் சாற்றினர் எபிக்யூரஸ் வாதிகள். எபிக்யூரஸ் உண்டியைப் பொருட்படுத்தவில்லை. எனக்கு ஒரு சிர து உணவும், தண்ணீரும் இருந்தால் போதும். ஒரு சில நாட்களில் பாற்கட்டி கிடைக்கு மெனில் நான் இன்பமாக

as வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும்

வாழ்வேன்” என்றார். நட்பால் வரும் இன்பத்தை துகர்வதும், நண்பருடன் கலந்து உரையாடுவதும் இத்தத்துவ வாழ்க்கை தரும் பெரும் இன்பங்கள் என்றும் கருதினார்.

எபிக்யூரஸ் உயர்ந்த மெய்யுணர்வு அறிவியல் தத்துவங்களைப் போற்றினார் அல்லர். ஒருவன் ஹோமரின் ஓர் அடியேனும் கல்லாமல் இருத்தல் கூடும்; ஹெக்டர் கிரேக்கனோ, ட்ரோஜனோ என்று அறியாமல் இருத்தல் கூடும். ஒரு சிறித படிக்கவும், எழுதவும் அறிந்திருந்தால் சாலும் என்பது அவர் கருத்து: எபிக்யூரஸ் அறத்தையும், இன்பத்தைபும் ஒன்றாகவே கருதினர். அறநெறிக்கு மாறாக நடந்து கொள்ளுதல் தவறன்று. ஆனால் அத்தகைய ஒழுக்கம் சமூகத்தின் வழச்கத்திற்கு மாறாக இருட்பதால் சமூகச்சட்டங்களையே நாம் கடைப்பிடித்தல் வேண்டும். அவற்றை மீறுங்கால் சமூகம் நம்மைக் கண்டித்தல் கூடும் அல்லது எள்ளுதல் செய்தல் கூடும் என்று அஞ்சுகின்றோம். அவ்வச்சம் நம் மன நிலையை அழிக்கின்றது. ஆதலால் சமூக வழக்க ஒழுக்கங்களை நம் மன நிலை கலங்கா திருக்குமாறு நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.

வள்ளுவர் வினை த்தூய்மையைப் போற்றுவதுடன் மனத்தூய்மையையும் போற்றுகின்றார். நல்லொழுக்கத் தில் ஈடுபடுவதற்குக் காரணம் சமூகத்தின் கண்டிப்பும் அன்று, ஏளனமும் அன்று. அறம் முறையா தலால் அதைக் கடைப்பிடித்தல் வேண்டும், மனத்துக்கண் மாசிலனாதல் அனை த்து அறம்'" (34); “உள்ளற்க உள்ளம் சிறுகுவ'' (798). திருக்குறளிலும் முன்னர்க் கூறியவாறு ஐம்புலன்களின் இன்பம் இடம் பெறுகின்றது. ஐம் புலன்களின் இன்பமும் உண்டு, மனத்தின் இன்பமும் உண்டு. ஆனால் இன்பமும், அறமும், ஒரு பொருட்கிளவி களல்ல. ஒருவன் இன்பத்திற்காக அறம் செய்வதில்லை. அறம் செய்வதால் இன்பத்தைப் பயஞகப் பெறுகின்றான். அறத்திற்கும், இன்பத்திற்கும் இருக்கும் தொடர்பு காரண காரியத்தொடர்பு,

வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும் 29

3

எபிக்யூரியஸ் வாதம் பேதைமையையும், செல்வம் ஈட்டுதலையும், சிற்றின்பங்களையும் விலக்குவதற்குக் காரணம் அவற்றின் பொருளல்லாத் தன்மையே யாம். இவற்றையெல்லாம் மக்கள் ஒரு பொருளாகக் கருத வேண்டியதில்லை என்ற மனப்பான்மையுடன் இவற்றை விலக்குகின்றனர். ஆனால் இவ்வாதத்தில் உயர்த்த கொள்கைகளுக்கும் கடமைக்கும் அதன் செயல்களுக்கும் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்தலுக்கும் பொது நலத்துக்காக நம்மையே கொடுப்பதற்கும் இடம் இல்லை. ஒப்புரவு திஈக்குறளில் பெரிதும் இடம் பெறுகின்றது. வாழ்க்கை பிறர்க்கெனவே அமைதல்வேண்டும்.

4

திருக்குறளில் களவும் கற்பும் போற்றப்படுகின் றன. இல்லறத்தில் இனிது வாழ்பவர் விருந்து ஓம்புவதிலும், ஈகையிலும் பிற நலம் தேடுவதிலும் தம் நாட்களைக் கழிக்கின்றனர்.

சங்க காலத்தில் தமிழ் நாட்டிலும் நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர் நிலவினர் என்பது புறப்பாட் டில்(29)வரும் “நல்லதன் நலனும் தீயதன் தீமை யும் இல்லையென்போர்” என்பதனால் விளங்குகிறது. இவ் அடியைப் பரிமேலழகரும் சிற்றினஞ்சேராமை என்னும் அதிகாரத்தில் மேற்கோள் காட்டுகின்றார். “வாயுணர் வின் மக்கள் அவியினும் வாழினும் என்"(42)என்பதால் சிற்றின்ப வாதிகளைக் கண்டித்தார் திருவள்ளுவர்.

9

பற்றற்று வாழ்வதே குறிக்கோளென்று ஸ்டாயிக் வாதமும் எபிக்யூரஸ் வாதமும் கற்பித் தன. ஆயினும் மன நலம் “(80/௩௦)” இன்பமென்று கூறினர் எபிக்யூரஸ் வாதிகள், மனநலம் அறம் என்று கூறினர் ஸ்டாயிக் வாதிகள். தனி அணுக்கொள் கையை அடிப்படையாகக் கொண்டனர் எபிக்யூரஸ் வாதிகள். ஸ்டாயிக வாதி

90 வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும்

களோ உலக இயற்கைக்கு ஒற்றுமை உண்டென்றும்; உலக இயற்கைப் பொருட்கள் அனைத்தும் இவ்வொற் றுமையால் பிணிக்கப்பட்டிருக்கின் றன என்றும் கருதினர். இத்தகைய ஓற்றுமை காட்டும் உலகில் மக்களும் ஒரு பகுதி, எனவே மக்கள் இவ்வொற்றுமையைப் பாராட்டி ஒழுகுதல் வேண்டும். இவ்வொற்றுமைக் கருத்து மார்க்ஸ் ஒளரேலியஸ் என்பவருடைய சிந்தனையில் பெருந்தெளிவுடன் புலப்படுகின் றது.

“ உலகம், அதிலுள்ள கோடிக்கணக்கான பிராணி கள், உயிரற்ற வஸ்குக்கள் இவை அனைத்தும் ஒன்றுக் கொன்று பரஸ்பர சம்பந்தத்துடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும். உலகத்திலிருந்து ஒருவன் தன்னை வேறுபடுத்திக்கொண்டு வாழ்வது உடம்பில் ஒரு கொப்புளம் அல்லது பரு உண்டாவது போலாகும். சரீர சம்பந்தம் இருந்தும் அந்தச் சரீரத்தின் அமைப்பில் சரியாய்ச் சேராமல் நோய் இழைப்பது கொப்புளம் அல்லது புண். ஒருவன் உலகத்திலுள்ள ஜீவராசி களுடன் ஐக்கியப் படாமல் தன்னை வேறுபடுத்திக் கொள்வதும் ஆத்மத் துரோகமாகும். இந்த உலகத்தில் ஒரு பாகமாகிய எனக்கு நேரிடும் எந்த சம்பவத்தைக் குறித்தும் நான் வருத்தப்படக்கூடாது. வருத்தப் பட்டால் உலக அமைப்பில் சேருவதற்கு இணங்காமல் அதற்கு இடையூறு விளைவித்ததைப் போலாகும். உலகம் முழுவதும் அடங்கியுள்ள பராசக்திக்கு அது துரோகமாகும். ஒருவனைத் துவேஷித்தாலும் அல்லது ஒருவன் மேல் கோபங்கொண்டு தீங்கு செய்ய நினைத்தாலும் அது உலகத்தினின்று வேறுபடும் குற்றமாகும் நேர்ந்த இன்பத்தினலாவது துன்பத் தினாலாவது மன நிலை கெட்டால் அதுவும் துரோகமாகும்.

கபடம், பொய், மோசம் இவை கலந்த பேச்சும் செயலும் துரோகமாகும்.”

1, Marcus Aurelius, ஆத்துமசிந்தனை (trans, by 0. Raja- gopalachari).

வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும் 91

நம் இயற்கை உணர்ச்சிகளும் அறம் அல்ல.' உள்ளக் கிளர்ச்சிகளும் அறம் அல்ல. எனவே, இவ்வுள்ளக் கிளர்ச்சிகளையும், உணர்ச்சிகளையும் நாம் அடக்குதல் வேண்டும் பற்று இருப்பதால் நாம் தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகின்றோம். எனவே, பற்றகள் அனைத்தையும் விலக்கவேண்டும். இரக்கமுள்ளவனும் உருக்கமுள்ளவ னும் இரக்கத்தையும் உருக்கத்தையும் களை யவேண்டும். ஏனெனில் இரக்கமுள்ளவன் இரக்கத்தின் பொருட்டு திதிக்கும், நடுநிலைமைக்கும், மனத்திற்கும் மாறாக நடத்தல் கூடும். செல்வமென்பது யாது என்று சேனோே வினவுகின்றார். பற்றுகள் இல்லாமையே செல்வம் என்பது அவர் துணிபு.”

