தமிழ்த் தூது
பதிப்புகள்
Open Library 126 பக்கத் தமிழ்ப் பதிப்பையும் (1962), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 1998 பதிப்பையும் பதிவு செய்கிறது. தமிழ் எண்ணிம நூலக / Internet Archive வாசிப்புப் பிரதி கிடைக்கிறது.
இக்கட்டுரை பற்றி
கட்டுரைக் கொத்து — பதிப்புறை, உள்ளுறை மற்றும் ஆறு கட்டுரைகள்:
- தமிழ்த் தூது
- சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
- மலரும் மாலையும்
- காப்பிய கவிஞர் வீரமாமுனிவர்
- தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை
- செந்தமிழ் வளர்ச்சி
முழு உரை கீழே உள்ளது.
எப்படி வாசிப்பது
கட்டுரைக் கொத்தின் முழு உரை இப்பக்கத்தில் கீழே இணைக்கப்பட்டுள்ளது. OCR பிழை இருந்தால் படிமத்தைப் பார்க்கவும்.
தமிழ்த் தூது
தமிழ் இலக்கியக் கழகம், தூத்துக்குடி — கட்டுரைக் கொத்து (முதற் பதிப்பு 1952; இரண்டாம் பதிப்பு 1969). Internet Archive உரைப்பிரதியிலிருந்து நிரப்பப்பட்டது. எழுத்துப் பிழைகள் இருக்கலாம் — ஐயம் இருந்தால் படிமத்தைப் பார்க்கவும்.
உள்ளடக்கம்
- பதிப்புறை
- உள்ளுறை
- தமிழ்த் தூது
- சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
- மலரும் மாலையும்
- காப்பிய கவிஞர் வீரமாமுனிவர்
- தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை
- செந்தமிழ் வளர்ச்சி
தமிழ்த் தூது
[ கட்டுரைக் கொத்து]
அறிஞர் தனிநாயக அடிகளார்.
தமிழ் இலக்கியக் கழகம் தூத்துக்குடி.
விலை ரூ. 1-25. ம்
முதற் பதிப்பு: 1952 இரண்டாம் பதிப்பு: 1969
(Approved by the Text Book Committee Vide Fort St. George Gazette Supplement. Page 11, Dated May 13—59)
Paper used 32 Lbs. White Printing
S. R. P. Tuticorin.
பதிப்புறை
அறிஞர் தனிகாயகஅவ்தீளரம்- தங்
கள் உலகச் செலவு பற்றி வரைந்துள்ள “் தமிழ்த் தூது ?? எனும் கட்டுரையை யும், யாழ்ப்பாணத் தமிழ் விழாவில் அவர்கள் நிகழ்த்திய சிற்றுரையையும், நூல் வடிவாகக் காண விழைந்த நண்பர் பலர் பல்கால் வேண்டிய வேண்டுகோ ளுக்கு இசைந்து, அவற்றையும், அடிக ளார் எழுதியுள்ள வேறு நான்கு கட்டு ரைகளையும் ஒருங்கு சேர்த்து, இச் சிறு நூலினைப் பதிப்பித்துள்ளோம். தமிழன் பர்க்கு இவை நல் விருந்தாகும் என்பது எமது துணிபு.
தமிழ் இலக்கியக் கழகத்தார் தூத்துக்குடி 5--9--1952.
உள்ளுறை
. தமிழ்த் தூது
. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு . மலரும் மாலையும்
, காப்பிய கவிஞர் வீரமாமுனிவர்
௫. தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை ....
. செந்தமிழ் வளர்ச்சி
தமிழ்த் தூது
தமிழ்மக்கள் பலரும், தமிழ்மக்கள் அல்லாதார் சில ரும், தத்தம் இயல்பிற்கு ஒவ்வும் வகையி லெல்லாம் தமிழிற்காக அரும்பணி யாற்றி வருகின்றனர். இவருள், வேற்று மொழிகளுடனும், நாடுகளுடனும், மக்களுடனும் தொடர்புடைய என்னைப் போன்ற தமிழர், தம்மொழி, நாடு, இனம், இவை மூன்றின் மாண்பை ஒப்பு நோக்கி அறிந்து, அதனைத் தமக்கிசைந்த அளவு பிறர்க்குக் கூற விரும்புவதில் யாதேனும் வியப்பின்று,
இத்தகைய தொண்டில் முதன்முதல் ஈடுபட்டவர், அந் தணரும், குறிஞ்சிப் பாட்டினை இயற்றி, ஐந்திணை இலக் கணம் ஆரிய மன்னர்க்குப் புகட்டியவரு மாகிய கபில ராவர். வேற்று நாடுகளுக்கு ஒருவாறு தமிழின் பெரு மையை அண்மையில் காட்டியவர், ஈழ நாட்டவரும், இந் தியக் கலைகளில் இணை யற்ற தேர்ச்சி பெற்றவருமாகிய ஆனந்தக் குமாரசுவாமி யாவர். இவரிருவருடைய காலத்துக்குள் இதே நோக்கத்துடன் பலர் உழைத்திருக் கின்றனர். இப்பலருடைய அறிவும் ஆற்றலும் படைத் தேனல்லே னாயினும், உலகச் செலவு செய்து, தமிழ்க் கலைத் தூது நிகழ்த்த யானும் வாய்ப்புப் பெற்றேன் என்று பெரி தும் உவந்து, அத்தொண்டினை மணமற்ற சிறு மலராங்குத் தமிழன்னையின் துணை மலரடிகளில் வைக்கிறேன்.
இத்தொண்டு இக்காலத்து இன் நியமையாது வேண்டுமோ வெனின், இன்றியமையாது வேண்டும்:
- .. தமிழ்த் தூது
உலக மொழிகளின் பிறப்பைக் கண்டும்,அவை சிதையவும், மாறவும், வழக்கொழியவும், தான் இன்றும் தன் இளங் கன்னித் தன்மையைக் காத்து வருகின்ற தமிழன்னைக்கு, இன்று இடுக்கணும் இடும்பையும் நேர்ந்துள. தமிழன்னை மீது பல்வேறு பகைவர் அறிந்தும், அறியாதும், படை யெடுத்துள்ளனர். இப்பகை எல்லாவற்றையும் புறங் காணும் கருவி தமிழ்த் தூது முரசின் ஒலி ஒன்றே என நம்புகின்றேன்,
க
இனி, மேனாட்டு மொழியாராய்ச்சியாளரும் இலக்கிய . ஆராய்ச்சியாளரும், இந்தியப் பண்பினை அறிவதற்கு வட மொழி இலக்கியப் பயிற்சியே சாலும் எனக் கருதி அதனை மட்டும் கற்று வருகின்றனர். தமிழ்க் கலையின் தனித் தன்மையை இவர் உணர்ந்திலர்; இவர்க்கு உணர்த் துவாரும் இலர். மேல் நாடுகளில் வெளிவந்துள்ள இந் திய இலக்கிய வரலாற்று நூல்களில், தமிழிலக்கியத்தைப் பற்றிய கருத்துச் சிறிதேனும் இல்லை; ஒரு சொல்லேனும் இல்லை. இந்திய நாட்டில் இந்தியக் கலைஞரால் யாக்கப் பெற்ற இலக்கிய வரலாற்று நூல்களிலே தானும், தமிழுக் குத் தகுந்த இடமும் புகழும் அளிக்கப்படவில்லை. இந்தி யக் குடியரசின் முதல் அமைச்சர் உயர் திரு. நேரு தாமும், தம் நூல்களில், தென்னாட்டிற்குச் சிறிதளவே இடம் ஈந்துள்ளார். “இந்திய வரலாறு தென்னாட்டில் முதல் உறைவிடம் காணும்”' என்றும், “தென்னாட்டில் மிகப் பழைமை வாய்ந்த பொருட்களும் மக்களும் உளர்” என்று மட்டும் கூறி, மேலே செல்லுகின்றனர் இந்நூலா
தமிழ்த் தூது 3 சிரியர்கள். இம்மொழியின் சிறப்பியல்பை, இம்மக்கள் உலகிற்கு ஈந்த இலக்கியத்தின் தனித் தன்மையை, அவர் பனுவல்களைப் புரட்டிப் புரட்டிப் பார்க்கனும் காண்டல் அரிது.
௨
நாட்டை விட்டுப் பெயர்ந்து ஏறக்குறைய ஈராண்டு கள் ஆகிய பின்னர், தமிழ்த் திருநாட்டை மீண்டும் என் கண்கள் பார்த்தன, இவ் ஈராண்டுகளில் யான் மலாயா, சீனம், ஜப்பான், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, நடு அபிரிக்கா, வட அபிரிக்கா, இத்தாலி, பலத்தீனா, எகிப்து, இந்நாடுகளைக் கண்டு வந்தேன்,
தமிழைப் பொறுத்தவாறு யான், அடைந்த பெரும் வியம்பு, தமிழும், தமிழரும், உலகிற் பரவியிருக்கும் வகை கண்டு ஏற்பட்டதே யாம். பர்மாவில் தமிழ் மொழிக்குச் செல்வாக்குண்டு, ௩டு அமெரிக்காவின் தீவுகளாகிய திரி நாடு, ஜ்மேக்கா, அட்லாண்டிக் தீவுகளாகிய மார்த்தீனிக், அபிரிக்காவின் பல பிரிவுகள், இன்னோரன்ன இடங்களுக் குச் சென்ற தமிழர் பெருஞ் சிறப்புடன் வாழ்ந்து வரூ கின்றனர், ஆயினும், மலாயாவிற்குச் சென்றபொழுது யான் அடைந்தது போன்ற வியப்பு வேறு எவ்விடத்தி லும் யான் அடைந்தேன் அல்லேன். ஆங்குள்ள இந்தியர் களில் தமிழரே பெரும் பகுதியினர், அங்குத் தமிழ் நாட் செய்தித் தாள்கள் நான்கு ஐந்து வெளியிடுகின்றனர். சிங்கப்பூர், கோலாலம்பூர் முதலிய பேரூர்களின் வானொலி நிலையங்கள், தமிழில் நாள்தோறும் ஒலி பரப்புகின்றன என்றும் அறிந்து, பெரிதும் மகிழ்ந்தேன். மேலும், யான்
4 தமிழ்த் தூது அங்குச் சென்றிருந்தக்கால், மலாயாவின் பல்கலைக் கழ கம் ஒன்றை நிறுவத் திட்டங்கள் வகுத்து வந்தனர். அப் பல்கலைக் கழகத்தில், தமிழிற்கும் ஒரு பேராசிரியக் கட் டில் நிறுவ வேண்டு மென்று இலங்கைத் தமிழரும், இந்தி யத் தமிழரும் முயன்று வந்தது, என் களிப்பிற்கு இன்னு மொரு காரணமாயிற்று. ௩
தமிழ் ஒலிகள், ஊர் ஊராக, உரையாடுதலில் வேறு படுவது குறிக்கற் பாலது, மலையாள நாட்டின் எல்லையில் இருப்போர், மலையாளம் பேசுவது போல் தமிழைப் பேசு வர். சிங்கள நாட்டில் இருப்போர், சிங்களத்தைப் போல் தமிழை உரைப்பர். இவ்வாறே, மலாயாவில் சீன மொழி யைப் போலும், அமெரிக்கத் தீ வில் ஆங்கிலத்தைப் போலும் தமிழை உரைத்து வருகின்றனர். எனினும், இத்தமிழ் ஒலி வேறுபாடுகளை நீக்கி, மேல் நாட்டு மொழி களுக்கு உள்ளதைப் போன்ற பொதுநிலை ஒலிப்பு ஒன் றைப் பரப்புவது, தமிழ்ப் -பாதுகாப்பிற்குப் பெரு நலத் தினைப் பயக்கும். ௩ம் வெள்ளித் திரை நடிகரும், வானொலி உரையாளரும், இப் பொதுநிலை ஒலிப்பைக் கடைபிடிப்பாரெனின், இவ்வொலிப்பு எங்கும் எளிதில் பரவிவிடும். ஆங்கிலத்திற்கு B, B. C. இன் ஒலிப்புப் பொதுநிலை விதியா யிருத்தல் போல், தமிழிற்கும் யாதானு மொரு பொதுநிலை ஒலிப்பு வேண்டும்.
௫
தமிழன் தன் மொழியைக் காதலிப்பது போல், வேறெவரும் தம் மொழியைக் காதலிப்பதையோ, தமிழ்ப்
தமிழ்த் தூது 5 புலவர் தம் மொழியைப் போற்றுவதுபோல், வேறெவ் விலக்கியத்திலும் யாரேனும் தம் மொழியைப் போற்று வதையோ கண்டிலேன். சேக்கிழாரை விரித்துப் பார் மின். தமிழ் எனும் சொல்லைத் தம் செய்யுளில் அமைக்க வேண்டு மெனின், அதற்கு அடை இல்லாமல் எழுதப் பின்வாங்குவர், “செந்தமிழ், இன்றமிழ், வண்டமிழ், தண் டமிழ், அருந்தமிழ், செழுந்தமிழ், தீந்தமிழ், உயர்தமிழ், கோதில் தமிழ், தேன் பொழியும் செந்தமிழ்” -- என்றெல் லாம் யாழினும் இனிதிசைப்பர். இனி, தேவாரங்களைப் பாடினார் எனும் பொருளில், “தமிழ் பாடி யறைந்தார்,' தமிழ் மாலைகள் சாற்றினார்' என்று அப்புலவர் கூறு. வதை யார்தான் நினைந்து நினைந்து இன்புற்றிலர்? மேலும், திருமூலர், “என்னை நன்றாக இறைவன் படைத் தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே” என்று கூறுவதுபோலெல்லாம், பிற மொழிப் புலவர் தம் மொழி யைப் போற்றிக் கூறியதாகத் தெரியவில்லை. தமிழரின் இத் தமிழ்ப் பற்றுத்தான், மலாயாவின் தமிழர் என் விரி வுரைகளைக் கேட்க நெடுந் தொலைவிலிருந்து வருவதற்கும், யான் செய்த சிறு தொண்டைப் பெரிதாய்ப் போற்றுத்ற் கும், காரணமாக இருந்தது உலகிலிருக்கும் தமிழரனை வரும் தம் மொழிக்குத் தொண்டாற்ற ஒன்று கூடூவரேல், தமிழ் முரசு உலகெங்கும் முழங்கி நிற்கும் என்பதில் ஐய மும் உளதோ? ஆயினும், இந்தியத் தமிழ் நாட்டிலுள்ள அரசியற் கருத்து வேறுபர்டுகள் மலாயத் தமிழரையும் பிரிக்கின்றன. இவர் அரசியல் துறையில் வேற்றுமைகள் உடையரேனும், தமிழ்த் தூதுத் துறையில் ஒற்றுமை பாராட்டி ஒன்று சேர்வது, தமிழிற்கு உறு துணை யாகும்,
6 தமிழ்த் தூது ட்டு
வேற்று நாடுகளில் குடியேறி யிருக்கும் தமிழர், தமிழை ஒருவாறு மறப்பதற்கு அவர்கள் சூழ்நிலை காரண மாக இருப்பதால், அந்நாடுகளின் மொழிகள் வாயிலாக வும் தமிழின் புகழைப் பரப்புவது ௩ம் கடமை: யாகும், வேற்று நாடுகளுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கல்விப் பொருட்டாகவும், வணிகப் பொருட்டாகவும், அரசியற் பொருட்டாகவும் செல்லும் தமிழரனைவரும், தமிழ் வர லாற்றையும், தமிழ் இலக்கியங்களையும் நன்குணர்ந்து செல்வாராயின், அவரும் தமிழ்க் கலைத் தூதைப் பெரிதும் நிகழ்த்துவதற்கு வழிகளைக் காண்பர். சென்ற நூறு ஆண்டுகளில் மேல் நாட்டார் சிலர் தமிழைப் பற்றி ஒரு வாறு அறிந்திருக்கின்றனர். ஆயினும் பண்டைப் பண்பு படைத்த சீனம், ஜப்பான் முதலிய நாடுகளிலும், தமிழ்க் கலைகளும் பண்பும் பரவி யிருந்த சாவகம், புட்பகம் போன்ற நாடுகளிலும், தமிழினது புகழை எடுத்துக் கூறும் தொண்டை ஆற்றுவார் இலர். சென்ற பல ஆண்டு களாக மேற்றிசை நோக்கியே ஈம் எண்ணங்களைச் செலுத்தி வந்திருக்கின்றனம். ஆசியப் பரப்பில் நடு நாட்டவரா யிருக்கும் தமிழர் நாற்றிசையிலும் தம் எண் ணங்களைச் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றுவது இன்றி யமையாதது. இக் கீழ்த்திசை நாடூகளுக் கெல்லாம், முன் ரு கால், தமிழர், புத்த சமயத் தொண்டாற்றுதற்கும் தம் வணிகத்தைப் பெருக்குதற்கும் சென்றிருந்தனர், இங்ஙனம் உண்டாகிய பண்புத் தொடர்புகளை நாம் இழப் பது எதற்கு?
