அருள்திரு. முனைவர் அமுதன் அடிகள் காட்டிய வழியில்
‘தனிநாயக அடிகள்’ வரலாற்று நூலாசிரியர் (1993) · திருச்சி தமிழ் இலக்கியக் கழகச் செயலாளர்
அருள்திரு. முனைவர் அமுதன் அடிகள் (பி. 1943), கத்தோலிக்க அருட்பணியாளர், எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தின் செயலாளர் ஆவார். தனிநாயகம் அடிகளாரின் வரலாற்றுப் பெருவாழ்வையும் ஆவணங்களையும் 30 ஆண்டுகள் தேடித்தொகுத்து, 1993-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் முதன்முதலாக ‘தனிநாயக அடிகள்’ வாழ்க்கை வரலாற்று ஆய்வு நூலை ஆக்கிய முன்னோடி ஆவார்.
அமுதன் அடிகள் காட்டிய வழியிலும் வழிகாட்டலுடனும், தனிநாயகம் அடிகளாரின் அரிய படைப்புகளையும் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டையும் உலகறியச் செய்யும் நோக்கோடு இந்த ஆவணக முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