ஸ்.டாயிக் வாதம் வற்புறுத்திய உலக ஒற்றுமையும் உயிர் களின் ஒற்றுமையும் திருக்கு றளில் நன்கு துலங்கு கின்றது. ஆனாள், இவ்வுலக ஒற்றுமையும், மக்களின் ஒற்றுமையும் மக்கள் தம் முயற்சியால் செம்மைப்படுத்தல் கூடும் எனும் கருத்தும் திருக்குறட்பாக்களில் இன்னும் தெளிவாகக் கூநப் பட்டிருக்கின றது. முன்னமே இயற்கையால் நிலை நிறுத்தப்பற்ற ஒற்றுமையைத் தழுவுவது அன்று திருக்குறள். மேலோர் இவ்வுலகில் விரும்பும் ஒற்றுமையை உருவாக்கிக்கொண்டு செல்வதே திருக்குறளின் அற முயற்சி. திருக்குறளில் அன்பும், அறமும், ஒட்புரவும் இவ்வொற்றுமையை உருவாக்கு கின்றன. திருக்குறளில் உழைப்பைபற்றிக் கூறிய கருத்துக்களினும் முயற்சியைப்பற்றிக் கூறிய கருத்துக் களே பெரும்பான்மையும் சிறந்தன.

'* இன்பம் விழையான் இடும்பை இயல்பென் பான்

துன்பம் உறுதல் இலன் :' --628

6

ஸ்டாயிக் வாதிகள் தம்முடைய வாதத்திற்கு எடுத்துக்காட்டாக இலட்சிய மனிதனின் பண்புகளைத்

  1. See Albert Schweitzer, Civilization anc Erhicr, Adan & Charles Black, London, 1949, pp. 35 ff.

92 வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும்

தீட்டுகின்றனர். அவர்களுடைய இலட்சிய மனிதன் மார்க்ஸ் ஒளரேலியஸ், செனெகா, எப்பிக்டேற்றஸ் போன்ற பெரும் ஞானி. அவர்களின் ஞானி நடு திலைமையையும், மனங்கலங்காமையையும், தொது மல தன்மையையும் சிறப்பாகக் கொண்டவன். அவன துன்பத்தால் வருந்துவதும் இல்லை; இன்பத்தில் மகிழ்வதம் இல்லை. அவன் பற்றுக்களை அறுப்பவன்। தீயவை செய்யா தவன். உயிர் துறப்பதை அஞ்சா தவன். இடுக்கண்னால் இடர்ப்படாதவன். இவ்வாறு திருக்குற ளும் ஓர் எடுத்து,க்காட்டால் மனிதனின் ஆகவேண்டிய இலட்சியத்தைக் கூறுகின்றது. அவன்பெயர் சான்றோன். இவ்வுலகம் உண்டெனில் அது சான்றோர் இருப்பதால் உண்டு. ஓர் ஊர் வாழ்வதற்கு ஏற்ற இடமாக வேண்டு மாயின் அங்கே சான்றோர் பலர் இருத்தல் வேண்டும். சான்றோர் தம் பண்புகளில் குன்றுவாரெனில் உலகமே தன் தாங்கும் தன்மையில் குன்றும். ஸ்டாயிக் வாதி களின் படி அவர்களுடைய இலட்சிய புருஷர் ஒரு சிலரே. அச்சிலர் தனிமையாகத் தம் இல்லங்களில் வாழ்ந்து வருபவர். திருக்குறளின் சான்றோர் பலர், ஒவ்வொரு மகனும் சான்றோனாகுதல் கூடும். அவன் அவ்வாறு ஆவ?த கல்வியின் நோக்கம். ஒவ்வொரு தாயும் தன் மகன் சான்றோனாகுதல் கூடும் என்று எதிர்பார்ப்பாள். சான்றோன் ஆக்குதல் ஒவ்வொரு தந்தைக்கும் கடனாகும். ஸ்டாயிக் வாதியாகிய ஞானிக்கும் தமிழ்ச் சான்றோனுக் கும் ஒற்றுமைப்பண் புகள் பலஉள, இருவரும் அடக்கமும் நடுநிலைமையும் உடையவர். இருவரும் புறங்கூறார், பயனில சொல்லார், வெகுளார், நிலையாமையுணர்வார், உயிர் துறக்க அஞ்சார், மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை படைத்தவர். ஆயினும் உரோமைய ஞானி வாழ்க்கையிலும், உலகிலும், சமூக முன்னேற்றத் திலும் தமிழனைப்போல் அத்துணை ஈடுபாடு கொண்டவ னல்லன். உரோமைய ஞானி துறவி போல் தனியே காணப்படுகின்றான் தமிழ்ச் சான்றோன் இல்லறப்பண்

98 அளிக்

2. வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும்

புடையானாக மக்கள் நடுவில் காட்சி கின்றான்.3

இவ்வாறு பல சமூகங்களில் குறிக்கோட் பண்புகள் எல்லாம் உருவெடுத்த மகனைப் போற்றுவது வழக்கு. 3. See, E Vernon Arnold, Roman Stoicism, Kegan Paul, London, 1958 ந. 297-298:

“The founders of Stoicism never doubted that wise men had existed and did exist; they looked forward toa time not far distant when there should be a Cosmopolis in which every citizen should be wise. This robust behef was not maintained by their successors. According to Chrysippus 0019 one of two wise men have ever existed; and he expressly denies that he himself or any of his acquaintance are amongst the number. The Stoics of the transi- tion period avoided the topic as troublesome; and their opponents naturally pressed it on them all the more, Zeno had said ‘It is reasonable to honour the gods: It is not reasonable to honour the non- existent: therefore the gods exist’. This was now parodied: ‘It is reasonable to honour wise men: it is not reasonable to honour the non-existent; ‘therefore wise men exist.’ If this argument was unsatisfactory. as we are told, to the 500105, because they had not yet discovered their wise man any= where, we are not surprised to find that sometimes they refer him to the golden age, at other times convert him into an ideal. The Stoics under the Roman principate re-affirmed vigorously the exis- tence of the wiseman. Seneca however admits that his appearance is as rare as that of the phoenix, and altogether disclaims any such character for himself individually. Epictetus is far more true to the spirit of the old doctrine. when he not only abstains from any morbid depreciation of his own character, but also urges his peoples never to give up the Hope of reaching perfection.”

$4 வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும்

பொதுமக்கள் இத்தகைய இலட்சியத்திலிருந்து எவ்வாறு தாமும் தம் வாழ்க்கையை அமைக்கக் கூடும் என்று கற்றுக்கொள்கின்றனர். பிளாத்தோ வினுடைய அரசில் ஞானியும் அரசனும் ஆகியஒரு வன் இலட்சியமாகின்றான் உரோமருடைய அரசில் பண்பும் சொல்வன்மையும் படைத்த வழக்கறிஞன் இலட்சிய புருஷன். இங்கி லாந்தின் இடைக்காலத்தில் கல்விபெற்ற பெரு நிலக் கிழவன் இலட்சிய புருஷன். இடைக்கால ஐரோப்பாவில் கவின் கலைகளில் ஈடுபடும் போர்வீரன் இலட்சிய புருஷன். தமிழ் உலகிலோ சான்றோன் இலட்சிய புருஷன். சொல்லிலும் கருத்திலும் உரோ மிய ஸ்டாயிக் வாதிகளின் * வறர்ஸ5$ '” மனிதனுக்கும் தமிழ்ச் சான்றோ னுக்கும் ஒற்றுமை உண்டு. சான்றாண்மை என்பது எல்லா நற்குணங்களும் நிறைந்தது (perfactus) எனப் பொருள்படும் சான்றோனும் எல்லாம் நிறைந்தவன் .* 1

ஸ்டாயிக் வாதிகள் புதியதொரு பண்பையும் ஒழுக்க இயலில் சேர் த்துக்கொண்டார்கள். மக்கள் பல காலமாக ஒழுக்க இயலைப்பற்றிச் சிந்தித்தும் ஒழுக்க இயலில் மேன்மேலும் உயர் தல் கூடும் எனும் கருத்தை விளக்கவில்லை. உரோமிய ஸ்டாயிக் வாதிகள் அக் கருத்தை மேல் நாட்டு ஒழுக்க இயலில் முதல் முதற் கூறி விளக்கினர்.

நல்லொழுக்கத்தில் முன்னேறுவது, சமூகம் பல காலமாக அடைந்த ஒரு கருத்தாகத் திருக்குறளில் இடம் பெறுகின்றது.

இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு” ௨-185

“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை'' --197

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் '' 596

ஸ்டாயிக் வாதிகள், கடமை எனும் கருத்தையும் நன்கு விளக்கினர். ஒழுக்கச் சட்டத்தைக் கடைப்

  1. See Sir Alexander Grant, Aristotle’s Erhics,

வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும் 94 பிடிப்பது கடமையாகும். எனவே, மக்களை நல்ல ஒழுக்கத்தில் கட்டுப்படுத்தும் அதிகாரம் சமூகத்தில் இருந்து வருவதில்லை. வழக்கமென்று உறுதி பெறுவது இல்லை. அறத்தைச் செய்வது மனிதனின் கடமை. திருக்குறளிலும் கடமை போற்றப்படுகின் றது. நல்ல ஒழுக்கத்தால் செல்வம் வருதல் கூடும்: உயர்ந்த புதல்வர் தோன்றுவர் ; புகழ் அமைகின்றது. ஆயினும், இப்புகழின் பொருட்டு மனிதன் நன்றாக ஒழுகுவதிலலை. ஆனால், கடமையும் அவன் அறத்திற்குக் கா ரணமன்று. முறைமையுமன்று அறத்தின் தன்மையே காரணம் - அற ம அறஞ்செய்ய வற்புறுத்துகின் றது. மேல் உலகம் இல் லெனீனும் ஈதலே நன்று. (222) “* இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்

அறவிலை வணிக னாயலன் பிறரும்

சான்றோர் சென்ற நெறியென

ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே '' (புறம்: 194)

8

பற்றறுத்த நொதுமல் தன்மை ஸ்டாயிக் வாதத்தின் அடிப்படை. ஞானி பிறருடைய துன்பங்களை க் கண்டு துன்பம் அடைவது முறையன்று. அவனுடைய! உறுதி யும், அவன் தொதுமல் தன்மையும், அமைதியும் எக் காரணம் பற்றியும் கலக்கமடைதல் ஆகாது. சாவினை வரவேற்றனர், ஸ்டாயிக் வாதிகள். சாவால் தாம் தீங்கு அடைவதாகக் கருதீனர் அலர். இறப்பது மக்களுக்கு இயல்பு. எனவே அச்சத்துடன் இறப்பதை எதிர் பார்த்தல் கூடாது. தற்கொலை செய்து கொள்வதையும் ஸ்டாயிக் வாதிகள் பொருட்படுத்தவில்லை. மானமாக மக்கள் வாழமுடியாதெனில் அன்னார் தாமே உயிரைத் துறத்தல் கூடும். செனேகா தன்னுடைய கடிதங்களில் அடிமைகள் தம் அடிமைத் தன்மையையும், கொடுமையை யும் தாங்கமுடியாது, பல்வேறு யுக்திகளால் உயிர் துறந்ததை எடுத்துக்காட்டாகக் கூறி அடிமைக்கு இத்தகைய துணிவு உண்டெனில் உயர்ந்த மக்களுக்கு எத்தகைய துணிவு வேண்டுமென்று கூறுகின்றார்.

36 வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும்

'* மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் '' . 969 வடக்கிருத்தல் எனும் வழக்குடன் இக்குறட்பாவிற்தப் பொருள் கொளல் நலம். கோப்பெருஞ்சோழன்

போன்றவர்கள் மனத்தையும் ஐம்புலன் களையும் அடக்கி நடத்தும் இத் துறவு மனப்பான்மையை, ஸ்டாயிக் வாதிகளுக்கு ஈபுறு மக்கள் கற்பித்திருத்தல் கூடும் என்று அறிஞர் சிலர் கருதுகின் றனர். மறு உலகைப் பற்றி ஸ்டாயிக் வாதிகள் கருதியது யாதெனின் ஆண்டும் வாழ்வும் உண்டு என்பதேயாம். ஆனால் அதன் இயல் பைக் கூறினார் அல்லர்,

9

ஸ்டாயிக் வா திகள் உலகில் ஒற்றுமை இருப்பதாகக் கண்டு மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் என்றும், எல்லா உயிர்சளும் தொடர்பு உள்ளன என்றும் கற்பித் தனர். ஒன்றே குலம் என்ற மனப்பான்மை மேல் நாட்டுச் சிந்தனை வரலாற்றில் முதன்முதல் ஸ்டாயிக் வாதி களால் போற்றப்படுகின்றது. பிளாத்தோவும் அரிஸ் டாட்டிலும் நகர அரசுகளில் வாழ்ந்ததால் அவற்றின் சிற்றெல்லைகளால் குறுகிய மனப்பான்மையை உடையவ ராயினர். ஸ்டாயிக் வாதிக ளா உ ?ராமியப் பேரரசில் வாழ்ந்ததால் அன்னார் விரிந்த மனப்பான்மையை அடைந்தனர். உரோமர் உலகின் பல நாடுகளுக்குச் சென்று வணிகம் நடாத்தியது அனைவரும் அறிந்த வரலாற்றுச் செய்தியேயாம். தமிழ் நாட்டிலிருந்து முத்தையும், மிளகையும் ஏற்றுமதி செய்து தம்முடைய தேறலையும், பொன்னையும் தமிழ்நாட்டுக்குக் கொடுத் தனர்.

"யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வத்து கறியொடு பெயரும் ”

(அகநானூறு 149 : 9)

அரிக்காமேட்டின் மண்பாண்டங்களும், குடங்களும் இத்தாலியத் தேறலில் வண்டல் படிந்தவைகளாகக்

. வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும் 97 காணட்பெறுகின் றன. இங்ஙனம் உரோமருடைய பேரரசின் வணிகமும், மக்கள் குலத்தின் ஒற்றுமையை நன்றாக மேலைய நாட்டவருக்குப் புலப்படுத்தியது. செனாகா சொல்லுவர்.

ஒவ்வொருவனையும், அவனுக்கு எத்தகைய பண்புகள் இருப்பினும், நான் பொருட்படுத்தி, அவன் மகன் ஆதலால் போற்ற வேண்டும். எல்லா மக்களின் நாடுகளும் என் தாய் நாடு என்றும், என் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் சருதுதல் வேண்டும் ''.

“ மார்க்கஸ் ஒள ?ரலியஸ் கூறுவர் : நான் பகுத் தறிவும் கூட்டுறவும் உடையவன். நான் அன்டோ லைனஸ் என்பதால் உரோ முக்கு உரியவன், நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன் ''

இவ்வாறே உலக மாந்தரின் ஒற்றுமைத் தன்மை திருக் குறளில் மிகவும் அழகாகக் கூறப்பெற்றுள்ளது. உரோமையர் புதிதாகக் கண்டுபிடித்ததோர் உண்மை போல் கூறுவதை வள்ளுவர் என்றும் உள்ள உண்மை போல் கூறுகின்றனர். மக்கள் அனைவரும் மக்கட் டன் மையை வளர்க்க வேண்டுமென்று அவர் மக்களுக் காக எழுதிய நூல் திருக்குறள். ஏனைய சங்க நூல்களும் காப்பியங்களும், தமிழ்ப்பற்றையும், தமிழ் நாட்டுப் பற்றையும் வற்புறுத்துவன. “பொதுமை சுட்டிய மூவர் உலகம் '' (புறம் 957:2) என்றும், * அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் '' (சிலம்பு 96:161) என்றும் பாராட்டும் நூல்கள். திருக்குறளில் தமிழ் என்னும் பெயரையே சாண்டல் அரிது. எனவே, “ மக்கள் அனை

வரின் புலவர் '' “ உலகப் புலவர் '' என்று திருவள்ளு வரைப் போப் ஐயர் போற்றுவது சாலப்பொருத்தம். 10

மக்கள் அனைவரையும் ஒரே குலத்தவர் என்று கருதுவதோடு உயிர்கள் அனைத்தையும் மக்களோடு சேர்த்து ஒரே குலத்தவை என்று கருதும் பண்பும்

88 வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும்

திருக்குறளுக்கும், ஸ்டாயிக் வாதிகளுக்கும் பொதுவான தாகும். மார்க்கஸ் ஒளரேலியஸ் கூறுவர் *। பகுத்தறிவு இல்லாத விலங்குகளையும் ஏனைய உயிர்களையும் பெருந் தன்மையுடன் நாம் நடத்துதல் வேண்டும். ்

எல்லா உயிர்களையும் போற்றுவது ஒழுக்க இயலில் மிகவும் உயர்ந்த பண்பு. ஸ்டாயிக் வாதிகள் உயிர்களைப் பேணினாராயினும், புலால் உண்பதைக் கைவிடவில்லை. திருக்குறளோ செனக்காவிற்கும் மார்க்கஸ் அவுரேலிய ஸிற்கும் புலப்படாத பண்புகளைக் கற்பிக்கின்றது.

“அறவினை யாதெனிற் கொல்லாமை" 321 “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் ” 922 “ தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை '? 927 “ கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்,“ 260

11

ஸ்டாயிக் (5101௦0) வாதிகள் மூவர் எழுதிய நூல்களு டன் திருவள்ளுவரின் நூலைச் சிறப்பாக ஒப்பிடுதல் கூடும். நீரோ எனும் பேரரசனின் ஆசிரியராக விளங் கியவர் செனெக்கா என்பவர். அவர் உரோமைப் பேரர சின் பெரும் ஆளுநராக இருந்து அரசியலில் போதிய பட்டறிவு பெற்றவர். ஆயினும் கொடுங்கோல் மன்ன னாகிய தம் மாணவர் நீரோவின் கட்டளையின்படித் தற் கொலை செய்துகொண்டு மாண்டார். எட்டு ஆண்டுக ளாக நாடு கடத்தப்பெற்று வாழ்ந்து வந்தவர். அவர் எழுதிய நூல்களும் திருக்குறளின் பாக்களும் ஒரே பொருளை விளக்குகின் றன. கண்ணோட்டம், ஓப்புரவு, நடுவு நிலைமை, வெகுளி, உறுகி, மானம், இன்ப வாழ்க்கை முதலியவைகளைப்பற்றி அவர் இயற்றிய நூல்களும், நூற்று இருபத்து நான்கு கடிதங்களும், தல்லொழுக்கப் பண்புகளை விரித்து விளக்குகின் றன. இவ்விளக்கத்திற்குக் கிரேக்க உரோமைய நாடுகளின்

வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும் 99 பெரியார் பலரின் அருஞ்செயல்களை எடுத்துக்காட்டாக அமைக்கின்றார் செனெக்கா, வீரமா முனிவர் திருக் குறளை செனெக்காவினுடைய பொன்மொழிகளுடன் ஒப்பிட்டது வியப்டன்று :

: இடைவிடாது அன்பு பூண்டு ஒழுகுவதால்தான் தீயவரையும் தன்வசப்படுத்தக்கூடும். அன்பி னால் வெல்லமுடியாத பகையுமில்லை ; உறுதியு மில்லை ?*,

“ இயன்ற மட்டும் பலருடைய நலத்திற்காக உழைக்க வேண்டும். அது கூடாதெனில் சிலருடைய நலத் திற்காகவாவது உழைக்க வேண்டும். அஃதும் இயலா தெனில் தன்னலத்திற்காகவாவது உழைக்க வேண்டும். உலகம் தம் அனைவர்க்கும் தாய். நாம் உயர் குலத்தில் பிறந்திருந்தாலும், தாழ்ந்த குலத் தில் பிறந்திருந்தாலும் நம் உலகத் தாயே நம் அனைவர்க்கும் பிறப்பிடம் அறம் எவர்க்கும் விலக் கப்பட்ட தன் று; அனைவர்க்கும் உரியது; அனைவரை யும் அழைக்கின்றது ; குடிகள், அடிமைகள், அரசர், நாடு கடத்தட்பட்டவர் அனைவரையும் வரவேற்கின் றது. பிறப்பையும் செல்வத்தையும் நோக்குவது அன்று அறம். எத்தன்மையராயினும் அறஞ்செய்ய வேண்டுமென்பதே உயர்ந்தோர் கருத்து ''.