தமிழ்த் தூது 7 சா
ஜப்பான் நாட்டில் பல பல்கலைக் கழகங்கள் இருக் கின்றன. அக்கழகங்களில், வடமொழிப் பயிற்சி சிறித எவி லேனும் உளது. ஆயின், தமிழ்ப் பயிற்சியோ, அறவே இல்லை. “திராவிடக் கலைகளைப் பற்றியும், பண் பைப் பற்றியும், யாம் அறிய விரும்புகின்றனம். ஜப்பா னிய மொழியில் அவற்றைப் பற்றி அறியத் தக்க நூல்கள் எமக்குக் கிடைத்தில, ஆங்கிலத்திலும் மிகக் குறைவே,” என்று, ஜப்பானில், கீழ்த்திசைக் கலைமொழி யாசிரிய ரொருவர் எனக்குக் கூறினர். ஆயினும் பல நூல் நிலை யங்களில், போப் ஐயருடைய Hand Book of Tamil Grammar என்னும் துணை நூலினைக் கண்டேன்,
தோக்கியோப் பேரூரில், மாரூசென் என்பது ஒரு புத்தக விற்பனைக் கடை. அங்குப் புது நூல்களையும், பழைய நூல்களையும், விலைக்குப் பெறலாம். அவர்களு டைய பழைய நூல் விற்பனை நிலையத்திற்குச் சென்றக் கால், போப் ஐயருடைய பல நூல்களையும், தீட்சிதரின் சிலப்பதிகார மொழி பெயர்ப்பையும் கண்டேன்.
செய்தித் தாள்கள் ஜப்பானிய நாட்டில் மிக்குயர்ந்த வளம் பெற்றுள்ளன மைனிச்சி, அஸாஹி எனும் செய் தித் தாள்கள் ஒவ்வொன்றும், முப்பது நூறாயிரம் படிக ளுக்கு மேல், நாள் தோறும், செலவாகின்றன. இவற்றின் ஆசிரியர்கள், தம் செய்தித் தாள்கள் வழியாய் ஜப்பானிய மக்களுக்கு நற்சொற்கள் சில கூறுமாறு, என்னை வேண்டி னர். அப்பொழுது, “மேற்றிசை கீழ்த்திசை வேற்றுமை கள் ஒழிந்து, உலக மாந்தர், தமிழ்ப் புலவரின் “யாதும்
2 தமிழ்த் தூது
ஊரே, யாவரும் கேளிர்” எனும் மனப் பான்மையை வளர்க்க வேண்டும்'' என்று கூறினேன். . இனி, இவ் வாறே, உலகின் வேறு பல இடங்களிலும், என் நற் சொல் லையும் கையெழுத்தையும் விரும்பியவர்க்கும், விருந்தின ரின் நூல்களிலும், சங்கப் புலவரின் இவ்வழகிய அடியி னைத் தமிழ் எழுத்தில் பொறித்து, ஒத்த மொழிபெயர்ப் பையும் கேட்பார் மொழியில் வரைந்தனன். ஆங்கிலத்தி லும், ஸ்பானிய மொழியிலும், இனிதென ஒலித்தன அச் சொற்கள்,
Every country is my country
Every man is my kinsman.
Todos los pais son mi pais
Todos los hombres son mis hermanos.
பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழைப் பற்றிய ஆங்கில நூல்கள் இல்லாமையை அறிந்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் உயர்திருவாளர் மனவாள இராமானுஜம் அவர்கள்,” என் 6வண்டுகோளுக்கு இசைந்து, ஜப்பானியப் பல்கலைக் கழகங்களுக்குப் பல நூல்களை நன்கொடையாக அளித்தார்கள். இவ்வாறு, நன்கொடையாக நூல்களை உலகெங்கும் அனுப்பித் தமி ழின் உரிமைகளை நிலை நாட்டவும் கூடும். தமிழ் நாட்டு வள்ளல்கள் தம் தமிழ்த் தொண்டை இம் முறையில் நிகழ்த்தலாம்,
யான் தமிழ் நாட்டை விட்டுத் தோக்கியோவை அடைந்து இரண்டு கிழமைக ளாயின பின், ஈண்பரொரு வர் என்னை விருந்துக்கு அழைத்தார், அவ் விருந்தில்
| தமிழ்த் தூது 9 எனக்குப் பெரு மகிழ். வூட்ட எண்ணி, ஜப்பானிய உணவை வழங்காது, தமிழ் உணவாகிய சோறும் கறியும் வழங்கினார். உண்ணும் பொழுது, அவர் தம் வானொலிப் பெட்டியை அணுகி, அதனை இயக்கினார். உடனே புது டில்லியி லிருந்து தமிழ்ப் பாட்டுக் கேட்டது. இவ்வளவு தொலைவிலும் நாவுக்கும் செவிக்கும் தமிழ் விருந்து கிடைத்ததே என எண்ணி மகிழ்ந்தேன். ஆயினும், புது டில்லியி லிருந்து வந்த தமிழ்ச் செய்தியும், இசையும், வட மொழி ஒலிப்புடையன வாகவே இருந்தன. தமிழில் இல் லாத ஒலிப்புக்களையும் தேற்றங்களையும், இந்தியவானொலி நிலையத்தி லிருந்து இடை விடாது பரப்பிக்கொண் டிருக் கின்றனர். தமிழ் ஒலிபரப்பு தமிழ் ஒலிப்புடைய தாகவே அமையுமாறு தமிழர் கடைப்பிடியாய் நிற்றல், ௩ம் மொழி யின் பாதுகாப்பிற்கு ஓர் அடிப்படை யாகும்.
ஜப்பானிய மொழி திராவிட மொழிகளுடன் தொடர் புடைய மொழி யன்று. ஆயினும், தமிழைப் போல் ஓட்டு நிலை வகுப்பினைச் சார்ந்தது. ஜப்பானிய செய்யுட்களில், இறைச்சி போன்ற சில பண்புகள் உள. நம் சங்க இலக் கிய அகப் பாடல்களின் உரையாசிரியர், அப் பாடல்களுக் குக் கொளு எழுதியிருப்பது போல, ஜப்பானியப் பாடல் களுக்கும், அந் நாட்டுப் புலவர் கொளு எழுதி யுள்ளனர். சிறப்பாக, ஜப்பானிய இலக்கியத்தில் தங்கா எனப்படும் செய்யுள் முப்பத்தோ ரசைகளைப். பேரெல்லையாகக் கொண்டு, ௩ம் குறுந்தொகைச் செய்யுட்களைப் போல், கருத்திலும், கொளுவிலும் விளங்குகின்றது.
ஜப்பானியர் இயற்கையின் எழிலில் பெரிதும் ஈடு பட்டு வளர்பவர், மலர்களைச் செப்பில் ஒழுங்குபடுத்தி
10 தமிழ்த் தூது
வைப்பதில், அவர்கள் தம் பெண்மணிகளுக்குச் சிறப்பான பயிற்சி அளித்து வருகின்றனர். ஆயினும், ஹாவாய்த் தீவுகளில், மலர்களையும் மாலைகளையும் இன்னும் பெரி தாய்ப் பேணுகின்றனர். ஹாவாய்த் தீவுகளுக்கு யான் சென்றபொழுது, சங்க இலக்கிய காலத்தின் நினைவு என்னை யறியாமலே எனக்குத் தோன்றிற்று, ஏனெனில், அங்குத் துறைமுகத்திற்கு வந்த மக்களனைவரும், கண்ணி யும், மாலையும், தாரும், கோதையும் அணிந்தே வந்தனர். விருந்தாக வந்தவர்க்கு மாலைகளைச் சூட்டினர், வழிய னுப்புவோர்க்கும் மாலைகளைச் சூட்டி விடை யளித்தனர், பாடினர். அலோஹா எனும் ஹாவாய் இசையினைப் பண் ணுடன் இசைத்தனர். சிலர் தழை யுடைகளை அணிந்து வந்திருந்தனர். இப் பெண்டிரும் ஆடவரும் சங்க காலத் தமிழ் மக்களைப் போல் எனக்குத் தோன்றினர் என்பதில், சிறிதேனும் உயர்வு நவிற்சி யின்று.
௭
ஹாவாய்த் தீவில், விண்ணும் மண்ணும் எழில்படைத் திருக்கின்றன. தெளிவான நீல வானம், நிலத்தைச் சூழ்ந்த பசுமையான ஒலி கடல் நீர், பறவைகள், பூக்கள், மரஞ் செடிகள், இவை யாவும், யான் கண்ட வேறு ஊர் களில் இல்லா நிறத்தையும், மணத்தையும், படைத்தன வாய் இருந்தன. என் உலகச் செலவில், யான் கண்ட நாடுகளில், ஹாவாய்த் தீவுகளே எழிலிற் சிறந்தவை, இங் குள்ள வெப்பதட்ப நிலைகள் அஞ்சத்தக்கன வல்ல. என் றும் உடல் நலத்துக்கு உறு துணை யானவையே,
தமிழ்த் தூது 11 பசிபிக் பெருங்கடலின் நடுவிலிருக்கும் இத் தீவுகள், கீழ்த்திசை நாடுகளையும், மேற்றிசை நாடுகளையும் இணைக் கும் பாலமாய், விளங்குகின்றன. .ஹாவாய்த் தீவில் யான் தங்கிய போது, அங்குக் கீழ்த்திசை மேற்றிசைத் தத்து வப் பேரறிஞர் மாநாடூ நிகழ்ந்தது. இத்தகைய பேரவை யைக் கூட்டுவதற்கு, இதை விடப் பொருத்தமான இடத் தைத் தெரிந்தெடுப்பது அரிது. ஹாவாய்த் தீவுகளிலும், பொதுவாகப் பசிபிக் பெருங் கடலின் தீவுகளிலும், ௩ம் சங்க காலப் பழக்க வழக்கங்களிற் சில இடம் பெறுவதா கத் தோன்றுகின்றன. மலர்களை அக வொழுக்கத்திற்கும் புற வொழுக்கத்திற்கும் அறிகுறிகளாகக் கையாண்டு வரு கின்றனர். இந் நாட்டவர், முற்காலத்தில், பெரும்பாலும் இந்திய நாடுகளுடன் தொடர்புடையவ ராகவே இருந்தி ரப்பர் போலும். இவர்களின் வரலாற்றை மேலும் அறிய விரும்புபவர், ஆசிரியர் பீற்றர் பக் (eter Buck) என்பவர் எழுதிய Vikings of the Sunrise என்னும் நூலைப் படித்து அறிக,
ஹாவாய்த் தீவில் வாட்டூமல் எனும் இந்திய வணிகர் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார். அவர் சிந்து மாகாணத்திலுள்ள ஹைதரபாத் எனும் ஊரவர். ஹாவா யில் பெருஞ்செல்வம் படைத்த வணிகராக விளங்குகின்ற னர். அவர் அமெரிக்கப் பெண்மணியை மணம் செய்த னர், இம் மணத்தால் நிகழ்ந்த இந்திய-அமெரிக்க உற வின் பயனாக, இவரிருவரும் தம் செல்வத்தின் ஒரு பகு தியை முதற் பணமாக நிறுவி, இந்தியாவில் அமெரிக்கக் கலைகளைப் பற்றியும், அமெரிக்காவில் இந்தியக் கலைகளைப் _ பற்றியும், ஆசிரியர் வழியாக அறிவு பரப்பி வருகின்றனர்.
12 தமிழ்த் தூது
இத் தொண்டிற்கு அவர் ஒதுக்கிய முதல், பதினைந்து நூறா யிரம் வெண் பொற்காசுகள். (பதினைந்து இலட்சம் ரூபாய்). இவ்வாறு, தமிழ்ச் செல்வர் அனைவரும் முதல் திரட்டி, தமிழ்த் தூது நிகழ்த்துவ ராயின், ௩ம் கலைகள் பாரெங்கும் பரவுவதற்கு வழி காண்பர்,
ஹாவாய்த் தீவுகளில் மொலோக்காய் என்பது தனக் கென வாழாப் பிறர்க்குரியாளன் தன்மை .வரலாற்றில் பெயர் பெற்றது. இங்கேதான், அருள்மறைத் திருவாளர் தமியான் அடிகள் என்பார், தொழுநோயினர் பொருட்டுத் தம் வாழ்க்கையை வேள்வி செய்தார். இவர் வாழ்ந்த இல் லத்தையும், சூழ் நிலையையும் காணுமாறு, ஆங்குச் சென் றேன், அவண்வதியுந் தொழுநோயாளரைப் பேணி மேற்பார்த்து வரும் கனனியர், தமிழ் நாட்டின் தொழு மருத்துவ நிலையங்களைப் பற்றி நன்கறிந்திருந்தனர் மொலோக்காய்க்குச் சென்ற முதற்றமிழன் நான் எனக் கருதி, அன்னார், யான் மீண்டும் வந்து வான் ஊர்தி இவரும் வரைக்கும் தமிழ் நாட்டின் பற்பலபொருள் பற்றி என்னை இடை விடாது உசாவ லாயினர்,
அ
ஹாவாய்த் தீவுகளை ஐக்கிய அமெரிக்காவின் வாயில் என்று கூறுவர். இத் தீவுஈளி லிருந்து ஐக்கிய அமெரிக் காவின் மேற்குக் கரை இரண்டாயிரம் கல்தொலைவி லிருக் கின்றது. எனினும், ஹாவாய்த் தீவினர் அதனை அக்கரை Mainland என்று அழைக்கின்றனர்.நண்பகலில் வானூர்தி ஏறினால். அன்று மாலை, சன்பிரான்சிஸ்கோ எனும்
- பேரூர்க்குப் போய்ச் சேரலாம். ஐக் கிய அமெரிக்காவி
தமிழ்த் தூது 13 லிருப்பவர், பிறநாடுகளைப் பற்றியும், பிற மக்களைப் பற்றி யும், பிற இலக்கியங்களைப் பற்றியும் அறிய அவா உடைய வர். அவர்களுடைய பல்கலைக் கழகங்களிலும், கல்லூரி களிலும், கூட்டங்களிலும், வேற்று நாட்டுச் சொற்பொழி வாளரை அழைப்பது பெரு வழக்காம். சொற்பொழிவுகள் கேட்பதிலும்... விருந்துகளுடன் கூட்டங்களைக் கூட்டு வதிலும், விருந்தோடு விரிவுரைகள் நிகழ்த்துவதிலும், ஐக்கிய அமெரிக்கா பிற நாடுகளைவிடத் தேர்ச்சி பெற்றது, ஆதலால், ஐக்கிய அமெரிக்காவில், ஓராண்டில், யான் தமிழைப் பற்றி இருநூறு விரிவுரைகள் நிகழ்த்தியது பெரு வியப்பன்று. பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும், கிழமைமக்கு ஒரு முறை மாணவர் பொதுக்கூட்டம் (convocation) கூட்டி, ஆசிரியரையும் பேரறிஞரையும் வரவழைத்து, விரிவுரைகள் நிகழ்த்துவிப்பர், அங்ஙனம் அழைக்கப் பெறுபவர்களுக்கு இருநூறு அல்லது முந்நூறு வெண்பொற் காசுகளைச் சம்பள மாகக் கொடுப்பர். அங்குச் சொல்வன்மை யுடைய வர் சொற்பொழிவுகள் ஆற்றுவதிலேயே தம் வாழ் நாட்களைக் கடத்தலாம். இப பல்வேறு கழகங்களுக்குச் சொற்பொழிவாளரை அனுப்ப இதற்கென வணிகக் குழுக்கள் (Agencies) இருக்கின்றன.
இனி, தமிழ்த் தொண்டாற்றுதற்கு அடுமரிக்க வானொலி நிலையங்களும் எனக்குப் பெருந்துணையாக இருந்தன. ஒவ்வொரு பெரிய நகரிலும், இரண்டு மூன்று வானொலி நிலையங்கள் உண்டு. அங்கு என்னை அழைத்துப் பேட்டி வழியாகப் பத்துப் பதினைந்து வினாடிகள் என்னைப் பற்றியும், தமிழ் நாட்டைப் பற்றியும், தமிழ்க் கலைகளைப்
14 தமிழ்த் தூது
பற்றியும், இந்திய அரசியலமைப்பைப் பற்றியும் வினவினர். ஒளிக் காட்சி வழியாகவும் என்னை மக்களுக் குக் காட்டினர். அயலாரொருவர் ஓர் ஊருக்குச் சென்றால், அவ்வூர்ச் செய்தித் தாட் செயலாளர் அவரைத் தேடிப் பிடித்து, தம் செய்தித் தாளுக்கு வேண்டிய பொருள் பற்றிக் கேட்டெழுதுவதில், மிக்க ஆர்வம் காட்டுவர். . இவ்வாறு, விரிவுரை வாயிலாகவும், வானொலி முலமாகவும், செய்தித் தாள் வழியாகவும், தமிழ்த் தூது நிகழ்த்துவது அமெரிக்காவில் எளிதாகும்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் தமிழைப் பற்றி யும், தென்னாட்டைப் பற்றியும் அறிந்தவர்கள், ஒரு சிலரே. பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பிக்க வல்ல ஆசிரியரொருவரைப் பெற முயன்றனர். ஆயினும் அவர்கள் ஒருவரைக் கிடைக்கப் பெற்றாரோ, பெற்றி லரோ, யான் அறியேன். நியுயார்க்கில் இருக்கும் மொழிப் பயிற்சிப் பள்ளிக்கூடத்தில் (Berlitz School of Langua 268), என்னை ஆசிரியராக இருக்கும்படி கேட்டனர். சில பல்கலைக் கழகங்களில் தொடர்ந்து மூன்று திங்கள்காறும் பாடம் நடத்த அழைத்தனர். எனக்குப் பலவூர்களில் விரிவுரை நிகழ்த்துவதுடன் ஓரிடத்தில் கற்றுக்கொடுப்பது அரிதாதலின், யான் உடன்படவில்லை. கொலம்பியா, ஹாவார்டூ, கலிபோர்னியா போன்ற பல்கலைக் கழகங் களில் கீழ்த்திசை நாடுகளைப் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது, ஆயினும், தமிழைப்பற்றிய ஆராய்ச்சி மிகக் குறைவேயாம். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், இந்தியக் கலைகளைப் பற்றி விரிவுரை நிகழ்த்தும் ஆசிரிய ரொருவருக்கு ந. T. ஸ்ரீநிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில்
தமிழ்த் தூது 15
எழுதிய தமிழர் வரலாற்றைக் கொடுத்தேன். அவர் அந் நூல் தமக்குப் புதியதோ ர௬லகைக் காட்டியதாகப் பேரு வகையுடன் கூறினர். மொழி நூலைக் கற்றசிலர், திராவிட மொழிகளின் தனித் தன்மையை ஒருவாறு உணர்ந்திருந் தனர், ஆயினும், இந்திய மொழிகள் என்றால், சமஸ்கிரு தம் என்றும், இந்தியக் கலைகள் என்றால், வட கலைகள் என்றும், இந்திய நாடு என்றால், சிந்து கங்கைப் பெரு வெளி என்றும், இந்தியப் பேரூர்கள் என்றால், பம்பாய், டில்லி, கல்கத்தா என்றும் நினைக்கும் அளவிற்கு, இந்தியா வின் வட பிரிவினது பெருமையையே இதுகாறும் மாறு பட உணர்ந்துள்ளனர்.
௯
இந் நாடுகளில் யான் ஆற்றிய விரிவுரைகளில்,பெரும் பாலும், தமிழைப் பற்றிய சில பொதுக் குறிப்புக்களே அமைந்துள்ளன, தமிழைப் பற்றி யாதேனும் அறி யார்க்கு, ஆராய்ச்சி யுரை நிகழ்த்துதற்கு இடமின்று. பல்வேறு கழகங்களிலும், ஊர்களிலும், வெவ்வேறு குழு வினர்க்கு உரை நிகழ்த்தியதால், ஏறக்குறைய நான்கு ஐந்து விரிவுரைகளையும், அதே கருத்துக்களையும், மீண்டும் மீண்டும் கூற வேண்டுவதாயிற்று. அமெரிக்கா இற்றை ஞான்று தோன்றிய நாடு. இன்னும் இளமை நிலையில் இருக்கின்றது, ஒரு நூற்றாண்டுகள் இரு நூற்றாண்டுகள் படைத்த இடங்கள் அல்லது பொருட்கள் என்றால், அமெ ரிக்கருக்கு மிகப் பழைய பொருட்களாகவும், இடங்களா கவும் தோன்றுவன. ஆதலால், அவர்கட்குத் தமிழர் பழ மையையும், தமிழரின் பண்டை வணிகத்தையும், இயவ னர். உரோமர் போன்றோருடன் தமிழ்நாட்டு. நட்பையும்
16 தமிழ்த் தூது
கூறிய போது, அவர்க்குப் பெரிதும் வியப்பு உண்டா யிற்று, அவருட் பெரும்பாலார் இந்திய -- இலங்கை வறுமை பற்றியும், உடல் நலம் குன்றிய மக்கள் பற்றியும், நோயுற்ற ஊர்கள் பற்றியும் கேள்விப்பட் டிருந்தனர். எனினும், தமிழ் நாட்டின் கலைகளை, தமிழ் இலக்கிய நிதிப் பெருக்கை, தமிழ் மொழியின் சிறப்பியல்பை, பழந்தமிழ்க் காதற் பாக்களை, பக்தி மாலைகளைப் பற்றிக் கேள்விப் பட்ட வர் அல்லர். அவர்கட்குத் தமிழிலக்கியத்தி லிருந்து யான் மொழி பெயர்ப்புடன் கூறிய சில பகுதிகள் இவை:-
திருக்குறளில், “அகர முதல வெழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே யுலகு'' என்னும் குறள் வெண்பாவை, விவிலிய நூலில் வரும், “நானே அகரமா யிருக்கிறேன்'' என்னும் திருமொழியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்படி கேட் டேன். மேலும், “யாம் இரப்பவை பொன்னும் பொரு ளும் போகமும் அல்ல”' “தீயினுள் தெறல் நீ, பூவினுள் நாற்றம் நீ, கல்லினுள் மணியும் நீ, சொல்லினுள் வாய்மை யும் நீ,” என்ற பரிபாடற் பகுதிள இசையுடன் உரைத்து விளக்கினேன். இனி, தமிழ் மொழியின் வியத் தகும் இயல்புகளையும், தமிழரின் இயற்கை ஈடுபாட்டினை யும், ஐந்திணை இலக்கணத்தையும், மலர் மாலைகளை ஈம் முன்னோர் கையாண்ட முறைகளையும் எடுத்துக் கூறி னேன். தமிழன்னையின் எழில் வடிவத்தைப்பற்றி, இன் னும், எனக்கு அமெரிக்கர் ஓலைகள் விடுத்துத் தெளிந்து கொள்கின்றனர்,
தமிழைப் பற்றி மேடை உரைகளை ஆங்கிலத்தில் நடாத்திய எனக்குத் தமிழில் உரையாடுவதற்கோ வாய்ப்
தமிழ்த் தூது. 17
புக் கிடைத்ததே இல்லை. வாடுனாலிப் பேட்டிகளில், யாதே னும் தமிழிற் சொல்லும்படி கேட்டால், பாரதியாரின் “செந்தமிம் நாடூ'' “யாமறிந்த மொழிகளிலே” என்ற தலைப்புப் பெற்ற செய்யுட்களில் ஒன்றைக் கூறுவேன். பன்முறை பேட்டியின் பதிவை Recorinஜg' நானே தமிழொலி கேட்பதற்காக மீண்டும் ஓர்ந்து கேட்டின்புறு வேன். தேநீர் விருந்துகளிலும், பிற நண்பர் கூட்டங்களி ் லும், என்னைத் தமிழிற் பாடக் கேட்கும் பொழுது, தமிழ் இசைப் பயிற்சி மிக்கற்ற யான், “தமிழ் மணம் கமழ வேண்டும்” “'வெண்ணிலாவும் வானும் போலே'' என்ற பாட்டுக்களைப் பாடுவேன். “செந்தமிழ் காட்டைக்! கும்மியாய்ப் பாட மீண்டும் மீண்டும் கேட்பர். நான் பாட, அவர் கை தட்டித் தாளம் போடுவர். தமிழிசை அறியார் மாட்டுத் திடமுடன் பாடுவது எளிதெனச் செயலில் அறிந்துள்ளேன்.
அமெரிக்காவில் யான் கண்ட தமிழர் ஒரு சிலரே ஆயினும், யான் அமெரிக்காவில் கண்ட தமிழ்ப் பற்று டைய தமிழர்களுள், நூற்கூட இயக்கத்தின் தலைவராகிய திருவாளர் அரங்கநாதனும், தமிழிற் புத்தகங்கள் இயற்றிய திருவாட்டி உருக்குமணி அம்மையாரும் சிறந்தவர். இவர் இருவரும், என்னைப் போல் உலகில் தமிழ்த் தூது நிகழ்த்தும் இன் றியமையாத் தன்மையை நன்குணர்ந்தோர். உருக்குமணி அம்மையார் இந்தியக் கலைகளைப் பற்றிப் பல விரிவுரைகள் அமெரிக்காவின் பல பகுதிகளில் நிகழ்த்தி வருகின்றனர்.
3
18 தமிழ்த் தூது ௧௦
பிற நாட்டில் வைகுங்கால், சிறிதேனும் தமிழ் மணம் கமழ்ந்தால், யாம் மட்டற்ற மகிழ்ச்சி எய்துவது இயல் பன்றோ? ஒருகால், இலாகுவாடியா வானூர்தி நிலையத்தில், அமெரிக்கர் ஒருவர் என்முகவெட்டைக் கண்டதும்,என்னை அணுகி, “நீவிர் தமிழ் காட்டவரோ?'” என்று வினவினார். அவ்வினா என் செவிக்கு த் தேனா யிருந்தது. கீற்றோ எனும் எக்குவதோரின் தலைககர்க்கண் ணுள்ள அரசியற் கலைச் சாலையில், எனது சொற்பொழிவு முடிந்ததும், - ஒருவர் ஓடி வந்து, தமிழில் விவிலிய நூலைக் காட்டி, “உங்கள் நாகரிகத்தைப் பற்றிக் கேள்வியுற்றே இந் நூலை வருவித்தேன். இனிமேல் தமிழ் பயின்று, இந் நூலைத் தமிழிற் படிக்கப் போகிறேன்'” என்றார். வேறோர் இடத்தில், திருத்தொண் டாற்றும் ஆங்கிலக் கன்னியர் ஒருவர், “வணக்கம், அடிகாள்! நீங்கள் எந்த ஊர்?'' என மழலைத் தமிழிற் கேட்டார், இவர், முன் ஒரு காலம் நாகர்கோவில் மடத்தி லிருந்ததாகவும், இப்பொழுது மணிலாவில் திருத்தொண்டு செய்து வருகிறதாகவும், அங்குக் கூடத் தமிழை இன்னும் பயின்று வருகிறதாகவும், அறிந்தேன். வேறொரு நாள் ஐக்கிய நாட்டுப் பேரவையி லிருக்கும் தூதர் கூடத்திற்கு (Delegates lounge) சென்றபொழுது, தமிழ் நாட்டுத் தமிழ்ச் செய்தித் தாள்கள் சில அங்கிருக்கக் கண்டு. அவற்றை விரைவாகத் திறந்து படித்தேன். என் கண்கள் முதன் முதல் பார்த்த கட்டுரை, பெரும் பேராசிரியர் ௨. வே. சாமிநாதையர் நினைவு நாளைப் பற்றியதா யிருந்தது. நியுயார்க்கில், ஐக்கிய நாட்டுப் பேரவைத் தூதர் கூடத்தில், சுதேச மித்திரன் செய்தித் தாளிலிருந்து, சாமிநாதையரின் சங்க நூற்:
தமிழ்த் தூது 19 பதிப்புக்களைப் பற்றிப் படிக்கிற தென்றால், தமிழனின் உள்ளம் இறும்பூதினை எய்தாது நிற்பது எங்ஙனம்?
நியுயார்க்கிலும், லொஸ் அஞ்சலுஸிலும், சன்பிரான் சிஸ்கோவிலும், இந்திய உணவுச் சாலைகள் உள. நியு யார்க்கில் இருப்பவை நான்கு. அவற்றின் பெயர்: Rajah, Prince,East India CurryShop, Indo-Ceylon 1௩௩. இங்கு இவர்கள் பரிமாறும் கறிகள் பல. - இவற்றின் உணவு நிரலில் (ம) “கண்டி சம்பல்,” சிங்கள மிளகு தண்ணீர்', சென்னைக் கறியும் சோறும்', “தமிழ் இனிப்பு: என்றெல்லாம் விளம்பரஞ் செய்திருக்கின்றனர். இந் தியா உலகுக்கு ஈந்த நலங்களில் கறியே சிறந்த தென்று ஓர் ஆசிரியர் இடக்காகச் செப்பினா ராயினும், ஒரு நாட்ட வரின் நாகரிகத்தை அறிவதற்கு, அவரின் உணவும் ஒரு வாயி லாவது உண்மை. என் அமெரிக்க நண்பரோடு அமைதியாய் உரையாட விரும்பும் போதெல்லாம், அவரை இவ் 'இந்திய உணவுச் சாலைகளுக்கு என் விருந்தாக அழைப்பேன். அமெரிக்கரைச் செவிக்குணவு தருதலால் மட்டூ மன்றி, வயிற்றுக் குணவு தருதலாலும் வெல்ல முடி. யும். நான் முதன் முதல் “இராஜா!” எனும் உணவுச் சாலைக்குச் சென்ற பொழுது, என்னைத் தென்னாட்டவ ரென்று உணர்ந்த ஊழியன், ஹிந்தி இசைத் தட்டுகளை நீக்கி, “தெருவில் வாராண்டி'” என்ற தமிழ் இசைத் தட் டைப் போட்டான். நியுயார்க்கில் “தெருவில் வாராண்டி” கேட்டதை நினைக்கையில், இன்னும் ௩கை யாகின்றது.
வேற்று நாடுகளில் வாழும் பொழுது, தமிழ்ப் பற்றும் ஆற்றலும் மிகுவதை, வேற்று நாடுகளில் வாழ்ந்துள்ள
20 தமிழ்த் தூது
தமிழர் உண்மையென உணர்வர். உரோமை மாநகரில் யான் உறைந்த குரு மடத்திலும், -திருமறைநூற் கல்வி பயின்ற பல்கலைக் கழகத்திலும், நாற்பத்து மூன்று வெவ் வேறு நாடுகளிலிருந்து வந்தோர் என்னுடன் :மாணாக்க - ராய் இருந்தனர், அவருடன் ஐந்து ஆண்டுகள் (1984 1939) வாழ்ந்ததின் பயனாகவே, பரந்த உலக் மனப் பான்மை படைத்தே னாயினேன். அவரிடை “வதியுங்கால், என் தமிழ்ப் பற்று மிகுந்ததே அன்றிக் குறைந்திலது, அயல் நாட்டுத் தொடர்பாலும், அயல் மொழிப் பயிற்சியா லும், ௩ம் நாட்டு மொழிப் பற்று நனி சிறந்து வளர்கின் றது. பிற மொழிகளுடன் தமிழைச் சீர்தூக்கிப் பார்க் கும் பெரும் பேற்றினையும் அடைகின்றோம்.
அவ்வாண்டுகளில் உரோமை மாநகரில் ஒருங்கு வாழ்ந்த தமிழர் எண்மர், யாம் “வீரமாமுனிவர் கழகம்” என ஒன்று குரு மடத்தில் நிறுவி, தமிழை ஆண்டும் ஒரு சிறிது பயின்று வந்தனம். வத்திக்கான் வானொலி நிலை யத்தி லிருந்து தமிழில் ஒலி பரப்பும் வாய்ப்பும் பன் முறை பெற்றோம். அங்ஙனம் ஒலி பரப்புந் தோறும் “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை”' ரெய்தோம் எனக் கருதிக் களிப்புற்றோம். ஆங்கு வதியும் காலத்தேதான், அயல் நாடு செல்லும் தமிழ் மாணவர் தமிழ்ப் பயிற்சி மிக்குளரேல், எத்துணை உயரிய தமிழ்த் தொண்டு இயற்றுதல் கூடும் என்பது இனிதுணர்ந்தேன், இலண்டன் மா௩கரிலும், தமிழ் மாணவர் ஒருங்கியைந்து தமிழ்க் கழகம் நிறுவி யுள்ளனர் என்பது. இதனைப் படிப் போர் அறிந்திருத்தல் கூடும்.
தமிழ்த் தூது 21 நக
தமிழ்த் தூதிற்கென வேற்று நாடு செல்வோர், திரு வள்ளுவர் கூறும் மூன்று பண்புகளில் ( முதன்மை சான்றவ ராய் இருத்தல், இன்றியமையாது வேண்டப்படுவ தொன்றும்.
“அறிவுரு வரராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு”
இயற்கையாகிய அறிவும், கண்டார் விரும்பும் தோற் றப் பொலிவும், பலரோடும் பலகாலும் ஆராயப்பட்ட கல் வியும் என, நன்கு மதித் தற் கேதுவாய இம் மூன்றன் செறிவு உடையவன், அவ் வினைக்குச் செல்லுதல் வேண் டூம். அவ்வண்ணம், அப்பண்பு அமையப் பெற்ற தூதர், அவ் வேற்று நாடுகளில், அவ் வேற்று மொழியை நன்றா கப் பேச அறிந்த மேடைக் கலை வல்லு௩ராய் இருத்தல் வேண்டும் என்பது ஒரு தலை. வேற்று நாட்டினரிடை, அவர் முறையில், அவர் பழக்க வழக்கங்களின் படியே அவர் பேசுவது போல் அவர் மொழியைப் பேசி, அவர் உண்பது போல் அவர் உணவை உண்டு, அவருடன் பழகுதல் வேண்டும்.
௧௨
அமெரிக்காவில், மூன்று திங்கள், தமிழர் எவரையும் காணும் வாய்ப்புப் பெறாத யான், தமிழின் ஒலி இன் பத்தை நுகரக் கருதி, ஒரு காள் திருக்குறளை எடுத்து,
22 தமிழ்த் தூது வாய் விட்டுப் படிக்கத் தொடங்கினேன். நூலைத் திறந்த தும் முதன் முதல் யான் கண்ட குறட்பா:--
“இருவே றுலகத் தியற்கை; திருவேறு, தெள்ளிய ராதலும் வேறு”
அந்நேரத்தில், இச் செய்யுளின் ஆழ்ந்த கருத் தொன்று எனக்குத் தோன்றிற்று. . அஃது உரைகாரர் கருத்து மன்று, ஊழைப் பற்றிய கருத்துமன்று; என் அருள் மறையின் கருத்தொன்று அச் சொற்களில் பொதிந் திருப்பது கண்டேன். அவ்வடிகளின் மென்மையையும் இனிமையையும் நுகர்ந்தேன். அப்பொழுதும், இத் துணைச் சிறப்புப் பெற்ற இலக்கியத்தையும், அதனைத் தோற்றுவித்த மொழியையும், பரப்புதல் வேண்டுமெனும் துணிவும். மிகுதியாய் ஏற்பட்டது, இயேசுவின் கோவி லையும், திசை நோக்கித் தமிழ் மொழியை எனக்குத் தாய் மொழியாகத் தந்த இறைவனையும், கைகூப்பி வணங்கி னேன்.