இத்தகைய சிந்தனையாளரும் தம் வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடிக்க வில்லையென்றும், பிறர் செல்வங்களையும் கவர்ந்தார் என்றும் வரலாறு கூறுகின் றது. தம் நரம்புகளை வெட்டி உயிர் துறந்தபொழுது மகிழ்ச்சியுடன் இறந்தாராம் ஸ்டாயிக்வாதி செனெக்கா.

  1. Moral sayings of Seneca :

No man is nobler than his fellow, even if it happen that his spiritual nature is better constituted and he is more capable of higher learning. The world 15 the one mother of us all, and the ultimate origin of each one of us can be traced back to her, whether the steps

40 வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும் 12

தம் கடவுள் பற்றாலும் பக்தியாலும் நம் கருத்தைக் கவரும் ஸ்டாயிக்வாதி எபிக்டெடுஸ் (101005) என்ப வர். அவர் கி. பி, முதலாம் நூற்றாண்டில் உரோமை மாநகரில் அடிமையாக இருந்தவர். விடுதலை பெற்றதும் உரோமைமா நகரிஃ மெய்யுணர்வினைக் கற்று அதன்பின் மெய்யுணர்வினைக் கற்பித்தார். தம்முடைய மொழிகளை நூல் வடிவில் தாமே எழுதவில்லை யெனினும்,

in the ladder of descent be noble or humble. To no one is virtue forbidden; she is accessible to all; she admits everyone, she invites everyone in: free men and freedmen, slaves, kings and exiles. She

regards neither birth nor fortune; the man alone is all she wants.

Itis a mistake to think that the status of a slave affects

the whole of a person's nature; the nobler part of it is not touched thereby.

Every single person, even if there is nothing else to

recommend him, I must hold in regard, because he bears the name of man.

In the treatment of a slave we have to consider not how much we can do to him without being liable to punishment, but how much the nature of right and of justice allows us to do. seeing that these bid us treat gently even prisoners and purchased slaves. Although in the treatment of a slave everything is allowed. there is neverthless something which through the comron right of every living being is stigma-

tised as not permissible in the treatment of a man, because he is of the same nature as thyself.

Moral Sayings of Epictetus :

Nature is wonderful, and full of love for all creatures.

Wait upon God. ye men. When he calls you, and

releases you from service, then go to Him; but for the present remain quiet!

laced you 9 in the position in which He has plac ள்

, வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும் 41 அவருடைய மாணவர் அறியன் என்பவர் “ இறைவன் மக்களின் தந்தை '', “நடுவு நிலைமை", :' ஒழுக்க முடைமை '*, “ஒழுக்கத்தில் மேன்மையடைதல் ட் ' நம்மால் இயன்றதும் இயலாததும் '' போன்றவைகளை எழுதி வைத்தார். எபிக்டெடுஸ் காட்டும் கடவுட் பற்றும் பக்தியும் திருக்குறளின் பாயிரம் ஒழிந்த ஏனைய அதிகாரங்களில் இல்லை என்றே கூறுகல் வேண்டும். எபிக்டெடுஸ் (Eழictetus) கூறும் விதிகள் எல்லாம் கடவுட் பற்றையும் அவரின் காத்தல் அருளையும் அடிப் படையாகக் கொண்டவை. ஒழுக்க இயலில் பெரும்பா லும் நடுவு நிலைமையையும், குரய்மையையும், பொறுமை யையும் பாராட்டுகின்றார்.

You carry a good about with you, and do not know it, unhappy one! You have him within yourself, and do not notice it when you defile him with unclean thoughts or foul deeds.

Cultivate the will to satisfy yourself, and to stand right before God. Strive to become pure. one with yourself and one with God. (See the Teaching of Epictetus, by T. W. Rolleston, London. 1891).

Moral Sayings from the Meditations of Marcus Aurelius:

Everything that happens happens right, and if you can observe things carefully, you will recognize that itis so. I do not mean only in accordance with the course of nature, but much more that they happen in accordance with the law of righteousness, ard as if controlled by a Being who orders all things according to merit.

If 7 am active.lam so with due regard to the general welfare. If anything happens to me, 1 accept it and consider it in relation to the gods and the universal source from which, in close connection, come all our happenings.

He who commits unrighteousness is godless. for universal nature created rational beings for one another; to help each other where there is need, but never to énJure one another.

Love mankind; obey the gcd-head.

42 வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும் 13

மார்க்கஸ் அவுரேலியஸ் எனும் பேரரசன் பாசறை யில் எழுதிய சிந்தனை நூல்கள் பிற்காலத்தவர் அனை வரையும் கவர் ந்துள்ளன. அவர் நெஞ்சோடு கீளத் தும் பான்மையில் நூல்களின் பெரும்பகுதியை எழுதி னார்.

“மக்கள்பால் அன்பு பூண்டு ஒழுகி இறைவன் ஆணை யைச் செய். அறம் செய்யாதவன் நாத்திகன். ஒருவர் ஒருவர்க்கு நலம் செய்யவே இயற்கை பகுத்தறிவுள்ள நம்மைப் படைத்தது”. எவர்க்கும் தீமை செய்வதற்கன்று. “காலையில் எழும்பத் தயங்கினால் நான் மக்கள் கூட்டத்தில் ஒருவனாகச் சேர்ந்து தொழிற் செய்யப்போகிறேன் என்று நினை '',

14

உரோமையர் வரலாற்றில் சிறந்த வழக்கறிஞரும் சொல்வன்மை படைத்தவரும் சிசரோ. அவர் வழக்கறிஞ னாக அரிய சொற்பொழிவுகளை ஆற்றியதுடன் மெய் யுணர்வு நூல்களையும், ஒழுக்க நூல்களையும் எழுதியிருந் தார். இவர் ஸ்டாயிக் வாதியாக இருக்காவிடினும் ஸ்டாயிக் வாத நூல்களில் உறுதியான பயிற்சி பெற்ற வர். திருக்குறளுடன் ஒப்பிடத்தக்க நூல்களுள் நம் கடமைகள் என்ற நூலும், நட்பு என்ற நூலும் சிறந்தவை. பண்டைக் காலத்தில் சொல்வன் மையே மிகவும் உயர்ந்த கலையாகக் கருதப்பெற்றது. சொல் வன்மையைப் பற்றி இவர் எழுதிய நூலும், இந்திய நாட்டில் தண்டி அலங்காரம், நன்னூல் போன்ற நூல் களைப்போல் ஐரோப்பாவில் மாணவரால் இன்றும் பயிலப் பெற்று வருகின்றது. சொல்வன்மையைப் பற்றி யும். அவை அஞ்சாமையைப் பற்றியும் அறிவைப் பற்றி யும் கல்வியைப் பற்றியும் திருக்குறளில் விரவிவரும் பாக்களைச் சேர்த்துப் பதிப்பித்தால் சொல் வன்மையின் தத்துவத்தில் உயர்ந்த கருத்துக்களைத் திருக்குறள்

வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும் 49 கூறுவதையும் சொற்பொழிவின் செயல்முறைப் பண்பு களை மட்டுமே சீசரோ விளக்குவதையும் காணலாம். குவிண்டிலியன் (யர்பிரக) என்பவரும் அவ்வாறே விளக்குகின்ருர்.8

15

பல கோணங்களிலிருந்து உரோமையர் சொல் வன்மையைப் பற்றியும் நட்பைப் பற்றியும், காதலைப் பற்றியும் யாத்த இலக்கியங்களைத் திருக்குறளுடன் ஒப்பிட்டு நோக்குதல் கூடும். காதலையும், நட்பையும் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்கள், தன்னலம் கருதாது பிறர் நலத்திற்காகத் தம்மை முற்றும் நல்கும் வாழ்க் கையை வற்புறுத்துகின் றன.

நட்பிலும், காதலிலும் பெரும்பாலும் உரோமைய பெரியார் தன்னலத்தையும் முன் வேற்றத்தையுமே கருதுகின்றனர். ஒருவன் தன் ஆளுமையை நன்றாகச் செம்மைப்படுத்துவதற்கு நட்பு பயன்படுகிறது என்றும், ஒருவன் தன் வாழ்க்கையில் பெறக்கூடிய இன்பங்களில் நட்பு ஒன்றென்றும் வரையறுத்துள்ளனர் உரோமையர். பழைமை என்னும் அதிகாரத்தில் வள் ளுவர் நட்பைப் பாராட்டும் முறை உரோமையரின் இலக்கியத்திலோ அரிஸ்டாடிலிலோ காண்பது அரிது."

“பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

தோதக்க நட்டார் செயின் '' 805 அழிவந்த செய்யினும் அன்பறா ரன்பின் வழிவந்த கேண்மை யவர் '' 807

6, Quintilian, On Rhetoric; Cicero, De Oratore, De Amicitia.

  1. Otto Kiefer, Sexual Life in Anciet Rome, Kegan Paul, London, 1956; Hans Licht, Sexual Life in Ancient

Greece, Kegan Paul, 1956, Geoffrey Peruval, Aristotle on friendship, Cambridge, 1940; I MARROU, History of

Anctent Education, London, 1957.

4d வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும்

உரோமையரின் காதல் இலக்கியத்தை உள்ளுவரின் காமத்துப்பாலுடன் ஒப்பிடுங்கால் வள்ளுவரின் கருத் துக்கள் உரோமையினும் பல் மடங்கு உயர்ந்தவையாக இருப்பதைக் காண்கின்றோம். பிலவுட்டஸ் (120005, கத்துஎ லஸ் (401105), ஒவிட் (09104) போன்றவர்கள் களவையும், கற்பையும் பற்றிய உயர்ந்த கருத்துக்களைப் போற்றவில்லை.

உரோமையர் தம்முடைய தீதி நூல்களில் தம்மவ ரின் எடுத்த க்காட்டுக்களையும் பெருமையையுமே பெரும் பாலும் போற்றுகின்றனர். நாம் (௦௦௦) நம்மவர் (nostri) என்ற செருக்குடன் உரோமைய ஆசிரியர் உரோமருக் குப் பயன்படும் முறையில் எழுதுகின் றனர். ஆனால் வள்ளுவரோ எல்லா உலகிற்கும், எல்லா மக்சளுக்கும் பயன் படும் முறையில் தமிழோ, தமிழ்நாடே என்ற குறிப் பேதும் இல்லாமல் உலகெலாம் தழுவுவதற்குரிய பான்மையில் தம் நூலை யாத்துள்ளார்.

3. வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும்

இயல்பும்

புத்தரின் சமயம் தமிழ் நாட்டில் எக்காலத்தில் பரவியது. என்பது பற்றி அறிஞர் பல்வேறு கருத்துக் களைக் கூறியிருக்கின் றனர். சங்க இலக்கியத்திலிருந்து இளம்போதியார், சிறுவெண்தேரையர் எனும் தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள் என்றும் அவர்கள் பெரும் பாலும் புத்தராக இருந்திருத்தல் கூடும் என்றும் கருது வதற்கு இடமுண்டு. சங்ககாலப் பாடல்கள் சில புத்த கொள்கைகளை ஆதரிப்பவை போல் தோன்றுகின்றன.

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றே மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவ ராடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம் - 187) 187 ஆவது புறப்பாட்டு, சுத்த நிபாடத்தில் உள்ள தம்ம பதத்தின் 98 ஆம் சுலோகத்தை நினைவூட்டுகின்றது.

“ அருகத்துக்கள் (முனிவர்கள்) எங்கே வசிக்கிறார் களோ, அது நாடாயினும் காடாயினும், :பள்ள மாயினும் மேட்டு நிலமாயினும் அதுவே இரமணிய மான இடம். ”' மதுரை, திருதெஈ வேலி மாவட்டங்களில் உள்ள குகை களில், கழுகுமலைப் பக்கங்களி௨ அசோகர் காலத்தின் பிராமி எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல் வெட்டுகளும் ஏனைய இலக்கியக் கூற்றுக்களும், கி. மு. முதலாம் நூற்றாண்டிலேயே புத்த துறவிகள் தென் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றாவன. காவிரிப்பூம்பட்டினத்தில் புத்தர் சமயத்தைப் பரப்பும் துறவிகள் பலர் வாழ்ந்து வந்தனர் என்பது சிலப்பதிகாரத்திலிருந்து தெளிவாகின்றது. எனவே,

46 வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும்

கடைச் சங்க இலக்கியக் காலத்திற்கும் சிலப்பதிகாரத் தின் காலத்திற்கும் இடைக்காலத்தில் வாழ்ந்த வள்ளுவர், புத்தருடைய கருத்துக்களை அறிந்திருத்தல் வேண்டும். வள்ளுவரின் ஒழுக்க இயலுக்கும் புத்தரின் ஒழுக்க இயலுக்கும் ஒற்றுமைக் கருத்துக்களும் பல உள. வேற்றுமைக் கருத்துக்களும் பல உள.

1

புத்தர் ஒழுக்க இயலைப் பற்றி அறிவதற்குப் பாலி மொழியில் எழுதப் பெற்ற விநயபிடகம், சூத்திரபிடகம் எனும் தொகை நூல்கள் அடிப்படை யாவன. அவற்றுள் சிறப்பாகச் சுத்தநிபாதம் எனும் நூல் வள்ளுவரின் நூலுடன் ஒப்பிடத்தக்க கருத்துக்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. இந்நூல் சூத்திரபிடகத்தில் உள்ளது.

கிரேக்க ஒழுக்க இயலும் உரோமையருடைய ஒழுக்க இயலும் பெரும்பாலும் உலகில் வாழ்பவர்க்கு ஏற்ற ஒழுக்க இயலாக அமைந்தன. புத்தருடைய ஒழுக்க இயலோ பெரும்பாலும் துறவிகளுக்கென்றே வகுக்கப்பெற்ற ஒழுக்க இயல். புத்த சமயம் அடிப்படை யாகத் த றவிகளுக்கென்றே வகுக்கப் பெற்ற சமயம். ! எனவே, புத்த சமயத்தில் உலக ்' நோன்பிகளுக்குச் '! சிறந்த இடமில்லை. உலகில் வாழ்பவர்கள் பிற்காலத் திலேயே புத்த சமய அமைப்பில் இடம் பெற்றனர். தொடக்கத்தில் புத்த சமயம் பெண் துறவிகளைக் கூடப் போற்றவில்லை. ஈடேற்றத்தை (நிருவாண த்தை)ப் பெற வேண்டுமெனில் பெண் துறவிகளும் ஆடவர் களாகப் பிறந்து துறவறத்தைப் புத்த சமயத்தில் மேற் கொண்டு அதன் வழியாகவே ஈடேற்றத்தைப் பெறுதல்

கூடுமென்பது புத்த சமயத்தின் ் ் கொல்லை, த்தி அடிப்படைக்

  1. Albert Schweitzer, Indian Th

. ought an ், Op. cit. 8 d its developmen

வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும் 47 2

கி ந்தாம், ம் ற்றாண்டுகளில் இந்தியாவின் கைகள் பகுதியில் பிராமணரின் செல்வாக்கு நல் றாக நிலைநாட்டப் பெற்றுப் பிரா மணரின் சமயம் பரவியிருந்தது. இந்தியாவின் வடகிழக்கிலோ துறவறமே சிறந்த வழியாகக் கருதப் பெற்று எண்ணிறந்த துறவறக்குழுக்கள் அமைக்கப் பெற் றிருந்தன. இத்துறவறக் குழுக்களுள் சிறந்தவர் மகா வீரரின் சமணர், புத்தருடைய துறவிகள், கோசலருடைய ஆசீவகர் ஆகியோராவர், இத்துறவிகள் மேற்கொண்ட துறவறவழிகள் பல. இவர்கள் ஊர் ஊராகச் சென்று தம் கொள்கைகளைப் பரப்பியும் பொது மேடையில் தம்

கருத்துக்களை விவாதித்தும் வந்தனர்.

புத்தருடைய அறவுரைகளும் அவற்றை விளக்கிய ஏனைய நூல்களும் துறவறமே ஈடேற்றத்திற்கு ஒப்பற்ற வழி என்று வலியுறுத்துவதை நாம் காண்கிறோம். வள்ளுவரோ தம்முடைய நூலின் பெரும் பகுதியில் இல்லறமே ஒப்பற்றவழி என்று வலியுறுத்த வதாகப் பலர் தம்புகின்றனர். துறவறத்தை வள்ளுவர் இணை யற்ற வாழ்க்கை நிலையாகக் கூறினாராயினும் இல்லறத் தையே நன்றாக விளக்கி இல்லறமே துறவுக்கும் உறுதுணையாக நிற்பது என்பதை நிலைநாட்டுகின்றர். எனவே, தருமபதத்துடனும் ஏனைய நூல்களுடனும் வள்ளுவரின் நூலை ஒப்பிடுங்கால் வள்ளுவரின் நூல் இல்லறத்தின் சாசனமாக விளங்கப் புத்த நூல்கள் துறவறத்தின் சாசனமாக விளங்குவதைக் காண் கின்றோம்.