தமிழ்க் கலைகளை விரிவுரைகளோடு வெள்ளித் திரை வாயிலாகவும் விளக்குவதற்குத் துணையாக, என்பால் இரு சினிமாப் படச் சுருள்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று தமிழ் நாட்டின் கட்டடங்களையும், மாளிகைகளையும், கோயில்களையும் காட்டுவது; பிறிதொன்று தமிழ் நாட்டி யக் கலையை உணர்த்துவது, இவ் விரு படங்களையும், மேல் நாட்டினர் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பன் னீராட்டைப் பெதும்பை 'தில்லான' ஆடிய படத்தைக் கண்ணுற்று மகிழாதார் இலர். “நீங்கள் காட்டிய நட னப் படம், இளம் அருவியின் சலசலவெனும் ஓட்டம்
தமிழ்த் தூது 23
போல் இருந்தது '' என்று அமெரிக்க எழுத்தாளர் ஒரு வர் அழகாக எனக்குக் கூறினார்,
வட அமெரிக்காவில் மக்கள் தமிழ்க் கலைகளைப் பற்றி அறியப் பெரிதும் அவா வுடையரா யிருக்கின்றனர். தென் அமெரிக்காவிலோ, பண்டை நாகரிகம் படைத்தவரும் பழங்குடிகளுமான இலத்தீன் வழித்தோன்றல்கள், இந்தி யாவின் பெருமையை நன்றாய் அறிந்திருப்பதாகத் தெரிந் தது, இலத்தீன்- அமெரிக்க நாடுகளில் பழைய நாகரிகங் கள் அரும்பி மலர்ந்து வாடின. மெக்ஸிகோவில் அஸ்தெக் கரும், தோல்தெக்கரும், பெரூவில் இன்காகரும், வர லாற்று நூல்களில் பெயரும் புகழும் பெற்ற மக்கள், அவர் களுடைய கோட்டைகளையும் மாளிகைகளையும் நான் கண்டபோது, திராவிட மக்களின் கட்டடத் திறன் என் நினைவிலே தோன்றியது. இவர்கள், இத்திறனில், கட்ட டக் கலைஞருடைய வியப்பையும் புகழையும் பெற்றவ ராயி னும், இலக்கிய நூல்களை யாத்தவ ரல்லர். இப்பண்டை நாகரிகங்களுடன் தமிழ்ப் பண்பு நிலையைப் பிணைத்துப் படித்து ஆராய்ச்சி செய்வதும், தமிழாராய்ச்சியின் புதிய தொரு துறையாகும்.
தென் அமெரிக்காவில் ஒரு திங்களாகப் பல நாடூ களுக்குச் சென்று விரிவுரைகள் நிகழ்த்தி வந்தேன், ஆங் குள்ள செய்தித் தாள்கள், தமிழையும், என் கருத்துக்களை யும் பற்றிய என் உரைகளை, விரிவாக எடுத்துக் கூறின, அவர்கள் தங்கள் ஊர்களில் நான் பல திங்கள் தங்க வேண்டூமென்று என்னைக் கேட்டனர். அங்குச் செல்லும் தமிழர் மிகச் சிலராகலின், என்னிற் பழைமையையும்
24 தமிழ்த் தூது
புதுமையையும் ஒருங்கே கண்டனர். தம் மொழி யாகிய இஸ்பானிய மோழியில் யான் தமிழ்ப் பண்பினை எடுத்துக் கூறியது, அவர்கட்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது, தென் அமெரிக்க நாடூகளில்.,ஆர்கெண்டீனா என்னும் குடி யரசு, முன்னேற்றத்தில் சிறப்புற்று வளர்கின்றது. ஆங் குள்ள பல்கலைக் கழகங்கள் இந்தியக் கலைகளை அறிய விரும்புகின்றன. ஆங்கெல்லாம், நம்மவர் தமிழ்த் தூதா கச் சென்று, விரிவுரைகள் நிகழ்த்துதல் வேண்டும். நிலப் பிரிவையும், மக்கள் தொகையையும், ஒருங்கே ஆரா யும் பொழுது, இஸ்பானிய மொழி ஆங்கிலத்தைப் போல் உலகில் முதன்மை பெற்றிருப்பதால்,ஆங்கிலத்தில் நம் நூல்களை மொழி பெயர்ப்பது போல், இஸ்பானிய மொழியிலும் அவற்றை மொழி பெயர்த்தால், உலகிற் பலர் நம்மைப் பற்றி அறிய வழி காண்போம்.
வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும், பதினான்கு திங்கள் யான் தங்கினே னாதலின், பின்னர்த் தொண்டியற்ற நேர மின்மையால், விரைந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டுவ தாயிற்று. எனவே, இரு திங்களுக்குள், வட அபிரிக்காவின் பழைமை படைத்த ஊர்களையும், எகிப்து நாட்டையும், பலத்தீன் சீரியா போன்ற இடங் களில் பண்டை நாகரிகங்களின் நிலைக்களங்களையும் பார்த்துத் திரும்பினேன்.
இதற்கு இடையில், கலைக்கு உறைவிடமாய் விளங்கும் உரோமாபுரிக்கு, புனித ஆண்டின் வரங்களைப் பெறுமாறு மீண்டும் சென்றேன். நீலத் கடலாகிய நடு நிலக் கடலை உடுத்திய நாடுகள், என்றும் பண்பாட்டில், சிறந்தவை,
தமிழ்த் தூது 25
அவற்றை இன்னும் கூர்ந்து ஆராய்ந்து, ஆங்குள்ள மக்க ளுக்கு எதிர் காலத்தில் தமிழ்த் தூது நிகழ்த்துமாறு, எனக்குப் பல அழைப்புகள் வந்து சேர்ந்தன. அத் தொண்டை ஆற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பது எதிர் கால மறை பொருள்.
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
சிறப்பியல்பு
தொல்காப்பியரது நூலுக்குப் பாயிரம் எழுதப் போந்த ஆசிரியர், ஈழநா டென்பது இன்றமிழ் நாடென் பதை முற்றும் மறந்து, “ வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” எனத் தமிழக எல்லை வகுத்தோதி யொழிந்தார். தொன்று தொட்டு ஒன்றா யிருந்த தமிழ் நாடு பற்பல கடல்கோள்க ளின் பின் இரண்டு படவே, ஈழநாடு ஏனைத் தமிழகத்தி னின்றும் துணிப்புண்டு, தனி நாடாயிற்று, எனினும், தமிழ்த் தாயின் தவப் புதல்வரே ஈண்டு முளராதலின், இவ் ஈழ எழில் நாட்டை இந்தியத் தமிழ் நாட்டுடன் இணைக்கும் பாலம் என்றும் இருந்தே வந்துள்ளது. அனு மன் குமுதன் ஆதியோர் குலவரை முதலியவற்றால் நல முறு பாலம் அமைத்தனர். ஆயினும், அன்னார் அன்று அமைத்த மலைப் பாலம், இன்று தமிழ்ப் பெரு மக்கள் இத்துணைத் திரளாய்க் கூடி அமைக்கும் கலைப் பாலம் போல், பெருமையும் வன்மையும் பெற்ற தாகுமோ? இக் கவின் கலைப் பாலத்தை நிறுவ முன்வந்த பெரியோர் பல ருடன், யானும், சேது என்னும் அவ்வணைக் குதவிய சிறு அணிலே போலும் சேர்ந்து, சங்க இலக்கியத் தண்கடல் மூழ்கி, ஆராய்ச்சித் துறை என்னும் அழகிய கரையின் அரு மணலிலே புரண்டு, அரிதாய் என்மீ தொட்டிய சிறு
- யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நான்காம் தமிழ் விழாவில் நிகழ்த்திய சிற்றுரை, ர
2 232
ச்ங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 97
மணல் மணிகளைச் சிதறி உதவும் சிறு தொண்டினைச் செய்து மகிழ விழைந்தேனே யன்றி வேறல்ல பிற,
ஐக்கிய அமெரிக்க நாடுகளில், சென்ற ஆண்டு,யான் தமிழின் பெருமை பற்றிய. விரிவுரைகள் பல நிகழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றேன். அக்காலை, தமிழின் தொன்மை யைப் பற்றி யான் குறிப்பிடுந் தோறும், அமெரிக்க மக்கள் அடைந்த வியப்பிற் களவில்லை. ஐக்கிய அமெரிக்கா இக் காலநாடு, இடங்களோ, பொருட்களோ, ஐம்பது அல் லது நூறு ஆண்டுகளே பழைமை யுடையன. ஆயினும், அவை அமெரிக்கருக்குக் கழிபே ருவகை பூட்டும் பெரும் பழைமைப் பொருட்களாய்த் தோன்றுகின்றன. இத்த கைய மனப் பான்மை மிகுந்து காணும் நாட்டிலே, நானூறு ஐந்நூறு ஆண்டுகள் அல்ல, நாலாயிரம் ஐயாயி ரம் ஆண்டுகட்கு முன்னமே நிலவியிருந்த தென நிலைநாட் டப் பட்டுள்ள நமது சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி யும், நாம் இன்று பொன்னே போல் போற்றும் தொன்னூ லான தொல்காப்பியத்தைப் பற்றியும், சங்க இலக்கியங் களைப் பற்றியும் நான் கூறிய பொழுது, அங்குள்ளோர் அடைந்த வியப்பினை யான் என்னென் றுரைப்பேன்?
“தொன்மைய வாம் எனும் எவையும் ஈன் ராகா.,இன்று தோன் றியநூல் எனும் எவையும் தீ தாகா”
என்ற சித்தாந்தப் புலவர் கூற்று உண்மை யாயினும், உலக இலக்கிய வரலாற்றில், இலக்கியத் தொன்மையி லிருந்து பல்லாயிர ஆண்டுகளாகப் பண்புயர்வும், கலை வளர்ச்சியும், கலைச் சிறப்பும், ஒப்பற்ற முறையில் நிகழ்ந் தமைந்து கிடந்த தென்று காட்டப் . படூமாயின், . அத்
28 சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
தொன்மையானது இலக்கியத்தின் பெருமைக்கு ஓர் உண் மைச் சான்று என்பதை மறுத்தற் கியலுமோ? வெர்ஜில்
- என்னும் பெருமை வாய்ந்த இலத்தீன் புலவரை என் இரு கைகளில் எடூத்து ஏந்திப் படித்து மகிழ்ந்துள்ளேன், எகிப்து நாட்டின் தொன்மை வாய்ந்த ஏடுகளையும், எகிப்து நாகரிகத்தின் “எழில் வாய்ந்த பழம் பெருஞ் சின் னங்களையும் புரட்டிப் பார்த்து வியந்துள்ளேன், ௩டு அமெரிக்கர் தென் அமெரிக்க ராகிய இன்கா, அஸ்தெக் பண்பிற்கு அறிகுறிகளான கோட்டைகளையும், கட்டடங் களையும், என் இரு கண்ணாரக் கண்டு களித்துள்ளேன். எனினும், தொல்காப்பியரை என் கைகளில் ஏந்தி விரிக் கும் பொழுது எனக்கு ஏற்படும் அத்தகைய உள்ளக் கிளர்ச்சி, வேறு எந்நூலாலும் ஏற்படூவதின்று என்பது உண்மை. ஈம் பண்டைத் தமிழ் நூல்களைத் தொட்டதும், பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து பண்பில் வளர்ந்து திருந்திய இலக்கிய இலக்கணப் பயிற்சி, ௩ம் மனக்கண் முன், நிழற் படம் போல் எழுந்து நிற்பதே இதற்குக் காரணம்,
நாம் இருப்பது இப் பெருஞாலத்தின் ஒரு சிறு மூலை. இஞ்ஞாலத்து மூலை முடுக்கின் கண்ணே, இத்துணைச் சிறந்த நாகரிகமும் வள மார்ந்த இலக்கியமும் தோன்றி வளர்ந்து செழித்து விளங்கிய புதுமையை, சில வேளைக ளில் நாமே நம்புதற் கியலாது போகின்றது, வானுற வோங்கி வளம்பெற வளர்ந்துள்ள இப் பனந் தோப்புக்க ளின் சூழ்நிலையில், உலகில் சிறந்து விளங்கிய இலக்கியம் ஒன்று இடம்.பெற்று, எழுந்து, வளர்ந்து, உருவாயிற்று என்று ௩ம்புவது, எளிதன்று. இது *மிகைபடக் கூறுதல்”, -
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 29 “உயர்வு நவிற்சி' என்று, 'இகழ்ந் தொதுக்குவாரு முளர். எமது இந்த ஈழ நாட்டு நிலையையே பார்மின். வேற்று மொழியினரும் வேற்று நாட்டவரும் இக் கடல்சூழ் இலங் கையில் கால் வைக்கு முன்னரே, தமிழர் இங்கு வாழ்ந்த னர்; தமிழ் மொழி இங்குப் பரவிப் பண்புயர்ந்து நின்றது. ஆயினும், இன்று எழுதிக் குவிக்கப் பெறும் எண்ணற்ற வரலாற்றுச் சுவடிகள், தமிழர் இலங்கையில் பிற்காலத்தில் குடியேறிய மக்கள் என்றே பிழை படக் கூறி வருகின்றன.
இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்குமின். Discovery of India என்றும், History of Indian Literature என்றும், பலபடப் புனைந்து வெளிவரும் ஏடு களை விரித்துப் பார்மின். மாக்ஸ் முல்லர், வின்றர்னிட்ஸ் போன்றவர் முதலாய், வடமொழி இலக்கியத்தின் பெருமை யையே விரித்துக் கூறுவர். அவ் விந்திய இலக்கியங்களின் வரலாற்றிலே, தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ, திராவிட நாகரிகத்தைப் பற்றியோ, ஒரு சொல்லேனும், ஒரு குறிப் பேனும், ஒரு கருத்தேனும், “காணக் கிடையா. இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் . கலைகள், இந்திய மொழிகள் என அவர் மொழிவன வெல்லாம், திராவிடப் பண்பு, திராவிட நாகரிகம், திராவிடக் கலைகள், திராவிட மொழிகள், இவற்றையே அடிப்படை யாகக் கொண் டவை.ஆயினும், பல்லாண்டுகளாக, ௩டூவுகிலை கடந்தோர் பலர், இவ்வுண்மையை மறைத்தும், திரித்தும், ஒழித்தும் நூல்கள் யாத்தமையின், இன்று இவ்வுண்மையை எடுத் துக் கூறுவது தானும், மக்கள் மனத்தில் ஐயம் விளைப்ப தாக இருக்கின்றது. அங்ஙனம் எடுத்துக் கூறுதற்குத் தானும், பெரிதும் மனத் துணிவு வேண்டற்பால தாயிற்று.
90 சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
தமிழராகிய நாமும், நமது இந்திய மொழிகளிலே தானும், ௩ம் தமிழைப் பற்றிய உண்மைகளை இதுகாறும் ,கூறினேம் அல்லேம். “மெய்யுடை யொருவன் சொல்லமாட் டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே'” “பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே''
ஆதலின், உலகம் ௩ம்மை உணராமலும், ஈாம்தாமே நம்மை யுணராமலும், பாமரராய், விலங்குகளாய், உலக னைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழர் எனக் கொண்டு, இங்கு உயிர் வாழ்ந்து வந்துள் ளோம், இன்று இத் தமிழ்க் கோயிலில் நிகழும் தமிழ் விழா, உலகில் தமிழ் காட்டின் பெருமையையும், தமிழ் மொழியின் பெருமையையும். நிலை நாட்டும் புதியதோர் இயக்கத்தை உண்டாக்க வல்ல தாயின், அது தமிழ் மக்க ளுக்கே பெருமை தருதலால், நாம் அனைவோரும் நமக்குத் தாமே நன்மை பல பயக்கும் நற்டுறாண்டைச் செய்தோ மாவோம்.
நமது கைக்கு எட்டி யுள்ள நூல்களில், கடைச் சங்க நூல்கள் எல்லாம், தமிழ் இலக்கிய காலத்தின் உயர்வு நிலை யில் இயற்றப் பெற்றன வெனக் கூறுவா ருளர். எனினும், . பற்பல சான்றுகளி லிருந்து, அவ் விலக்கிய மெல்லாம் தமிழ் உயர்வு நிலையி லிருந்து குன் றிய ஒரு காலத்தின் இலக்கிய மென்றே கருதுதற்கு இடமுண்டு. குன்றுங் காலையில் தோன்றிய இலக்கியமே இத்துணைச் சிறப்பாக விளங்கு மெனின், தலைக் கால உயர்வு நிலையில் மலர்ந்த
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 91
இலக்கியப் பண்பு எத்துணைச் சிறப்பினதாய் இருந்திருத் தல் வேண்டும்!
க
இனி, சங்க இலக்கியச் சிறப்பியல்புகளுள், ௩ம் கருத் தைக் கவரும் சிறந்த பண்பு, ஒன்றே உலகம் என்ற உயரிய மனப் பான்மை யாம். வெண்டல் வில்கி என்ற அமெரிக்க அரசியல் அறிஞர் எழுதி வெளியிட்ட ஒரே உலகம் (One World) என்னும் நூலை மக்கள் இனிதாய் வரவேற்றனர். அந் நூலில் அவர் எழுதி யுள்ளன வாகிய “வருங் காலத் தில் ௩ம் சிந்தனை உலகாங்குப் பரந்திருத்தால் வேண்டும்'' (In future our thinking must be world-wide) என்னும் முதற் சொற்கள், இற்றைய இருபதாம் நூற்றாண் டில், ஏனையோர்க்குப் பெரு மகிழ்வு அளிப்பது பற்றி, தமிழ ராகிய நாம் சிறு புன்முறுவல் அரும்பி நிற்கின்றோம். ஏன்? இந்த இருபது நூற்றாண்டுகட்கு முன்னமே தானே, தமி ழறிஞர் இதனை இனிதுணர்ந் திருந்தனர். உணர்ந்ததனை உயர்ந்த சொல் வடிவில் உரைத்து முள்ளனர்.
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' (புறம். ௧௯௨)
“பெரிதே உலகம், பேணுகர் பலரே” (புறம். ௨௦௭)
“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”
(புறம் ௨௦௬) “யாதானும் நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு” (குறள். ௩௯௭)
32 சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
என்றெல்லாம் சங்க கால நூல்கள் யாண்டும் வலியுறுத் துரைத்தல் காண்க.
இவ் வுயர் பண்பு தமிழர்க்கு எங்ஙனம் அமைந்தது?
“் யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடூ பெயர்ந்த”
அதன் பயனாதவும், மொழி பெயர் தேயங்கட்கும், கடல் கடந்து வேற்று நாடுகட்கும் சென்றதன் பயனாகவும், மூவேந்தருடன் குறுநில மன்னர்க்கும், பிற நாட்டு மன் னர்க்கும் உண்டாய தொடர்பின் பயனாகவுமே, அவர் இத் தகைய பரந்து விரிந்த மனப் பான்மையையும், நோக்கங் களையும், பயின்றறிந்து வளர்த்துக் கொண்டா ராதல் வேண்டும்.
பெருமை வாய்ந்த ௩ம் சங்க இலக்கியத்தின் பிறிதோ ரியல் பியாதெனின், அஃது எத்துணைத் தொன்மை வாய்ந் ததாய் இருப்பினும், எக்காலத்தும், எந் நாட்டவர்க்கும், இலக்கியச் சுவை அளிக்க வல்ல தன்மை யாகும். ஷேக்ஸ் பியர், காளிதாசன், கம்பன் போன்ற புலவர்களைப் படித்து, அன்னார் நமது காலத்தினர் போலத் தோன்று வது கண்டு, இன்புற்று வருகின்றோம். இப் பண்பை முக் காலத்தினும் ஒத்தியல் தன்மை' எனும் பண்டை யாசி ரியரின் சொற்றொடரால் குறிக்கவும் கூடும். இக் காலத்திற் கேற்ப, நாம் அதனைத் “தற்காலத் தன்மை” (Modernity) என்ற சொல்லால் குறிப்போம். தற்காலத் தன்மை என்ற சிறப்பியல்பு உள்ளதனாலேயே, சங்க இலக்கியங்கள் என்
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 33
றும் குன்றா இளமையுடன், புதுமையும், பசுமையும், அழ “கும், பொலிவும், புதிய கருத்தும் பெற்று,
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியவாய்
என்றும், எங்கும், எவரும், தம் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துமாறு, இன்பம் பெருக்கி வருகின் றன.
உ
மேலே எடுத்துக் காட்டிய ஓருலக மனப் பான்மை யும், அதற்கு அடிப்படையான பரந்த நோக்கமும், நமது பண்பின் மற்றொரு சிறப்பியல்பிற்குக் காரண மாயின, இது “கண்ணோட்டம்” (Tolerance) எனப்படும்: பொறை எனலும் பொருந்தும், நம் தொகை நூல்கள் பல் வேறு சமயக் கோட்பாடுகளையும், அரசியல் தத்துவக் கொள்கைகளையும், தம்முள் முரண்படும் பழக்க வழக்கங் களையும் காட்டுவன. இச் செய்யுட்களை இயற்றியவர் ஒரு குலத்தார் அல்லர், ஓர் இனத்தார் அல்லர், ஓர் இடத்தார் அல்லர். அந்தணர் சிலர், அரசர் பலர், வணிகர் பலர், வேளாளர் பலர். இரவலரும் உளர், புரவலரும் உளர். ஆண் பாலரும் உளர், பெண் பாலரும் உளர், ஐந்தி ணைத் தலை மக்களும் உளர், நிலை மக்களும் உளர், வெவ் வேறு தொழில்களில் ஈடுபட்டவர் உள்ளனர். வெவ் வேறு வாழ்க்கை நிலை கொண்டவர் உள்ளனர். கூடல், உறையூர், கருவூர் முதலான பேரூர்களில் பிறங்கியவர் உளர். அரிசில் ஆலங்குடி முதலாக, வெள்ளூர் வேம்பற் றூர் ஈறாக, சிற்றூர்களில் திகழ்ந்தவரும் உளர்.
(2
94 சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
இன்று கண்ணோட்டம் (T௦lerance)என்னும் பண்பி னுக்குச் சான்றாக, இலண்டன் நகரிலிருக்கும் ஹைட் மலர் வன மூலை (Hyde Park Corner) என்னும் இடத்தினைச் சுட்டிக் காட்டுவர். ஆங்குப் பல்வேறுஅரசியல் வகுப்பினர் சமயப் பிரிவினர், கொள்கை வேறுபாட்டினர் ஆகிய கூட் டத்தவரின் சொற்பொழிவாளர், தத்தம் கருத்துக்களைத் தடையின்றி வெளியீடுவதையும், மக்கள் கேட்பதையும் காணலாம். 1800-ஆண்டுகட்கு முன்னர்த் தமிழ் நாட்டுச் சமய வாதிகள் தத்தம் கொடிகளை நிறுவி, தத்தம் சமயங் களைப் பரப்பிய முறையைக் காணப் பெறின், இக்கால மக்கள் என்ன கூறுவர்? தமிழ் நாட்டுச் சமய வரலாறு ௩ம் மக்களின் ஒப்பற்ற பெருந்தன்மைக்குச் சான்றாய் விளங்குகின்றது. இப் பெருந் தன்மைக்கு அணிகலன் களாகவே ௩ம் இலக்கியத்தில் பற்பல சமயங்களின் நூல் கள் அமைந்துள்ளன. இலத்தீன் மொழி மேல் நாட்டுச் சமயங்களின் மொழியாய் விளங்கி வந்தது. சமஸ்கிரு தத்தில் இந்தியாவின் சமயங்களைப் பற்றிய நூல்கள் எழு தப்பட்டுள்ளன. ஆயினும், தமிழிலக்கியத்தில் சிறந்து விளங்கும் பல் வேறு சமய இலக்கியங்களைப் போல்,வேறு எம் மொழியிலும் இல்லை. சைவரும், வைணவரும், புத்த ரும், சமணரும், மகம்மதியரும், கத்தோலிக்கரும், புரோட் டஸ்டாண்டாரும், ஒருங்கே இலக்கிய வுரிமை பாராட்டக் கூடிய ஒரு மொழி உண்டெனின், அம் மொழி தமிழ் மொழியே யாம். ஆதலின், பெரிய புராணம், கம்ப ராமா யணம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சீறாப் புராணம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம் போன்ற காப்பி யங்களுக்கு ஒப்பாய பல் வேறு சமயங்களுக்குரிய நூல்
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 85
கள், வேறு எந்த ஒரு மொழியின் இலக்கியத்திலும் இல்லை என்று துணிந்து கூறலாம்.
இவ்வாறே, பத்தியில் கலித்த செய்யுட்கள் தமிழில் அரும்பி மலர்ந்தது போல், வேறு எம் மொழியிலும் மலர்ந் தில. அளவிலும், சுவையிலும், தமிழிலுள்ள திருப்பாடல் கள் போல், பிற இலக்கியங்களில் இல்லை. எனவே, மொழி நூல் முறையில் எத்துணை வழுவுடையதாய் இருப்பினும், ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட் டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என் றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழி என்றும், இத்தாலியம் காதலின் மொழி என்றும் கூறு வது, ஒரு புடை ஒக்குமெனின், தமிழ் “இரக்கத்தின் மொழி' எனக் கூறுவது இனிது பொருந் தும். பத்தியின் மொழி எனலுமாம். இரக்கமும் பத்தியும் மன முருகுதலால் தோன்றும் பண்பாதல் கண்டூணர்க, தமிழில் இரங்குவது போல், வேறு எம் மொழியி லும் இரங்குவது அரிது. தமிழில் இரப்பது போல, வேறு எம் மொழியில் இரப்பதும் அரிதே. எனவே, பரிபாடல், தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந் தம், திருவாய்மொழி, திருப்புகழ், திருவருட்பாப் பனுவல்கள், தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றவை இயற்கையேயாம். சங்க இலக்கியத்தின் அகத் துறைத் தொகுதிகளிலும், தமிழரின் முழுமுதற் கடவுள் வழிபாட்டினால் பொங்கி எழுந்த அன்பிற்குச் சான்றுகள்
96 சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
உள. தமிழரின் தன்மையைக் காட்டூவதற்குக் கல்லையும் கரைக்கும் இப் பரிபாடல் அடிகளே சாலும்:-
“யாம் இரப்பவை, பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்.” (பரி. ௫: ௭௯, ௮௦) ௩
மேலும், தமிழருடைய நீதி நூல் தொகுதிகளும், நீதி மொழிகளும், நீதிக் கருத்துக்களும், சங்க இலக்கியத்தைப் பயின்று வருவோர் க ரத் தக் கவர்கின்றன. தமிழ் நாட்டு மலைகள் மிளகும், சந்தனமும், பிறவும் தந்தன, தமிழ் நாட்டுக் கடல்கள் முத் து ம், பவழமும் அளித்தன. தமிழ் காட்டுக் காடுகள் யானைக் கொம்பும், தேக்கு மரமும்
- வழங்கின. தமிழ் நாட்டு வயல்கள் நெல்லும், கரும்பும் உதவின. தமிழ் நாட்டுக் கனியறைகள் வெள்ளியும், பொன் னும், மணிகளும் ௩ல்கின. பெற்றமும், எருமையும், யாடும், தகரும், கரியும், பரியும், மான் முதலாய வன விலங்குகள் எண்ணிறந்தனவும் ஈந்த வளங்கள் எண்ணில, ஆதலால், தமிழன் திசைகள் எங்கும் சென்று, தமிழ் நாட்டின் பெரு மையை நிலை நாட்டினான். சீ ரி யா, மெசப்பொத்தேமியா, எகிப்து, பலத்தீன், இத்தலி, கிரேக்கை, சீனம், கடாரம், சாவகம் முதலிய நாடுகள், தமிழ் நாட்டுப் பொருட்களைப் பெற்றுத் தழைத் தோங்கின. இத்துடன் தமிழன் போரில் ஈடுபட்டுத் தன் வீரத்தையும், ஆண்மையையும் வளர்த்து வந்தான். போரும், தூதும், வாணிகமும் விளங்கும் நாட்டில், நீதியும் ஒருங்கே விளங்கும். நேர்மை,
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு ர்
நடுவு நிலைமை, உண்மை, வீரம் போன்ற நல்லியல்புகள், போரிலும் .வாணிகத்திலும் தலை சிறந்து நிற்றல் ஒருதலை. இரக்கம், அன்பு என்பன, செல்வமும் வீரமும் உடையவர் பால் சுரக்கும் இரு பண்புகளாம். எனவே, நீதி நூல்கள் நம் இலக்கியத்தின் பெரும் பகுதியாய் விளங்குதற்கு, ௩ம் முன்னோரின் வாழ்க்கை அமைப்பு முறையே காரணமாய்
இருந்தது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ள்
“நாடா கொன்றோ, காடா கொன்றோ, அவலா கொன்றே, மிசையா கொன்றோ, எவ்வழி ஈல்லவர் ஆடவர் ; அவ்வழி நல்லை, வாழிய நிலனே”? (புறம். ௧௮௭)
என உலகத் தியற்கை கூறிய அழகைப் பாருங்கள் ! (இதன் பொருள்: நிலமே, நீ காடு ஆனாலும் ஆகுக, காடு ஆனாலும் ஆகுக. பள்ளம் ஆனாலும் ஆகுக; மேடு ஆனா லும் ஆகுக. எவ்வாறாயினும், எவ்விடத்து நல்லர் ஆண் மக்கள்; அவ்விடத்து நீயும் நல்லை, வாழ்க; என்றவாறு.) தீய நிலமே யானாலும், நல்லோர் உறையின் நல்ல நிலம் என்றும், நல்ல நிலமே யானாலும், தீயோர் உறையின் தீய நிலம் என்றும், தன்னிடத்து வாழ்வோர் இயல்பே அல் லாது, தனக்கென ஓர் இயல்பு உடையது அன்று என, நிலத்தை இழித்துக் கூறுவது போல உலகத்தின் இயற்கை கூறிய வாறு காண்க, ஆடவர் என்ற சொல் அமைத்தி ருத்தலும் ஆராயத் தக்கது.
இன்னும், அரசன் ஒருவனது செங்கோன்மை அல்
லது கொடுங்கோன்மை, அவன் நாடு: செழிப்பு, நீர் வளம் நில வளம் உண்மை, அல்லது இன்மையாற் கண்டு: தெளி
98 - சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு யப்படும் எனும் மெய்ம்மை, சங்கத் தமிழ் நூல்களில் கூறப் பட்டுள்ளது போல், வேறு எம் மொழியிலும் கூறப் பட் டிலது. பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து, புற நானூறு முதலான நூல்களில், இக் கருத்தைப் பல விடங் களில் பரக்கக் காண்க. மன்னனைப் புகழ்வது என்பது, அவன் நாடு, மலை, - ஆறு ஆகியவற்றின் வளத்தையும், வனப்பு மிகுதியையும், கூறுவதாகவே கொள்ளப் பட்டது. இளந்திரையனது நாட்டைப் புகழும் புலவர் :--- “ அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்;
உருமும் உரறாது, அரவும் தப்பா,
காட்டு மாவும் உறுகண் செய்யா; வேட்டாங்கு
அசைவுழி அசை), ௩சைவுழித் தங்கிச்
சென்மோ, இரவல, சிறக்க நின் உள்ளம்”
(பத்து: பெரும்பாண். ௩௯--௪௫) என்று கூறுகின்றார். (இதன் பொருள்: அவன் நாட்டில் வழிப்பறி செய்யும் கள்வர் இரார். இடியும் அங்கே ஓசை காட்டாது, பாம்புகளும் தீங்கு புரியா. காட்டு விலங்கு களும் துன்பம் செய்யா, இளைத்த விடத்தே இளைப்பாறி, தங்கிப் போக வேண்டு மென்று விரும்பிய விடத்தே தங்கி யிருந்து, செல்வாயாக, என்றவாறு.) இங்ஙனம் குடி மகன் ஒருவன் வழிப். :போக்கனுக்குக் கூற வேண்டு மாயின், அவ் வரசனது செங்கோன்மைக் கண்ணே அவ னுக் கிருந்த ௩ம்பிக்கையின் அளவு புலனாகின்ற தன்றோ?
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 39
நீதி நூல் தொகைகளைத் தவிர, மற்றும் பிற இலக்கி யங்களிலும், தமிழனின் நீதி நெறி முறைகளும், அன் புடைமையும் காணப்படுகின்றன. அகப் பொருள் துறைச் செய்யுட்களே யாயினும், இயற்கை அழகை எடுத் துக் கூறும் பொழுது, தமிழ்ப் புலவர் நீதியை அடிப்ப டைக் கருத்தாகக் காட்டத் தவறார். மலர்கள் ௩றுமணங் கமழுதற்கும், ஆற்றிடை நீர் தெளிவுற் நிருப்பதற்கும், இன்னும் இவை போன்ற இயற்கை நலங்கள் எல்லாம் சிறப்பதற்கும், மன்னன் செங்கோன்மையே காரணம் என்பர் சங்கநூற் புலவர் பெருமக்கள். “ஈதலிற் குறைகாட்டா தறனறிந் தொழுகிய தீதிலான் செல்வம்போல் தீங்கரை மரம் நந்தி'” (கலி:௨௭)
என்ற பாலைக்கலிச் செய்யுட் பகுதியில் எடுத்துக் காட்டி யுள்ள நீதி எத்துணை அழகுடையது என நோக்குக. [இதன் பொருள்: ஈயு மிடத்துத் தன் பொருட் குறைவு காட்டாது ஈந்து, இல்லறம் நிகழ்த்தும் முறைமையை அறிந்து ஒழுகிய நன்மை யுடையவன் செல்வம் தழைப் பது போன்று, இனிய நீரை யுடைய ஆற்றங் கரையில் மரங்கள் தழைக்க: என்ற வாறு] தனது சொல் தவறிய தலைவனது நாட்டில் இயற்கை தன் வளம் குன்றா திருப் பது எத்துணை வியப்பிற் குரியது எனத் தலைவி தோழி யிடம் குறை கூறுவதாக உள்ள பகுதிகள் அறிந்து இன் புறற் பாலன. தம் புகழுரை கேட்ட சான்றோர் போன்று தலையைச் சாய்த்து மரங்கள் துஞ்சின என்று கூறுவதை யும், காந்தள் மலர்களைக் கூப்பிய கைகளுக்கு ஒப்பிடுவ தையும், வேறு எந்த இலக்கியத்தில் கண்டு சுவை. துய்ப்.,
40 சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
போம்? இவ்வாறு, ௩மது இலக்கியங்களில், நீதிநெறிக் கருத்துக்கள் செறிந்திருப்பதை உணர்ந்த மேனாட்டாசிரி யர் ஒருவர், “உள்ள வாறே இத் தமிழ் மக்களுக்கு இறை வனின் அருளும் வாழ்த்துரையும் சிறப்பாக அமைந் திருத்தல் வேண்டும்'' என வியந்து மகிழ்ந்து கூறுகின் ரர். இறைவனது அருளும் வாழ்த்தும் அமையப் பெரு தார்க்கு, இத்துணேச் சிறப்பான உவமையும், கருத்தும், நீதிறெறியும், நல்லொழுக்கமும், மெய்ப் புலமையும் வாய்க் கப் பெறா என்பது அவர் குறிப்பு.
சங்க இலக்கியம்' கூறும் நீதி யொழுக்கத்திற்கு, அதனை இயற்றிய நல்லிசைப் புலவரும், அவர் போற்றும் பெரியாரும், எடுத்துக் காட்டாக நிற்கின்றனர். கபிலர், பரணர், காவற் பெண்டிர், பாரி, சாத்தனார், கோப் பெருஞ் சோழன், இன்னோரன்ன பெரு மக்களின் வாழ்க்கை வர லாறுகள், நீதிக் குணங்களைக் குணியாகக் காட்டுவன.