சமணத்தைப் போல் புத்ததர்மமும் பரந்த மனப் பான்மையை இந்தியாவில் பரப்பியது. பிராமண நூல் களுடைய கருத்தின்படி ஈடேற்றம் அடையத் தகுதி உள்ளோர் இமயமலைக்கும் விந்திய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பில் பிறந்திருக்க ?வண்டுமென்று தாம் கூறிவந்தனர். மிலேச்சர் வாழும் பிற நாடுகள்

48 வள்ளுவரும் புத் நரின் ஒழுக்க இயல்பும்

வேதியர் ஒழுக்கத்திற்கும் வாழ்க்கைக்கும் வேள்விக்கும் ஏற்ற நிலம் அல்ல என்று தரும சாஸ்திரங்கள் பல இடங் களில் விளம்புகின்றன. ஆனால் புத்தரோ தம்முடைய மதம் எங்கும் பரவ வேண்டும் என்று வற்புறுத்திப் பிற நாடுகளுக்கும் தம் சமய பேதகர்களை அனுப்பினர். தாம் உலகிற்கு ஒளியைக் கொடுக்க வேண்டு மென்றும் மக்களுக்குப் பிறப்பறுக்கும் ஆற்றலை அளிக்க வேண்டு மென்றும் போதிக்கத் தொடங்கினார். *துறவிகளே செல்லுங்கள், ஆரம்பத்திலும் நடுவிலும் இறுதியிலும் தூய்மையான இக்கொள்கைகளைப் பரப்புங்கள் ?' என்று கூறியதின் பயனாகவும், அசோகரின் பெரும் முயற்சியினா லும் கீறிஸ்துவிற்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே இந்தியாவிலும் இந்தியாவைச் சூழ்ந்த ஏனைய நாடுகளிலும் புத்த தருமம் பரவியது. இலங்கையில் புத்த கொள்கை வேரூன்றிச் செழிப்புற்று ஓங்கிய பான்மை வரலாற்றிலேயே வியப்புறும் செய்தியாக விளங்குகின்றது.

3

புத்தம் ““ புண்ணிய பூமியின் '* நிலப்பரப்பை விரி வாக்கியதோடு சமூக சாதி வேறுபாடுகளையும் ஒழிக்க ஒருவாறு முயன்றது. புத்தருடைய காலத்தில் சமூகச் சீர திருத்தத்திற்குப் பயன்பட்ட பெருங்கருத்து என்ன வெனில் சாதி வேற்றுமையை ஒழிக்கும் கருத்தேயாம். பிராமணரின் வழிபாட்டு முறைகளையும் வேள்வி செய்யும் திட்டங்களையும் புத்தர் மறுத்ததோடு பிராமணர் தனி வகுப்பைச் சார்ந்தவர் என்றும் மற்றெல்லா வகுப்பினருக்கும் உயர் ந்தவரென்றும் பிராமணர் கூறு வதைக் கண்டித்தததையும் புத்த நூல்களிற் காண் கின்றோம். அந்நூல்களிற் காணப்பெறும் கருத்துக் களையும் கூற்றுக்களையும் படிக்கும் பொழுது இந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய கழகங்கள் பிராமணரல்லாதாரின் உரிமைகளை திலைநாட்டுவசற்குக் கூறிய மேடை உரைகள் போல் ஒலிக்கின் றன, “ஆடு,

வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும் 49 மாடுகளை நாம் அவற்றின் நிறத்தால் போற்றுகின்றனம் அல்லேம். அவை நன்றாக ஓடுகின்றனவா அல்லது நன்றாகச் சுமைகளைச் சுமக்கின்றனவா என்று கருதிய போற்றுகின்றனம். எனவே தம்முடைய நிறத்தின் காரணமாக உயர்ந்தோராகக் கருதப் பெறுதல் எத்துணைத் தவறு '' என்ற பாணியில் அம்பத்தா சுத்தா, சோணாடந்த் சுத்தா முதலிய அறவுரைகள் வலியுறுத்து கின்றன.

இந்நூல்களைப் படிக்கும் பொழுது பிராமணர் புத்த துறவிகளைத் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவராகக் கருதினர் என்பதும், அன்னார் பெரும்பாலும் அக்காலப் பிராமணரைப் போல் தோல் நிறமுடையவர்கள் அல்லர் என்பதும் தெளிவாகின்றன.

4

தாழ்ந்த குலத்தவரையும், புத்தர் மடங்கள் துறவி களாக ஏற்றுக் கொண்டன. பிராமணர், பிராமணர் அல்லாதாரை விலக்கிவைத்த காலத்தில் புத்த தருமம் விரிவான மனப்பான்மையை உண்டாக்கியது என்பதற்கு இது ஒரு சான்றாகும். தேரிகாத்தா, தேராகாத்தா எனும் தொகை நூல்களில் உள்ள செய்யுட்களை யாத்த வர்கள் பல்வேறு வகுப்புகளைச் சார்ந்தவர்களாவர். தேரிகாத்தாவில் உள்ள இருநூற்றைம்பத்தொன்பது புலவர்களுள் க்ஷத்திரியர் அறுபதினமரும், வேளாளர் எழுவரும், வைசியர் ஐம்பத்துமூவரும், பறையர், தொழி லாளர், மீன்பிடிப்போர் பதின்மரும், நடிகர் ஒருவரும் உள்ளனர். தேராகாத்தா எனும் தொகை நூலில் உள்ள செய்யுட்களை யாத்தவர்களூள் அரச குலத்தைச் சார்ந்தவர் இருபத்து மூவரும், வணிகர்குலத்தைச் சார்ந்தவர் பதின்மூவரும், விலைமாதர் நால்வரும், இதர வகுப்புகளைச் சார்ந்தவர் நால்வரும் உள்ளனர். * ஆரிய ஒழுக்கம் '', * ஆரிய வழி", : ஆரிய உண்மை ” என்று புத்தர் கூறுங்கால் “ஆரிய” என்னும் பெயரிெச்சத்

4

  1. வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும்

திற்கு * உயர்ந்த”! ஒழுக்கத்தில் சிறந்த'! என்ற பொருளைப் புத்த பெருமான் கொண்டாரன்றி ஒரு சாதியையோ, ஒரு வகுப்பையோ அவர் குறிப்பிட்டார் அல்லர். “பெரும் ஆறுகள் வந்து கடலுடன் கலக்குங் கால் ஆறுகள் தம் பெயரை இழந்து : பெருங்கடல் எனும் ” பெயரைப் பெறுவது போல் என்னைப் பின் பற்றுவோரும் எந்தெந்த வகுப்பைச் சார்ந்தவராயினும் தம் இல்லத்தையும் பெயரையும் பரம்பரையையும் இழந்து சாக்கிய முனியின் துறவிகள் எனும் பெயரையே பெறுகின்றனர் '' என்ற பொருள்படப் புத்தர் அந் நூலில் கூறினார்.”

ன

புத்த நூல்கள் கூறும் இலட்சிய புருஷன் முனி அல்லது பண்டிதன். அவன் அன்னத்தைப் போலவும் மயிலைப்போலவும் சமூகத்தின் வாழ்க்கையைத் துறந்து காடுகளிலும் வனங்களிலும் தனிவாழ்க்கையில் ஈடுபட்டு வருபவன்.”

கருத்துடையவர்கள் இடைவிடாத முயற்சியுடைய வர்கள். அவர்கள் ஒரேயிடத்தில் ஓய்ந்து கிடப்ப தில்லை. நீர்நிலையை வீட்டுப் பறந்து செல்லும் அன்னங்களைப்போல், அவர்கள் இல்வாழ்வை விட்டுப் போகின்றனர் '?,

  1. See Charles Eliot, Hinduism and Buddhism, 701. 1, Kegan Paul, London, 1957,

Christmas Humphreys; Buddhism. (Pelican Book; H. Oldenberg, Buddha; seino leben, seine lehre, seine gemeidde, Berlin, 1890; Tachibana, Buddhist Ethics, Oxford, 1920,

  1. Rhys Davids, Bucdhist India, and his illuminating intro- ductions to the suttas, Fisher Unwin, London, 1903 (reprint) Susil Gupta, Bombay, 1957,

வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும் 51

வள்ளுவரின் இலட்சியப் புருஷனோ உலகில் வாழ்ந்து இல்லறத்தில் தன் மனைவி மக்களுடன் அறவாழ்க்கையி லும், அன்பிலும், கல்வியிலும், அரசியலிலும் ஈடுபட்டு வருபவன். ஆதலால் துறவிகளுக்கென்றே எழுதப் பெற்ற தம்மபதம் போன்ற நூல்களுடன் திருக்குறளை ஒப்பிடுவது ஒருவாறு பொருந்துமாயினும், திருக்குறள் தனிநூலாகப் பல்லாற்றாலும் விளங்குவதைக் காண்க.

“ அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று ”. (49)

இல்லறத்திலும் துறவறத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய உயர்ந்த ஆற்றலை வள்ளுவமும் புத்த நூல் களும் கூறுகின்றன. பிராமணரின் கோட்பாட்டின் படி, தாம் ஆகமங்களைப் பிழையின்றி ஓதியும் வேள்விகளைச் செய்தும் வந்ததால் தாம் அந்தணர் என்று கருதப்படுவர் என்று நினைத்தனர். வள்ளுவர் கூறுவது :

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்த தொழித்து விடின் ” (280) தருமபதமோ கொல்லாமையே சிறந்த நெறியென்றும், உண்மையான வேள்வி உள்ளத்தின் இச்சைகளை வேள்வி செய்வதே என்றும், பொய்கூறாமை, கள்ளுண் ணாமை இவற்றை யொழிப்பது சிறந்த அறமென்றும் வற்புறுத்துகின்றது. வள்ளுவரும் மேற் குறித்த அற நெறிகளையே அறிவுறுத்தியுள்ளார்.

“ ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று ”'. (323) அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று”. (259)

தம்மையே பன்முறை கழுவிக்கொண்டால் அல்லது முடியை நீத்தால் அதனால் தூய்மையை அடைவதாக எண்ணினர் வைதிக வேதத்தார். அகத்தூய்மையே சிறந்த தூய்மை என்று வள்ளுவரும் தருமபதத்தின் ஆசிரியரும் வற்புறுத்துகின் றனர்.

52 வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும்

புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் ”. (298) உண்மையான அந்தணர் யாரெனில் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவர் ; தம் இச்சைகளை அவிப்பவர் ; அகத் தூம்மையைக் காப்பாற்றுபவர். அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழு5 லான் "', (30) “£ தரஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்", (964) “புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் ''. (298) ஒழுக்கத்தால் சிறந்தவனே அந்தணன் என்று பன்முறை வள்ளுவர் கூறுவதைக் காண்கின்றோம், “மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் '*, (134)

6

திருக்குறளை யாத்த ஆசிரியர் புத்த தருமத்தைத் தழுவியவர் அல்லர் என்பதற்குப் புலால் உண்ணாமை யைப் பற்றிப் புத்த சமயத்தில் கடைப்பிடித்த கொள் கையே சான்றாகும். தாம் கொலை செய்யாது பிறர் கொலை செய்த விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் புலாலை உண்ணுதல் கூடும் என்று பண்டு தொட்டு வரும் புத்த கொள்கையை வள்ளுவர் மறுக்கின்றார்.

“ அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் நினல் '”, (254) “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி யெல்லா வுயிருந் தொழும்", (260) 7

புத்த துறவிகளும் உலக நோன்பிகளும் கடைப் பிடிக்க வேண்டிய தருமத்தைப் பஞ் சசீலம், அஷ்டசீலம், தசசீலம் என்னும் கட்டளைகளில் காணுதல் கூடும் பஞ்சசீலமாவது :

வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும் 58

(1) பிழையில்லாமலும் தீங்கு செய்யாமலும் இருத்த லோடு உயிர்கள் மாட்டு அன்பு பூண்டு ஒழுகுதல்,

(2) பிறர் பொருளை இச்சிக்காமலும், களவு செய்யா மலும் இருத்தல்,

(8) பொய்கூறாமை,

(4) கள்ளுண்ணாமை,

(5) கற்பு நெறியில் இல்லற இன்பத்தைத் துய்த்தல், அஃதாவது முறைதவறிய சிற்றின்பத்தை நீக்குதல் ஆகியவையாம்.

மேற்கூ நிய கட்டளைகள் ஐந்தும் புத்த தருமத்தைத் தழுவும் அனை வரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம். இக்கட்டளைகள் வள்ளுவருடைய அதிகாரங்களுடன் ஒப்புமை கொண்டிருத்தலைக் காண்க. இப்பஞ்சசீலக் கட்டளைகளுக்கு இன்னும் மூன்று கட்டளைகளைச் சேர்த் தால் அஷ்டசீலக் கட்டளைகளாகின்றன. முன்கூறிய ஐந்து கட்டளைகளும் தவறாது கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகள். பின்வரும் மூன்று கட்டளைகளும் அத் துணைக் கண்டிப்பு உடையன அல்ல. அவை,

(1) இரவில் தூய்மையான உணவை அளவோடு உண்ணுதல்.

(2) பூ, சந்தனம், மாலைகள் முதலியவற்றை அணியாமலும் நறுமணங்களை நுகராமலும் இருத்தல்,

(3) தரையில் பாயின்மேல் படுத்து உறங்குதல் ஆகியவையாம்.

இன்னும் இரண்டு கட்டளைகள் துறவிகளுக்கென்று வகுக்கப்பெற்ற சிறப்பான கட்டளைகள். அவை,

(1) இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலிய காட்சி களைக் கேட்காமலும், காணாமலும் இருத்தல்,

54 வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும்

(2) பொன், வெள்ளி முதலியவற்றைத் தொடா திருத்தல் ஆகியவையாம். இப்பத்துக் கட்டளைத் தொகையும் தசசீலம் எனப்படும், !

இக்கட்ட ளைகளை நோக்குங்கால் புத்த தருமம் உலக வாழ்க்கையை நோய் என்றும், இந்நோய்க்குக் காரண மாக இருப்பது இச்சை அல்லது ஆசை என்றும் கூறி வந்தது. இந்த இச்சையை அறுப்பதே வாழ்க்கையின் நோக்கமாகும். மணிமேகரஃப்த் தொடர்நிலைச் செய்யு ளின் பல இடங்களீல் இத்தகைய தத்துவம் விளக்கப் பெற்றிருக்கின்றது. “துன்பம் தோற்றம், பற்றே காரணம். இன்பம் வீடே, பற்றிலி காரணம் '', மணி மேகலை 30.5

ஒருவாறு புத்த ஒழுக்க இயல் “ ற்ற '' எனும் இயற்பண் பினை அடிப்படையாகக் கொண்டது. “ துறவி களே அனை த்தும் எரிகின்றது '' என்று கூறி உலகனைத் தும் பற்றுடன் வாழ்வதால் காமத்தீ பற்றிக் காட்சி

யளிப்பதாகக் கண்டார் புத்தபெருமான் _ * இளமையும் நில்லா யாக்கையும் நில்லா ””, ... .... வள்ளுவருடைய ஒழுக்க இயலோ “ ர” என்னும் இன்ப இயற் பண்பினை அடிப்படையாகக் கொண்டது. உலகம் கவர்ச்சியுடை த்து ;

** பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின் றேன் மண்புக்கு மாய்வது மன் ””. (996)

வாழ்க்கை இன்பம் பயப்பது ;

  1. மயிலை, சீனி, வேங்கடசாமி, பெளத்தமும் தமிழும்; K. Ananda- Coomaraswamy, the Gospel of Buddhism.

  2. Charles Eliot, Hindulsm and Buddhism, op. cit. Vol. I, p 216

The Buddhist saint is essentially one who has freed him-self His first impulse is to rejoice in his freedom and share it with others, not to cause fetters he has cut away. Active benevolence and love are

வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும் 55

“ தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ ரமரைக் கண்ணா னுலகு''. (1103)

இல்லறம் மேன்மை யுடையது ;

“ அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன் பழிப்ப தில்லாயி னன்று ”'. (49)

8

புத்தபெருமானும் அவருடைய துறவிகளும் உலகில் வேண்டிய அன்பையும். நட்பையும் வள்ளுவர் போற்றும் அளவிற்குப் போற்றவில்லை. புத்த தருமம் முற்றிலும் உலக நோன்பிகளால் கடைப்பிடிக்கக் கூடிய தருமம் அன்று. உலக நோன்பிகள் தமக்குரிய கட்டளைகளைக் கைக்கொண்டு வாழ்தலோடு துறவிகளுக்குத் தருமம் செய்தும், தம் பெற்றோரை வணங்கியும், நல்ல தொழி லொன்றைச் செய்தும் ஒழுகுதல் வேண்டும். சிகாலோ வாத சுத்த எனும் அறவுரையில் உலக நோன்பிகள் தம்

enjoyed as a duty and praised in language of no litttle beauty and earnestness. In tbe Itivuttaka the following is put into the mouth of Buddha “ All good worl® whatever are not worth one sixttenth part of love which sets free the heart. Love which sets free the leart comprises them: it shines, gives light and radiance. Just as the light of all the stars is not worth one sixteenth of the light of the moon: as in the last month of the rains in the season of autumn, when the sky is clear and cloudless the sun mounts up on high and overcomes darkness in the firmament: as in the last hour of the night when the dawn is breaking. the morning star shines and gives light and radiance: even so does love which sets free the soul and comprises all good works shine and give light and radiance.’ So; too, the sutta-Nipata bids a man love not only his neighbour but all the world. '‘ AS a mother at the risk of her life waches over her own child. her only child, so let everyone cultivate a buundiess love towards al! beings

56 வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும்

பெற்றோருக்கும், ஆசிரியர்க்கும், துறவிகளுக்கும், மனை வி மக்களுக்கும், நண்பர்க்கும், ஏவலாளர்க்கும், நட்பையும் வணக்கத்தையும், அன்பையும் காட்டவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். மகா மங்கள சுத்த எனும் கீதத் தில் சான்றோரைத் தழுவுதல், தருமபோதகத்தை உரிய நாட்களில் கேட்டல், துறவிகளுடன் உரையாடல் ஆகியவை யெல்லாம் ஒழுக்க இயலில் முன்னேறும் வழிகள் என்று கூறப்பட்டிருக்கின்றன.

: புத்த துறவிகளைப்போல் இறப்பு, துன்ப நீக்கத் திற்கு வழியென்று வள்ளுவர் கருதினாருமல்லர் ; அதனை அஞ்சி ஒழுகினாருமல்லர். இறப்பும் நிலையாமையும் வாழ்க்கையில் இயல்புகளாதலால் அவற்றின் இயல்பு களை உணர்ந்து வாழ்நாள் இருக்கும்போதே அன்பிலும் அறத்திலும், இன்பத்திலும் ஈடுபடுதல் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

புத்தரின் கற்பனையின்படி எல்லா உயிர்கள்பாலும் சிந்தையாலும் செயலாலும் அன்பு பூண்டு ஒழுகுதல் இன்றியமையாதது, தாய், தன் சேயை உயிர்கொடுத் தும் காப்பாற்றுதல்போல ஒவ்வொருவரும் எல்லா உயிர்கள்பாலும் அளவுகடந்த அன்பைப் பூன்டு ஒழுகு தல் வேண்டும் என்று சுத்த நிபாதத்தில் புத்தபெருமான் கூறுகின்றார். இவ் அன்பை வற்புறுத்துவதோடு உலகம் துக்கமும், துன்பமும் நிறைந்தது என்றும் வலியுறுத்து கின்றார். வள்ளுவர் சான்றோனைப்பற்றித் தீட்டிய குறட் பாக்களில் அவனுக்கு அன்பு இன் றியமையா ததென் றும், அவன் எல்லா உயிர்களையும் போற்றுவதுடன் நண்ப ரைப் பேணியும் எல்லோருடனும் சிரித்து மகிழ்ந்தும் வாழ்தல் வேண்டுமென்றும் கூறுகின் ரர்.

“குடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு 1, 981

'* நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன் நிருள் ”. 999

*£ இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வ தஃதொப்ப தில் '', 621

வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும் 57

புத்ததருமத்தில் நிலையாமையும், உயிர் நீத்தலும், பல இடங்களில் கூறப்பெற்று, வாழ்க்கையிஃ ஈடுபடாது அன்னம்போல் பிரிந்து பறப்பதற்கு இச்சிந்தனைகள் துணையாகின் றன. வள்ளூவரோ சாவினைட்பற்றி அத்துணை கருதியவராகத் தெரியவில்லை. பிறப்பினை அறுக்கும் வழிகளைக் கூறிவத்தாராயினும் இப்பிறப்போ துன் பத்தையுடையது என்று அவர் வலியுறுத்தவில்லை.

9

புத்த தருமம் பல வகுட்பினரைத் துறவிகளாக மடங்களில் ஏற்றுக்கொண்டதன்றிச் சாதி வேற்றுமை களைப் பெதுமக்களிடம் நீக்குவதற்கு வள்ளுவரைப் போல் திட்டமாகக் கூறவில்லை. மேலும் புத்தபெருமான் பெண்கள் துறவிகளாவதுபற்றி முதலில் விரும்பவில்லை. ஆனந்தரெனும் தம்முடைய நண்பர் பெண் களுக்கும் ஆடவர்போல் தம் சமயத்தில் உரிமைகள் அளிக்க வேண்டு ஃமன்று கேட்டபொழுது ஆன ந்தரே * பெண்டிர் வெகுளியுடையவர், பொருமையுடையவர், அறியாமை யுடையவர் ? என்று மொழிந்தார். ஆயினும் பிற்காலத் தில் பெண்களுக்கும் உயரீய ஒரு துறவினை ஏற்பாடு செய்தார். ஆனால் பெண் த. றவிகள் எப்போதும் ஆண் துறவிகளுக்குக் கீழ்படிந்தும், அவர்களிடமிருந்து சமய உரைகளைக் கற்றும் வரவேண்டும் என்று விதித்தார். ஆனால் வள்ளுவரோ பெண்களுக்குச் சமநிலை அளித்து காதலிலும் அன்பிலும் புத்த தருமத்தில் இல்லாத உயர்ந்த நிலையை வகுக்கின்றார்.

10

புத்தருடைய ஒழுக்க இயலையும் பொதுவாக கி, மு. மூன்றாம் நூற்றாண்டில் ஏனைய சமயங்களும் தர்மமா £ப் போற்றிவந்த கொள்கைகளையும் பல நாடுகளுக்குப் பரப்ப முயன்றவர் பேரரசர் அசோகர். இந்தியாவில் நிலைநாட்டிய பல தூண்களிலும். பாறைக் கல்வெட்டுக் களிலும் மக்கள் தருமத்தையே கடைபிடிக்க வேண்டும்

58 வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும்

என்று ஒழுக்க இயலில் முன்னேறுவதற்குரிய பல வழி களையும் காட்டியுள்ளார். ஒழுக்க இயலைப் பரப்ப முயன்ற அரசர்களுள் அ?சாகரே வரலாற்றில் தலை சிறந்தவர். பொதுமக்களும் கல்வி அற்றவரும் ஒழுக்க இயலில் ஈடு படுதல் வேண்டும் என்றும் தம்முடைய ஒழுக்க இயலைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்கென்று மகா மாத்திரர் என்னும் மாநிலப்பணியாளரை இத்தொண்டிற்கெனச் சிறப்பாக அமைத்தார்.

“ தர்மத்தை நான் பரப்புதல் வேண்டும். தர்மத்தைப் பற்றி மக்களுக்கு அறவுரைகள் நான் கூற வேண் டும். எனவே மாந்தர் இதனைக் கேட்டு முன்னேறு வதுடன் தருமத்தில் வளர்ச்சியுறுவார் ”.

கொல்லாமையை யாண்டும் சில நாட்களிலேனும் அனை வரும் கடைப்பிடித்தல் வேண்டும் என்று கூறுவதுடன் பெற்றோர், உறவினர், சுற்றத்தார் முதலிய அனைவரும் ஒருவருக்கொருவர் ஒழுக்க வாழ்க்கையில் ஈடுபடுமாறு தூண்டுதல் வேண்டும் என்றும் பன்முறை கல்வெட்டுக்கள் வழியாகச் சாற்றினார்,

“ தர்மத்தைப் போன்ற நன்கொடை உலகிலேயே இல்லை. தந்தை, மகன், உடன் பிறந்தான், நண்பன், சுற்றத்தான் ஆகியோரைப் போன்று இது நன்மை பயக்கும். “இதனை -நீ செய்வாயாக” என்ற

முறையில் ஒழுக்கத்தில் மேலேறத் தூண்டுதல் வேண்டும்."

  1. 19, & Nikam and Richard Mc. Keon, The Edicts of Asoka, pp, 32, 33 Chicago. 1950.

“ WAYS TO INCULCATE DHARMA” ர. Asoka’s Reflections on the promulgation of Morality. Pillar Edict VII. King Priyadarsi, the Beloved of the Gods, speaks as follows :

In the past, kings have thought about ways of increasing the people's devotion to Dharma, but the people did not make progress enough in morality.

வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும் 59

முடிவுரை இறுதியாக வள்ளுவரின் ஒழுக்க இயலைப் பிறநாட்டு அறிஞரின் ஒழுக்க இயலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும், வாய்பீபை அளித்த சொர்ணம்மாள் அறக்கட்டளை இயக்கக் குழுவினர்க்கும் நம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கும் என் நன் றியைத் தெரீவிக்கின்றேன்.

Concerning this, King Priyadarsi says:

This occurred to me. Since in the past kings have thought about ways of increasing the people’s devotion to Dharma, but the people did not make progress enough in morality, how can the people be induced to follow Dharma strictly? How can progress in morality he increased sufficienty? How can I raise them up by the promotion of Dharma?

Pursuing this subject, King Priyadarsi says:

This occurred to me. I shall issue proclamations on Dharama, and I shall order instruction in Dharma to be given to the people Hearing these proclamations and instructions, the people will conform to Dharma; they will raise themselves up and will make progress by the promotion of Dharma. To this end I have issued proclamations on Dharma, and I have instituted various kinds of moral and religious instruction.

My highest officials, who have authority over large numbers of people, will expound and spread the precepts of Dharma I have instructed the provincial governors, 600, who are in charge of many hundred thousand people, concerning how to guide people devoted to Dharma.

King Priyadarsi says:

Having come to this conclusion, therefore, 1 have erected pillars proclaiming Dharma: I have appointed officers charged with the speared of Dharma, called Dharma-mahamatras. I have issued proclamations on Dharma.

60 வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும்

வள்ளுவரின் ஒழுக்க இயலை ஆராய வேண்டுமென்று புகுந்ததும் நான் முன் எதிர்பாராத முறையில் இவ் வொப்புமை என் சிந்தனையில் வளர்வதைக் கண்டேன். இன்னும் நேரமும், வேண்டிய நூல்களும் இலங்கையில் உள் நாட்டு அமைதியும் கிடைத்திருந்தால் இன்னும் விரிவாக இவ்வுரைகளை நான் யாத்திரத்தல் கூடும்: இவ்வுரைகளுக்கு வேண்டிய முதல் நூல்களை நம் நாட்டின் பெரும் நூல் நிலையங்களில்கூடக் காண்பது அறிது. வருங்காலத்தில் வள்ளுவரின் ஒழுக்க இயலை எபிரேருடைய ஒழுக க இயலுடனும், இஸ்லாமிய ஒழுக்க இயலுடனும், தர்மசாஸ்திரஙகளின் ஒழுக்க இயலுட னும், சீன ஒழுக்க இயலுடனும் ஒப்பிட்டுப் பயில எண்ணி உள்ளேன். கன்பூஷியஸ் வகுக்கும் ஆசாரக்கோவையில் மகன், தந்தைக்கும், முன்னோர்க்கும் ஆற்ற வேண்டிய கடமையை வற்புரூக்துகின்றார். தமிழ் சான்றோனைப் போல் சுன்சூ (பட Tsu என்பவன் பண்டைக்காலச் சீனச் சான் >ோனாவ ." விவீலிய இலக்கியங்களுடனும் கெமாரா, மிதிராஷ், செளஹார் போன்ற எபிரேயருடைய உரைகளுடனும் வள்ளுவர் கூறும் உண்மைகளை ஒப்பிட்டுக் கூறுதல் கூடும், மேலும் வள்ளுவர் அரசியலைப் பற்றியும், பொருளியலைப் பற்றியும், உலக இயலைப்பற்றியும் கூறும் கருத்துக்களை வருங்காலத்தில் ஒப்பீட்டு முறையில் நாம் ஆராய்தல வேண்டும். அத்தகைய ஆராய்ச்சிக்கு நம் பல்கலைக் கழகம் என்றும் நடுவிடமாக இருத்தல் வேண்டும் என்று பன்முறை வாழ்த்துகின்றேன்.

7 Arthur Waley, Anabats.of confucius, p-34, Allen & Unwin, 1954,