௪
நிறையும், நீதியும், ஈம் மக்கள்பால் நிறைந்து நிலவு திற்கு, கல்வி யறிவே அடிப்படைக் காரணமாய் இருந் தது. செல்வத்தையோ, செல்வரையோ, தமிழர் பெரிது போற்றிலர். “' சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம்!” என வும், “பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள'' எனவும், முற்காலம் தொட்டுப் பிற்காலம் மட்டும் அவர் கருத்து அதுவே. . அவர் அறிந்து போற்றிய செல்வம், அருட் செல்: வம், செவிச் செல்வம், கல்விச் செல்வம், ஆண்மைச் செல் வம், பெருந்தன்மைச் செல்வம், ஈகைச்: செல்வம் . என்பூ.
சஙக இலக்கியத்தின் சிறப்பியல்பு 41
னவே. உள்ளவாறு பெருமிதம் கொள்ளுதற்கும் இவையே காரணம் என்பர். அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட் பூரியார் கண்ணும் உள” [செல்வம் (குறள் : ௨௪௧) “இசல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை'" (குறள்:௪௧௧) “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” (குறள்:௪௦௦) என முதற் பாவலர் திருவள்ளுவரும், “கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே'” (தொல். ௧௨௦௩) என ஒல்காப் புலமைத் தொல்காப்பியரும், “உற்றுழி-ஜதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் ஈன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த: பல்லோ ருள்ளும் மூத்தோன். வருக என்னாது அவருள் அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால்.ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படூமே”' (புறம்:௧அ௩) எனப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழிய னும், பிறரும்; இவற்றின் பெருமையை எங்ஙனம்” போற் 6:
- சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
றிப் புகழ்கின்றனர் என்பது காணலாம். இவற்றிற்கு எதிராக அன்பு, அருள், கல்வி, கேள்வி, ஆண்மை, ஈகை, ஒழுக்கம் இல்லாதாரை வற்றல் மரம், நல்ல மரம், நாய், விலங்கு, பேய், பதர், பதடி என, அப் பெரியார் தாமே தம் திருவாயினால் இகழ்ந்து கூறி யிருத்தலும் அறியலாம், அகப்பாட்டிலும், புறப்பாட்டிலும், மேற்கூறிய நற்பண்பு கள் படைத்த ஆடவர் டய புகழ் முரசு எ எங் கும் கேட்கலாம்.
“புகழ் ப் ரப் கொண் ட்டு உலகுஉடன் பெறினும் கொள்ளலர்''(புறம், ௧௮௨ ),
௫
- இலக்கிய ஆராய்ச்சியாளர் எம் மொழியிலும் சுவை யைப் பெரிதும் விரும்புகின்றனர். தமிழ் நூலார் அச் சுவையை எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு எனத் தொகுத் தும், வகுத்தும், விரித்தும், இலக்கணம் கூறிப் போந்த னர். சங்க இலக்கியங்களும் பிற்காலத்தில் தோன்றிய பெருங் காப்பியங்களும், இச் சுவைப் பண்புகள் பெருகி நிறைந்து ததும்பி நிற்பன. அச் சுவைகளில் அழுகைச். சுவை அல்லது அவலச் சுவை ஒன்று, அதனைக் கிரேக்க மொழியில் பேதொஸ் (Pathos) என்பர். இதற்குச் சங் கச் செய்யுள் இரண்டொன்று எடுத்துக் காட்டுவோம்:
“அற்றைத் திங்கள், அவ்வெண் நிலவின், எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர்கொளார்; ்... இற்றைத் திங்கள், இவ்வெண் நிலவின், ம வென்றெறி முரசின் வேந்தர் எம் -- -குன்றும்-கொண்டார், யாம் எந்தையும் இலமே,
(புறம். ௧௧௨)
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 43
இது பாரி என்னும் வள்ளல் இறந்தபோது, அவன் புதல்வி யர் பாடிய கையறுநிலைப் பாட்டு. அவனுக்கும் மூவேந் தர்க்கும் நடந்த போரில், அவர் அவனை வஞ்சித்துக் கொன்று, அவன் நாட்டட்யும்' கவர்ந்தனர் "என்னும் செய்தி, இங்கு அறியத் தக்கது. வஞ்சித்துக். கொன்ற மையால், 'வென்றெறி. முரசின் வேந்தர்: என்பது. இகழ்ச் சிக் குறிப்பு... இறந்தாலும்: பாரி வென்றவன், - இருந்தா 'ஜும்-வந்தர் தோற்றனர் என்க,
““ அளிய தாமே சிறுவெள் ஆம்பல் ;
இளைய மாகத் தழை ஆ யினவே ;
இனியே, பெருவளக் கொழு௩ன் மாய்ந்தெனப் ' இன்னா வைகல் உண்ணும் [பொழுது மறுத்து ' அல்லிப் படூஉம் புல் ஆ யினவே'' (புறம். ௨௪௮)
இது ஒக்கூர் மாசாத்தியார் என்னும் நங்கையர் பாடிய தாபத நிலைப் பாட்டு. (இதன் பொருள்: சிறிய வெண் ணிறமுள்ள ஆம்பல் பூண்டுகள் எம்மைப் போலவே இரங் 'கத்தக்க நிலைமை உடையன. . எவ்வாறெனின், யாம் மங் கைப் பருவ முடையேமா யிருந்த காலத்தில், எம் காத லர் எமக்குத் தந்த தழை ஆடையாக அவை உதவின, பெரிய செல்வத்தை யுடைய எம் கணவர் இறந்து போக, யாம் கைம் பெண்ணாக இருக்கின்ற இக் காலத்தில், எமக் குத் தம் பூவிதழில் உண்டாகும் புல்லரிசியால் உணவாக உதவின: என்றவாறு.) இன்புறுங் காலத்தும், துன்புறுங்
44 சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
காலத்தும் தனக்குத் துணையாய் உதவின வாதலான், ஆம் பல் அளிய வாயின எனக் கூறினாள்.
“இளையோர் சடார், வளையோர் கொய்யார், நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான், பாடினி அணியாள், ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை, முல்லையும் பூத்தியோ:ஒல்லையூர் நாட்டே? (புறம். ௨௪௨)
இது ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் இறந்த போது, குடவாயிற் கீரத்தனார் பாடிய -கையறுநிலைப் பாட்டு. (இதன் பொருள்: முல்லைக் கொடியே, நின் கொடுமைதான் எத்தன்மைத்து ! நமது தலைவன் பெருஞ் சாத்தன் வலிய வீரன். தன் ஆண்மை வெளிப்பட யாவர்க் கும் தோன்றுமாறு, வீரர்களை எதிர் நின்று போர் செய்து கொன்று வென்ற வலிய வேற்படை யுடையான். அவன் ' இது போழ்து இறந்து பட்டான். ஆதலால், உன் மலர் களை இளைய வீரர் சூடார்; வளை யணிந்த இளைய மகளிர் கொய்யார்; பாணன் தன் நல்ல யாழ் மருப்பினால் மெல்ல வளைத்துப் பறித்துச் சூடிக் கொள்ளான்; பாடினி அணி யாள். இந் நிலையில் நீ பூக்கின்றுயோ? அவனை இழந்தும், உயிர் நீங்காமல், இன்னும் வாழ்ந்து வருகின்ற என் வாழ்வு போலவே, அவன் வாழ்ந்த ஒல்லையூர் சூழ்ந்த நாட்டில் நீ பூக்கின்ற பூப்பும் கொடுமையே யாகும். என்னை ஆதரிப் பார் இன்மையால் என் வாழ்வு பயன் படாமைபோல், உன் பூவைச் சூடுவார் இன்மையால், உன் பூப்பும் பயன் படாது. இங்ஙனம் கொடுமையும், பயன் படாமையும்,
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 45
அறியாமையும் கலந்த வாழ்வினை யுடைய யாம் இருவே மும் பெரிதும் இரங்கத் தக்கேம்; என்றவாறு.) இத்தகைய செய்யுட்களை இலக்கிய மன்றங்களிற் பொன்னிற் பொறித் .துப் போற்றின், மிகை என்பாரும் உண்டுகொல்? ண் “ ஆங்கிலத்தால் Tenderness என்பது, தமிழில் “மென்மை; ஈரமுடைமை, நீரன்ன சாயல் எனப்படும், இவ் வரிய பண்பு அகத்துறை இலக்கியத்தில் வரும் காதற் பாக்களில் அழகாகக் கூறப் பெற்றிருத்தல் காண்கின் நோம். உதாரணமாக ஒரு செய்யுள் இவண் எடுத்துரைப் போம்:— “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமஞ் செப்பாது கண்டது மொழிமோ; பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செற்யெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீ யறியும் பூவே?” (குறுந்தொகை:௨) இச் செய்யுள் முதலடியில் தும்பியை விளித்தலிலும், ஈற்ற டியில் அதனை வினாதலிலும் தோன்றுகின்ற மென்மை, இனிமை, அன்புடைமை முதலாய நலங்களை, வாயினால் ஓலித்தும், உள்ளத்தில் உய்த்துணர்ந்தும், ஆராய்ந்து காண்க. இரண்டாவது அடியில் தமிழிற்கு இயற்கையா கிய ஓசையினிமை சிறப்பாகத் துலங்குகின்றது.
cT
தென்னிந்தியாவில் முப்பது ஆண்டுகளாகக்: கல்லூ ரிப் பேராசிரியராய் விளங்கிய மேல் நாட்டவர் ஒருவர்,
46 சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
“இந்திய இலக்கியத் தில், உயர்ந்த காதல் அல்லது பெண்மை ஓவியம் இல்லை" என்று கூறியுள்ளார், தமிழி லக்கியப் பகுதிகளை அறிந்திருப்பின், அவர் இங்ஙனம் கூறி யிருப்பாரோ? தமிழிலக்கியத்திற் காணும் காதற் பகுதி யின் உயர்வைத் தமிழர் தாமும் அறிந்தார் அல்லர். அன்பி னைந்திணை இலக்கணம் வகுத்து, நிலத்திற்கு , இழுக்கம் நிறுவி, உள்ளுறை இறைச்சி யென்ற குறிப்புப் பொருளை நய்ம்பெற உள்ளே புகுத்தி, தமிழரின் திலைசான்ற காதல் வாழ்க்கையைக் கூறும் இலக்கியம் யாத்த பெரியாரை-- அறிவாற்றலிலும் ஒழுக்க நெறி முறைமையிலும் சிறந்த செந்தமிழ் நாவலரை --யாம் எங்ஙனம் போற்ற வல் _ லோம்? மறை யாசிரியராய் இருப்போரும், ஒழுக்க நீதி முறைகளைக் கற்பிக்கும் பொறுப்புடையோரும், சங்கத் தமிழ் இலக்கியங்களில், தம் தொண்டினுக் கேற்ற தலை யாய சான்றுகளையும், குறிக்கோள்களையும், கோட்பாடு களையும், வழி வகைகளையும் காண்பர். தமிழனின் இவ் வுயர்ந்த பண்பினை உலகம் முழுவதுமே அறிவதற்காக, அறிந்து கடைப் பிடிக்கச் செய்வதற்காக உழைப்பது, தமிழரது தலையாய கடமை யாகும். மேல் நாட்டவ ரிடையே வழக்காற்றி லிருக்கும் களவியல் ஒழுக்க முறை, பிற்றை ஞான்றுப் பிறந்த மேல் நாட்டு வழக்கம் என்று பெரிதும் போற்றுவர். அன்னார் ஈம் அகத் துறை இலக்கி யங்களை ஆராய்ந் தறிவா ராயின், அகத் துறை இலக்கியங் களில் எல்லாம் உலகிலேயே ஒப்பற்று விளங்குவது, தமி ழில் உள்ள அகத் துறை இலக்கியமே என்று உணர்வது உறுதி, ப்பன்,
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 47 அ
இலக்கியம் வளர்க் தெழுவதற்கு நிலைக் களனாக உத வும் , பொருட்கள், மக்களும் இயற்கையுமே. இவ் விரு பகுதிகளையும் பிரித்து, இயற்கையை விடுத்து மக்களைப் பற்றியும், அல்லது மக்களை விடுத்து இயற்கையைப் பற்றி யும் புலவர் பாடுவரேல்,அவ்விலக்கியம் குறைவுள்ள இலக் கிய மாகவே விளங்கும் (There are two great subjects of poetry: the natural world and human nature: It is a terrible business for poetry when it is wholly employed on men or wholly employed on nature — Stop-ford Brooke) தமிழ்ப் புலவரோ, தம் புலமைத் திறனைக் காட்டூதற்கு, முதற் பொருளாக மக்க ளையும், துணைப் பொருளாக இயற்கையையும் எடுத்துக் கொண்டனர். இயற்கையைத் தானும், தமிழ்ப் புலவர் கை யாண்ட முறையில், வேறு எம்மொழிப் புலவரும் தையாண் டிலர். தமிழரின் இயற்கை ஈடுபாட்டைப் பற்றி ஆராயுந் தொறும், எந்நாளும் புதிய கருத்துக்களையும், வியத்தற் குரிய உண்மைகளையும் கண்டு வருகின்றேன். மொழி பெயர்ப்பு வல்லுகர் தாமும், பின் வரும் அடிகளை வேற்று மொழியில் எவ்வாறு பெயர்த்துரைப்பார்?:--
“ செறியிலைக் காயா வஞ்சன மலர முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக் கோடற் குவிமுகை யங்கை யவிழத் தோடார் தோன்றி குருதி பூப்ப.” (பத்து : முல்லை. ௬௩-- ௯௬)
வியல் இலையாயினும், மரம் செடி கொடி எதுவா யினும், தமிழர். . தம் வாழ்க்கையில் பயன் படுத்திய
48 சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
முறையை நுணுதி ஆராயு மிடத்து, வேறு எந்த மக்கட் குழுவினரும் இவ்வாறு அமைத்துப் பயன்படுத்தி யுள்ள னர் எனத் தோன்ற வில்லை.
பேராறுகளின் கரைகளிலே, பெரிய பல நாகரிகங்கள் வளர்ந்திருக்கின்றன: பேரூர்களும் வளர்ந்துள்ளன. தெம்ஸ், சீன், தைபர், நைல் முதலாய ஆறுகளைப் பற்றி எழுந்த செய்யுட் டொகுதியைப் பார்க்கிலும், ௩ம் தமிழக ஆறுகளாகிய வையையைப் பற்றியும், காவிரியைப் பற்றி யும், இயற்றப் பெற்ற செய்யுட் டொகை பெரிது. மேலும், அதனிலும் சிறந்தது என்பே மெனின், அது சிறிதும் மிகைபடக் கூறியது ஆகாது. ஏட்ரியாற்றிக் கடற்கரை யில் எழுந்த வெனீஸ் ௩கர மாந்தர் அக் கடலினைத் தம் நகரின் தலைவியாகப் பாராட்டியது போலவே, ௩ம் தமிழ் மன்னரும், தமிழக மக்களும், ௩ம் ஆறு, கடல், ஊர் முத லியவற்றை அன்புடன் பாராட்டி வந்துள்ளனர்.
௯
இயற்கையை ஆழ்ந் தாராய்ந் தறிவதுடன், மக்கள்: உள்ளத்தையும் மிக்க நுண்ணிதாக- ஆய்ந்து, உளநூற் பயிற்சி மிக்காராய் மிளிர்கின்றனர் ௩ம் புலவர். அகத்தி: ணைத் துறைகள் அனைத்தும் உள்ளத்தின் இயல்பைப் புலப் படூத்துவன. மெய்ப் பாட்டியலோ வெனின், அதனை ஆழ்ந்து அகன்று நுணுகி. ஆராய்ந்து. செல்லுகின்றது, அகம் என்பதற்கு உள்ளம் என்பதே. முதன்மையான பொருள் என நிகண்டு நூலுடையார் கருதி யுள்ளதும், ஈண்டுக் கருதற் பாலது, பெண்ணின் இயல்பை ஷேக்ஸ் பியரைத் தவிர வேறு எவரேனும்: அறிவரெனக்: கூறுவா ' ரெனின், அவர் அறிவிலர், அன்றேல் பேரறிஞர் என்ப.
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 49
பெண் உள்ளத்தை நன்கறிந்து பாடிய செய்யுட்களால், ௩ம் சங்கப் புலவர் பேரறிஞர் என்பது துணியப்படும்.
௧௦
உள்ளதை உள்ளவாறே கூறுதல் சங்க காலத்துத் தமிழர் பண்பின் வேறொரு சிறந்த இயல்பாகும். தமிழ் நாட்டுச் சங்க இலக்கியத்திற்கும், இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் இலக்கியத்திற்கும் உள்ள பெரிய தொரு வேற்றுமை யாதெனின், இந்தோ-ஐரோப்பிய மொழிகளி லுள்ள இலக்கியங்கள் கற்பனையில் மலிந்து, வாழ்க்கை யுடன் ஒட்டிய வரம்பைக் கடந்து செல்லும் இயல்புடையன, “உலகொழுக் கிறவா உயர்புகழ் காந்தம்'' என்னும் இலக்கண நூற்பாவில், இறவா என்னும் சொல்லை, வட மொழிப் பயிற்சி மிக்கோர் செய்யா வென்னும் வாய்பாட்டு இறந்த கால வினையெயச்ச மெனவும், தனித் தமிழ்ப் பயிற்சி மிக்கோர் ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்ச மெனவும் கொண்டு, தத்தம் கொள்கைக் கேற்ப இலக்கிய மும் எடுத்துக் காட்டுவர். அது மேலே காட்டிய வேற்றுமை பற்றி எழுந்த கொள்கைகளேயாம். நமது கொள்கையே தமது கொள்கையாகக் கொண்டுள்ள பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், தமது நாடக நூலில், தமிழ்த் தெய்வ வணக்கங் கூறுமிடத்து:--
“பத்துப் பாட் டாதி மனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட் கிசையும் இலக்கணம் இல் கற்பனையே?
எனக் கூறி யுள்ளார்.
7
50 சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
நாட்டின் சிறப்பியல்புகளைச் செய்யுளில் விரித்துக் கூறப் புகுந்த தமிழ்ப் புலவர், சந்தேசம் என்னும் முறை யீல், பறவைகளையும், முகில்களையும் தூது போக்கினார் அல்லர், மக்களையே மக்களைக் கொண்டு ஆற்றுப் படுத் தும் அரும்பெரும் முறையையே பயன்படுத்தியுள்ளனர். தமிழ் நாட்டு மலைகளும் ஆறுகளும் தேவ கணங்க ளுடனோ, பிறவுலகங்க ளுடனோ, தொடர்புடையன வாகக் கூறப்பட் டிருப்பதைச் சங்க இலக்கியத்திற் காண்பது அரிது. தமிழ் நாட்டு அரசரோ, பிறரோ, தேவ குல அவதாரங்கள் எனக் கூறி யுள்ளது மில்லை. பழந்தமிழ்ப் புலவர் யாண்டும் மெய்யுணர்வாளர் (Realists) ஆரவே காட்சி யளிக் கின்றனர் என்பது தேற்றம்.
இவ்வாறு சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைப் பல் வேறு முறைகளில் ஆய்ந்து செல்வதற்கு இடமுண்டு. பண்டைக் கால இலக்கியச் செல்வங்களை எடுத்து நோக் கும் பொழுது -— ௩ம் முன்னோர் கொண்டொழுகிய வாழ்க்கை யமைப்பின் சிறப்பியல்புகளை ஆராயும்பொழுது -- அவர்களது இயற்கை யீடுபாடு, அழகோடு இரண்டறக் கலத்தல், தூய கொள்கைகள், வாழ்க்கையின் மேலான குறிக்கோள்கள், நீதியும் ஒழுக்கமும் ஒருங்கமைந்த உயர்ந்த அரசியல் அமைப்பு முறைகள், இவை அனைத் தையும் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது, இற்றை ஞான்று தமிழர் என அழைக்கப் பெறும் நாம், உண்மை யில் ௩ம் முன்னோரின் வழித் தோன்றல்கள் தாமோ என் னும் ஐயம், என்னையும் அறியாமலே என் உள்ளத்தில் உதிக்கின்றது. ஐரோப்பிய நாகரிகம் அனைத்திற்கும் அடிப்படை யாக இருந்த கிரேக்க நாட்டிற்கு ஏற்பட்ட
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு 51
வரலாறே தமிழகத்திற்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச் சமும், அத்துடன் தோன்றுகின்றது. பைரன் என்ற ஆங் கிலப் புலவர் கிரேக்க நாட்டின் நிலையைக் கண்டு கண்ணீர் சொரிந்தது போலவே, தமிழ் ஈண்பர் ௩ம் நிலையையும் கண்டு இரங்குவதற்குக் காரணங்கள் பல உள என்ப தற்கு, ஐயம் இல்லை.
தமிழ் விழாக் கொண்டாட நாம் இங்கே கூடியிருப் பது, தமிழரின் சென்ற காலப் புகழை மீண்டும் நாம் பெறு தற்கும், அதனை உலகில் என்றும் நிலை நாட்டுதற்குமே யாம். ஆதலால், “மறைவாக நமக்குள்ளே பழங் கதை கள் .சொல்வதி லோர் மகிமை இல்லை.” தமிழ் நாட்டில் உண்மையான கல்வியும், உண்மையான குறிக்கோள்க ளும், உண்மையான கோட்பாடுகளும் நிலைபெற்றுவிளங்கி னல் மட்டுமே, ௩ம் முன்னோர் அடைந்த சிறப்பு நிலையை நாமும் அடைவோம், வள்ளுவரை வானளாவ வாயினால் புகழ்ந்தால் மட்டும் போதாது. வள்ளுவர் வகுத்த நெறி யின் படியே தமிழர் அனைவரும் வாழ வேண்டும்.
இன்று ௩ம் தமிழ் நாட்டிற்கு வேண்டியவர் யாரெனில் ஆன்றமைந் தடங்கிய கொள்கைச் சான்றோ ராகிய ஆராய்ச்சியாளர் பலரே. உலகின் பல்வேறு நாடுகட்குச் சென்றதன் பயனாகவும், பிற மொழிகளையும் அவற்றின் இலக்கியங்களையும் ஒருவாறு கற்றறிந்ததன் பயனாகவும், தமிழிலக்கியம், தமிழ்ப் பண்பு, தமிழ்க் கலை, தமிழ் வர லாறு முதலியவற்றை உலகில் எவ்வளவிற்குப் பரப்ப வேண்டு மென்று, ஒரு சிறிது உணர்ந்துள்ளேன், ஹோம ரின் ஓடிசியையும், வெர்ஜிலின் இனியதையும் மக்கள்
52 சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
போற்றுவது போல், இளங்கோ வடிகளின் சிலப்பதி காரத்தை -- ஒப்புயர் வற்ற முத்தமிழ்த் தொடர்நிலைச் செய்யுளை, உலகம் போற்றுமாறு நாம் செய்தல் வேண்டும். கொன்பூசியஸ், செனக்கா முதலாய நீதி நூல் ஆசிரியர் களை உலக மாந்தர் எங்ஙனம் அறிந்து படிக்கின்றனரோ, அங்ஙனமே திருவள்ளுவரையும் அவர்கள் அறிந்து படிக் குமாறு நாம் செய்வித்தல் வேண்டும், சாபோ, எலிசபெத் பிரெளனிங், ஷேக்ஸ்பியர் முதலானோரின் காதற் பாக்களை மக்கள் காதலித்துப் படித்து இன்புறுவதே போல்; ௩ம் அகத்துறை இலக்கிய நூல்களையும், அன்னார் படித்து இன் புறும் புதிய காள் உதிக்க வேண்டும். உலக இலக்கியத் திரட்டு (World Classics) என்னும் பெருந்தொகை நூல் களில், ௩ம் இலக்கிய நூல்களும் இடம் பெறும் பெருமை அடைவித்தல் வேண்டும். மேற்றிசைக் கண்ணும், கீழ்த் திசைக் கண்ணு முள்ள பல்கலைக் கழகங்கள், தமிழ்க் கலை களின் தனித் தன்மையை உலகிற்கு உணர்த்துமாறு செய் வித்தல் வேண்டும். தமிழறிஞர் தமிழை அன்புடன் தனித் தமிழ், செந் தமிழ், முத் தமிழ், தீந் தமிழ், தேன் தமிழ், தண் டமிழ், வண் டமிழ், கோதில் தமிழ், தீதில் தமிழ் என் றெல்லாம் போற்றுகின்றனர், அவ் வன்பிற் பிறரும் பங்கு பெற்று, உலகம் பெருவாழ்வு அடையுமாறு நாமனைவோமும் ஒருங்கு சேர்ந்து உழைப்பதே, இவ் வழ கிய மொழியை நமக்குத் தாய் மொழியாகத் தந்த இறைவ னுக்கு, நாம் காட்டும் ஈன்றித் தொண்டாகும்.
“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ் செய்யு மாறே'”
மலரும் மாலையும்
தென் நாட்டு மக்கள் மலர்களையும் மாலைகளையும் மிகு தியாய் விருப்புற்றுத் தம் வாழ்க்கைக்குப் பயன் படுத்தி வந்தனர் எனும் உண்மையைப் பிற நாட்டார் பலர் குறித் துள்ளனர். அப்துல் இரசாக் விசய௩கரத்தைப் பற்றி விரித்துரைக்கும் பொழுது, அந் நகரின் மக்கள் மலர்களைப் பெரிதும் விரும்புகின்றனர் என்றும், அந் நகரின் பல இடங்களில் பூக் கடைகள் பரவியிருக்கின்றன என்றும், குறிப்பிட் டூள்ளார். காளிதாசரின் இயற் பக ஈடூபாட் டையும், அவர்தம் நாடக பாத்திரங்கள் மலர்களையும் இலை களையும் பயன்படுத்தும் முறையையும், அவர் உவமைக ளைக் குறிப்பிடும் திறனையும் நோக்கு மிடத்து, அன்னார் ஐந்திணை இலக்கியத்தையும் தமிழ்ப் புலவரையும் அறிந் திருப்பரோ எனும் கடா எழுகின்றது, மேலும், சாகுந் தல நாடகத்தின் நான்காவது காட்சியில், சகுந்தலை தன் னைத் தன் தந்தையிட மிருந்து பிரிக்கும் செயல் மலையாள மலைத் தொடரின் சந்தன மரத்தில் படர்ந்துள்ள கொடியை அம் மரத்திலிருந்து பிரிக்கும் செயல் போன் றது எனக் கூறுதலால், அவர் தென் நாட்டினை ௩ன்கு அறிந்திருத்தல் வண்டும் என்பது புலனாகின்றது * ஆயினும், காளிதாசரது இயற்கையைப் பற்றிய அடிப்ப டைக் கருத்து, தமிழ்ப்புல வ ர து கருத்தினும் வேறுபா டூடையது. அவரது சகுந்தலை யுடன் மரங்களும் செடி களும், பேசுவன போல், தமிழ்த் தலைவியருடன் அவை பேசுவன வல்ல. அன்றியும் “மேகதூதம்'' போன்ற
- அக்காலத்தில் மலையாளம் தமிழ்காட்டின் ஒரு பிரிவாய் இருந்தது.
64 மலரும் மாலையும்
ஆற்றுப் படைகளைச் சங்கப் புலவர் இயற்றினார் அல்லர். “இருது சம்ஹாரா'' வில் பருவங்களைக் காதல் வாழ்க் தைக்குப் பின்னிலைக் களனாகக் காளிதாசர் கூறும் முறை, அவர் சங்கப் புலவரின் கோட்பாடுகளுக்கு நெடும் தொலை வில் இருப்பவர் என்று காட்டுகின்றது.
தென் நாட்டில் மட்டும் அன்று; மேற்றிசையிலும், நாகரிக மக்கள் ஆகிய கிரேக்கர் உரோமர் முதலியோர், தம் வழிபாட்டு முறையிலும், தம்மை அணி செய்யும் வகையிலும், மலர்களைப் பெரிதும் பயன் படுத்தினர். வேள்விக் குரிய காளைகளுக்கும், பிற விலங்குகளுக்கும், மாலை இட்டே வேள்வி நடத்தினர். விருந்தினர் கண்ணி குடியே விருந்துண்டனர். மரதன் பந் தய ஓட்டத்தில் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக இலைகளால் ஆக்கிய முடி ஒன்றையே கிரேக்கர் சூட்டினர், இன்றும், மேல் நாடுகளில், மலர்கள் மீது அன்பு பூண்டு, அவற்றை மிகுதி யாய்ப் போற்றி, அழகுற வழங்கி வருகின்றனர். எனி னும், சங்க காலத்தில், தமிழ் மக்கள் அவற்றை வாழ்க் கையின் பல துறைகளுக்குப் பயன்படுத்தியதுபோல், வேறு மக்கள் எவரும் பயன்படுத்தினர் என யாம் அறிந் திலேம். பொதுவாகப் பசி பிக் தீவுகளிலும், சிறப்பாக ஹாவாய்த் தீவுகளிலும், பொலினீசிய மக்கள், தமிழ் மக் களைப் போல், கோதையும்,மாலையும், தாரும், கண்ணியும், தழை யுடையும் அணியும் பழக்கம் உடையவரா யிருக் கின்றனர். அப் பழக்க வழக்கங்களால், அன்னார் இந்தி யாவின் தென் நாட்டிலிருந்து ஆங்குச் சென்று குடியே றிய மக்கள் ஆவார் எனக் கருதுதற்குப் பெரிதும் இடம் உண்டாகின்றது.
மலரும் மாலையும் 55 க
உலக இலக்கியங்களைப் பயில்பவர், 6 வர்ஜில், உவோர்ட்ஸ்-உவொர்த் போன்ற மேல் நாட்டுப் புலவரின் இயற்கை ஈடுபாட்டைப் பெரிதும் போற்றுகின்றனர். பேராசிரியர் இரைடர் (Ryder) என்பார், காளிதாசரின் மேகதூதத்தைப் பற்றி ஆராயும் ' பொழுது அச் செய்யு ளில் தோன்றும் இயற்கை ஈடுபாட்டின் தன்மை பிற இலக் கியங்கள் எவற்றிலும் இல்லை என வியந்து வற்புறுத்து கின்றார். அன்னார் கபில பரணர் முதலானோர்இலக்கியங் களைக் கண்ணுற் றிருப்பரேல், அதனினும் சால வியத்தற் குப் பல காரணங்களைக் கண்டிருப்பர். ஏனெனின், தமிழ் மக்கள் வரலாற்று முறைமை எட்டாத காலந் தொட்டு நிலத்தை ஐந்திணையாகப் பிரித்து அதன் இயற் கையே பண்பாட்டின் அடிப்படை என உணர்ந்திருந்த னர். மக்கள் இயல் வல்லுநர் ஆகிய இலெப்லே (Le Play) என்னும் பெரியார் கூறிய இவ் வுண்மையைத் தமிழ் மக் கள் ஈராயிரம் ஆண்டுகட்டு முன்னரே இனிதுணர்ந்தார் ஆவார். மலை நிலத்திலும், கடல் நிலத்திலும், அவ்வச் சூழ்நிலைக்கு ஏற்ற பண்பாடே இயற்கையாய் அமையும் எனவும், ஆற்றங்கரையை அடுத்துள்ள கழனி நிலங்களில் வேறு பண்பாடு தோன்றும் எனவும் உணர்ந்து நிலத் தினை ஐந்திணையாகப் பிரித்தனர்.
அவ்வத் திணைகட்கு அவர் இட்ட பெயர்கள் அவரது இயற்கை அன்பினை நன்றாகத் தெளிவுறுத்துகின்றன. நாகரிக மற்ற மக்கள் அவ்வந் நிலங்களில். தோன்றும் பயிர் அல்லது உணவுப் பொருளின் பெயரை அத்திணை களுக்குக் கொடுத்திருப்பர், அவ்வாறு செய்தார் அல்லர்
56 மலரும் மாலையும்
பண்புடைப் பண்டைத் தமிழ் மக்கள். மலை நிலத்திற்கும் மலை சார்ந்த நிலத்திற்கும், அவர் கொடுத்த பெயர் குறிஞ்சி. குறிஞ்சி (5trobilanthus kunthianus) என்பது மலை நாட்டில் பன்னீராண்டுகட்கு ஒருமுறை பூக்கும் ஒரு செடி. நீலகிரி பழனி மலைகளில் அதனைக் காணலாம். அச் செடி பூக்கும் காலத்தில், மலைச் சாரல் எல்லாம் ஒரே நீல நிறமாய் மிக்க அழகுடன் விளங்கும், அப் பூக்களில் தேனும் மிகுதியாகக் கிடைக்கும். அவ் வாண்டில் கிடைக்கும் தேனைப் பெருந் தேன் என்பர், .குறுந்தொதை மூன்றாம் பாட்டில், “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு ௩ட்பே”'
எனத் தேவகுலத்தார் எனும் புலவர் கூறுதல் காண்க. தொல்காப்பியர் காலத்திற்குப் பன்னூறாண்டுகள் முற் படத் தமிழ் மக்கள் மலை நாட்டிற்குக் குறிஞ்சி நிலம் எனப் பெயரிட்டனர். அதற்கு எத்துணைக் காலத்திற்கு முன்னர், அக் குறிஞ்சிச் செடி மலை நாட்டில் மிக்க சிறப்பு டையது எனக் கருதி அவர் ஆராய்ந்திருத்தல் வேண்டும்? அவர் நுண்ணறிவு தான் என்னை! காந்தள், வேங்கை, ஆரம், அகில் என்ற இவற்றில் ஒன்றின் பெயரால் அத னைக் கூறியிருத்தல் கூடாதோ? குறிஞ்சிப் பூவே சிறப்புப் பூவாதலால், குறிஞ்சியென ர. மலை சார்ந்த இடத்தையும் குறித்தனர்.
அவ்வாறே, பிற நிலங்கட்கும் முல்லை, பாலை, மருதம் நெய்தல் எனப் பெயர் வைத்ததற்கும் சிறந்த காரணங்
மலரும் மாலையும் 57
கள் உள்ளன. பாலை மரம் (Wrightia tinctoria) இன்று தென் இந்தியாவில் காண்டல் அரிது. ஈழ நாட்டின் காடு களில் மிகுதியாக வளர்கின்றது. கோடைப் பருவத்தில் ் மாவும் மக்களும் விரும்பி உண்ணும் பழங்களை நல்குகின் றது. பழைய உரைகாரருள், உரையாசிரியர் எனச் சிறப் புப் பெயர் பெற்ற இளம்பூரணர் ஒருவரே பாலை மரத்தைப் பற்றிக் கூறியுள்ளார்; “பாலை என்பதற்கு நிலம் இன்றே னும், வேனிற் காலம் பற்றி வருதலின், அக்காலத்துத் தளி ரும் சினையும் வாடுதலின் றி,நிற்பதாம் பாலை என்ப தொரு மரமுண் டாகலின், அச் சிறப்பு நோக்கிப் பாலை என்று - குறியிட்டார்'” என்பது அவர் கூற்று. பாலை மரத்தின் காய்கள் பற்றுக் குறட்டின் வாய் போன்ற வடிவின : என் கின்றார் புலவர் ஒருவர். *கொடிறு போல் காய வாலி ணர்ப் பாலை'' என்பது நற்றிணை (௧௦௭),
முல்லை நிலத்திற்கு முல்லை மலர் அடையாளமாக இருப்பதுடன், அது கற்பு எனும் பண்பினைக் குறித்தற் குப் பெரிதும் பொருந்திய பூவாகவும் விளங்குகின்றது, “முல்லை சான்ற கற்பினள்'' எனவும், “முல்லை நாறும் கதுப்பினள்'” எனவும், பன்முறை வருதல் காண்க. மேல் நாட்டினர் இலிலி மலரைப் போற்றியது போல், முல்லை யைப் போற்றினர் தமிழர். வெண்மையான நிறமும், சிறப்பான மணமும் உடைய பூவினைக் கற்பிற்கு -அறிகுறி யாகத் தமிழர் நிறுவியது வியப்பன்று. தமிழ் மக்கள், ஏனைய பூக்களிலும் முல்லையைப் பெரிதும் -விரும்பி, அத னைத் தமக்கும், தம் இசைக் கருவிகட்கும், வழிபாட்டிற்கும் பயன்படுத்தினர் என்பதற்குப் -பல-சங்கப் பாடல்கள் சான்றாவன. ்
8
58 மலரும் மாலையும் ௨
தமிழ்ப் புலவர் இயற்கையை ஈன்றாகப் பயின்ற பின் னரே செய்யுள் செய்யத் தொடங்கினர். ஐந்திணை நிலம், பெரும் பொழுது, சிறு பொழுது என இயற்கை வனப்பு, அவர் அகப் பாடல்கட்கு இன்றி யமையாத பின்னிலைக் களனாக விதிக்கப் பெற்றது. பிற இலக்கியங்களில் இத் தகைய கோட்பாடுகள் இருக்கக் காண்கிலேம்.
சங்கப் பாடல்களில் மட்டுமே அன்று; சிறிய வரிப் பாடல்களிலும், தமிழ்ப் புலவர்களின் இத்தகைய ஈடுபாடு வெளிப்படுகின்றது. சிலப்பதிகாரக் கானல் வரியில்,
“பூவார்சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசை பாடக் காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி காமர்மாலை அருகசைய நடந்ததெல்லாம் நின்கணவன் நாமவேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி?!
என இசைக்கு மிடத்து, காவிரியாறு பூவணிந்து, பூமாலை யும் தழையுடையும் புனைந்து செல்லும் காட்சியை, சிறிய எளிய இனிய சொற்களில் பேரழகுடன் ஓவியமா கத் தீட்டியுள்ளனர் இளங்கோவடிகள். அப் புலவர் தாமே, வையை யாற்றையும், அத்துணைத் திறமையும் அழ கும் திகழப் பாடியுள்ளார். வையை எனும் நங்கை கண் ணகிக்குப் பின் நிகழும் தீங்கினை முன் அறிவாள் போல், பூவாடையால் தலையை மூடிக்கொண்டு, கண்ணீர் சொரிந் தாள் எனக் காட்டுகின்றார்.
“கரைநின் றுதிர்த்த கவிர் இதழ்ச் செவ்வாய் அருவி முல்லை அணிநகை யாட்டி
மலரும் மாலையும் 59 விலங்குநிமிர்க் தொழுகிய கருங்கயல் நெடுங்கண் விரைமலர் நீங்கா அவிர் அறற் கூந்தல் உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை யென்ற பொய்யாக் குலக்கொடி தையற் குறுவது தானறிந் தனள்போல் புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் புனல்யா றன்றிது பூம்புனல் யாறென??
(புறஞ்சேரி; ௧௬௪-௧௭௪)
என அவர் அவ் யாற்றினை உருவகப் படுத்தி, அழகுறப் புனைந்து, புகழ்படப் போற்றிக் கூறியிருத்தல் நினைக்குந் தோறும் இன்பம் பயக்கின்றது, இம் மலராற்றின் வர லாற்றை இனிது ஆராய்வார் பரிபாடல் எனும் தொகை நூலைப் பார்க்க. கரை யிலுள்ள மரங்கட்கு வையை ஆரு யிர் கொடுத்து வளர்ப்பதால், ௮ம் மரங்கள் எதிர் விருந் தாக மலர்களைச் சொரிந்தன எனப் புலவர் ஒருவர் புகல் கின்றார். தமிழ் நாட்டுக் கடலே '*இறவொடூ வந்து கோதை யொடு பெயர்கின்றது'' என்கிறார் வேறொரு புலவர்,
௩
ஒவ்வொரு திணையின் கருப் பொருளையும் தமிழ்ப் புல வர் நன்றாய் ஆராய்ந்ததால், மிகவும் வியக்கத் தக்க உவ மைகளைக் கூறி யிருக்கின்றனர். தமிழ் நாட்டின் இயற்கை வனப்பையும், நுண்ணிய பொருட்களையும் ஆராய்வார், புகைவண்டி, விசை வண்டி, மிதி வண்டி, இவற்றில் செல் லுங்கால், அவற்றைக் காண்டல் அரிது, அவர் காவிரி
60 மலரும் மாலையும்
யாற்றின் கழனிக ளூடே நடந்து செல்லுதல் வேண்டும். மருத மரங்கள் கரைகளில் நெருங்கி அடர்ந்து. நிழலிட்டூ, தமது கொம்புகளையும். கிளைகளையும் தெளிந்த நீருக்கு மேலே தாழ்த்தி அழகு: செய்யும் குளங்களில், நீராடிக் களித்தல் வேண்டும். “*மந்தியும் அறியா மரம் பயில் அடூக் கம்'” சென்று, வானுற வோங்கி வளம் பெற வளர்ந்திருக் கும் பெரிய மரங்களையும், அவற்றிற்கு அடியில் எண்ணி றந்த பல்வகைச். சிறிய. மரங்கள் செறிந்து விரிந்த காடு களையும், அவற்றின் கீழே தரையில் ஒன்றன்மே லொன் ரகக் கிடந்து, படர்ந்து, தழைத்து, தம்மிடையே எவரும் புக வொட்டாத கொடிகளையும், செடிகளையும், புதர்களையும், அச்சம் என்பது சிறிதும் அறியாது ஆங்காங்கு உலாவித் திரியும் அழகிய வன விலங்குகளையும், மரக்கிளைகளில் அமர்ந்து மகிழ்ந்து பாடும் வனப்பு மிக்க பறவைகளையும், குன்றுகளின் உச்சியிலிருந்து பளிங்குபோல் தெளிந்தோ டூம் அருவிகளையும், ஓடைகளையும், நீர் நிலைகளையும் கண் ணுற்றுக் குறிஞ்சி நிலத்தின் மாண்பினை உணர்தல் வேண் டும். முல்லை நெய்தல் முதலான நிலங்களின் இயற்கை வளங்களையும், வனப்புகளையும், ஆங்குச் சென்று அந்நில மக்களுடன் உறைந்து, கண்கூடாகக் கண்டால் அன்றி வேறு வகையாய் அவற்றினை உள்ளவாறு. அறிந்து கொள்ளல் அமையாது,
தமிழ்ப் புலவரின் உவமைகள் பல வியக்கத் தக்கன. வேப்பம் பூவை நுட்பமாய் பார்த்த புலவர், அது இருல் மீன் கண் போல் இருக்கின்றது. என்றனர், வேறொருவர், கலைமான்: “இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பு'' உடை யது என்றார். இன்னொருவர், பாடினியின் சிவந்த மெல்
மலரும். மாலையும் 61
லிய உள்ளங்கால், வேட்டைக்குச் சென்று. நீர் வேட்கை மிக்கு, இளைப்புற்ற. நாயின் நாவினை ஒக்கும் எனக் கூறி னர். பின்னொருவர், வாகைப் பூவை மயிலின் சிகைக்கு உவமித்தார், மற்றொருவர், நெல்லித் கனி முயலின் கண் ணிற்கு நிகர் என நிகழ்த்தினர். பிறர். ஒருவர், நாரையா னது “பழம்படூ. பனையின் கிழங்கு பிளந் தன்னப் பவழக் கூர்வாய்'' உடையது என உரைத்துள்ளார். காந்தள் மல ரைக் கண்ட புலவர் களிப்புறும் வகைதான் என்னை? காந்தள் இதழ்கள்- குவிந்திருப்பது, இறை வழிபாடூ செய் யும் இனிய மகளிரின் குவிந்த கைபோல். கவின் செய்கின் றது என்றார் ஒருவர். மாலைப் பொழுது, அதன் தோற்றம் இயற்கை மகள் ஏற்றும் விளக்குப் போல் விளங்குகின்றது என விளம்பினர் மற்ற வர். முறுகி யிருக்கும் அதன் இதழ்களைக் கண்டவர் உடைந்த அரக்கு வளைகளை அவற் றிற்கு ஒப்புவமை கூறினர். அதன் இலைகளை: உற்று நோக் கியவர்,கள்ளை மிகுதியாக உண்டு மயங்கித் தடுமாறித் திரி யும் களியர்க்கு அவற்றினை ஒப்பிடுகின்றார். இங்ஙனம், மலர்களையும், மரங்களையும், செடிகளையும், கொடிகளையும், எண்ணிறந்த. இயற்கைப் பொருட்கள் பிற வற்றையும் தத்
தம் மதி. நுட்பத்தினால். கையாண்டு, அவர் கூறியுள்ள உவ மைத், திறன்கள் மிகச், சிறப்புடையன. அன்னார். யாப்பி யல் நன்குணர்ந்த கவிஞர், உள நூல் கற்று வல்ல அறிஞர்; செடி நூல் வல்லுநராகவும் விளங்கினர்.
௫
தமிழர் தம் வழி: பாட்டு முறைக்கு. மலர்களையும், மாலை களையும், இயற்கை. வனப்பையும், பயன்படுத்தி வந்தனர். மலர்களால் வழிபடும் முறை திராவிடச் சிறப்பு முறை
02 .... மலரும் மாலையும்
எனக் கூறுவாரு முளர், வைதிக வழிபாட்டில் மலர் வழி பாடு இல்லை என்பதும், ஆரியர் திரா விட ரிட மிருந்தே மலர் வழிபாட்டு முறையைக் கற்றனர் என்பதும், அவர் துணிபு. “பூஜை” என்னும் வட சொல், “பூ செய்! எனும் தமிழ்ச் சொல்லின் திரிபு என்பாரு முளர். அதற் குத் தக்க சான்றுகளும் உள. பூ வழிபாடு வேத காலத் தில் ஆரியர்கண் இன்மையாலும், “பூஜை” எனும் அடிச் சொல் ஆரியத்தில் தவிரப் பிற இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் காணாமையாலும், “புஷ்ப கர்ம பூஜை'' திரா விட மக்களின் தனிப் பண்பாட்டிற்கு இசைந்தது என நம்புதற்கு இடமுண்டு *.
முருகன் வழிபாடு இயற்கையுடன் கலந்த வழிபாடு. அவன் விரும்பும் இடங்கள் யாவை எனின், இயற்கை வனப்புத் தோன்றும் இடங்கள் அனைத்துமே யாம்.
- S.K. CHATTERIJI, Race Movements and Prehistoric Culture in the Vedic Age. London, 1951. P. 160. “The characteristic offerings in the Puja rite Viz. flowers, leaves, fruits, water, etc.; are not known to the homa rite, except in instances where it has been influenced by the puja. It has been suggested with good reason that puja is the pre-Aryan, in all likelihood the Dravidian form of worship, while the homa is the Aryan: and throughout the entire early Vedic Literature, the puja ritual with flowers etc. offered to an image or symbol is unknown, The word puja, from a root puj, appears, like the thing it connotes, to be of Dravidian origin also. This word or
root is not found in any Aryan or Indo-European langu- age outside India.
மலரும் மாலையும் 63
“காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்”* எனத் திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் கூறுகின்றார். அவனை வழிபடுவோர் சிவந்த மலர்கள் தொண்டே வழி பட்டு வந்தனர். கடம்பின் மலர் மாலை அணிபவன் அவன், வெட்சி மாலையும் விரும்புவான். அவனை வழி படூம் ஆடவரும் மகளிரும், அவனைப் போல், சிவந்த மலர் களை அணிந்தே வருவர். இவ்வாறே, முல்லை நிலத்தில், திருமாலை முல்லை மலர் கொண்டு வழிபட்டு வந்தனர். நிலத்தின் தெய்வத்தை வழிபடுதற்கு, நிலத்தில் தோன் றிய மரம் செடிகளின் மலர்களையும், தழைகளையும், கை யாண்டனர்.
தமிழ் காடு வெப்பம் உடையது. நிழலை ஈம் மக்கள் விரும்புவது இயற்கையே. ஆதலால், ௩ம் புலவர் குளிரை யும் தண்மையையும் குறிக்கும் அடை மொழிகளைப் பெரி தும் கையாளுதின்றனர். வெப்பத்தைப் போருக்கும் துன்பத்திற்கும் உரிய பண்பு எனக் கருதுகின்றனர். புல வர் ஒருவர் தம் புரவலரைப் போற்று மிடத்து, “மாரி அன்ன வண்மையிற் சொரிந்து,வேனில் அன்ன என் வெப் பம் நீங்க” எனக் கூறுகின்றார். மற்று மொருவர், 'அடுப் பில் சோறு அடும் வெப்பமும், ஞாயிற்றின் வெப்பமுமே அன்றி, வேறு வெப்பம் உன் நாடு அறியாது' என்கின்றார்.
நிழல் என்பார் அதனை நன்கு ஆய்ந்து, அதன் திறங் களை வகுத்துள்ளனர். “கொழு நிழல்”, “புள்ளி நிழல்””,
64 மலரும் மாலையும்
“புகர் நிழல்", “தண் நிழல்”, “மன் நிழல்”, “வரி நிழல்”, “இன் நிழல்”, “மா நிழல்”” என்று, வெய்யிலில் வருந்திய மக்கள் நிழலின் அருமையைக் கண்டனர். தய்ம்புக் கன்ன பயம்படு தண்ணிழல்'” என்றும், “கயம் கண் -டன்ன பெருமரக் குழாம்'' என்றும், நிழலைக் குளிர்ந்த நீருக்கு ஒப்புவமை கூறுதலால், நிழலைப் பற்றிய உணர்ச்சிகளை அவர் மிக்குணர்ந்தவர் என்பது போதரும்.
௫
மேலும், மலர்கட்கும், மரங்கட்கும், தமிழில் உள்ள பெயர்கள் இன்னோசை உடையவை. வெர்ஜில் எனும் இலத்தீன் புலவர், மலர்ச் செடிகளின் பெயரைக் கொண்டு இன்னோசை படைத்த பல அடிகள் யாத்துள்ளனர் என்ப. தமிழ்ப் புலவரும், தமிழ்ப் பெயர்களைக் கொண்டு, செவிக் கினிய பல அடிகள் யாத்துள்ளார், மெல்லிணர்க் கொன்றையும் மென்மலர்க் காயாவும் புல்லிலை வெட்சியும் பிடவும் தளவும் குல்லையும் குருந்தும் கோடலும் பரங்கரும் கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்”? என்பது கலித்தொகைப் பாட்டு. இப் பாட்டின் அடிகள் எத்துணை ஓசை இனிமை உடையன என்பதைக் கலிக் குரிய துள்ளல் ஓசையுடன் படித்துப் பார்க்க. கபிலர், குறிஞ்சிப் பாட்டில், தொண்ணூற்றொன்பது -யூக் களின் பெயர்களை _வைத்து, முப்பத்தைந்து அடிகள் யாத்துள்ளார். அவற்றை விரைவின்றி மெல்லப் படிக்கும் பொழுது, தமிழ் மக்கள் மலர்கட்கும், மரங்கட்கும் இட்ட பெயர்கள், எத்துணை அழகு வாய்ந்தன் “என்பது "இனிது -
மலரும் மாலையும் 65
விளங்கும், சிறு பாணாற்றுப் படையில் வரும் சில அடி கள் ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கற் பாலன:-- “அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும் தலைநாட் செருந்தி தமனிய மருட்டவும் கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும் - நெடுங்காற் புன்னை நித்திலம், வைப்பவும்”'
௬
தமிழ்ப் புலவர், தம் பாடல்களில், தலைவர் தலைவியர் மலர்களை மிகவும் விரும்பினர் எனக் காட்டியுள்ளார், தலைவன் தலைவிக்குக் தையுறையாகக் கொடுப்பது மலரே யாம். தலைவி தன் தோழியருடன் மலர் கொய்யும் தொழி லில் பொழுது போக்குவாள். தன் இல்லத்தில் அயலைச் செடியை வளர்ப்பாள். அதற்கு நாடோறும் நீர் வார்த்து மிகவும் பேணி வருவாள். இவ்வாறு தலைவர் தலைவியர் ஈடுபாடு மக்களின் ஈடுபாடாய் இருந்தது.
தமிழ்ச் சிறுவர் தாம் பிறந்த நாள்: தொடங்கி மலர் களை விரும்பி வந்தனர். போர் வீரன் மனைவி ஆண் மக வைப் பெற்றதும், அவள் கணவன் போர்க்குரிய மாலை களைச் சூடித் தன் குழந்தைக்கு முதற் காட்சி அளிப்பான். இக் காலம் போல் ௮க் காலமும், அன்னையர் தம் சிறுவர்க் குச் சிறு மலர்களை முடியில் மிலைச்சுவது வழக்கமாயிருந் தது. சிறுவர் பூக்களையும், பழங்களையும், விதைகளையும் வைத்து விளையாடினர். ஆடைகளுடன் மாலைகளும் அணிந்தனர். தலையில் அணியும் மாலை கண்ணி எனப் பெயர் பெற்றது. காதிலும் சிறு மாலைகளைத் தொங்க விட்டனர். கழுத்தில் ஆடவர் அணியும் மாலை தார் என்
9
66 மலரும் மாலையும்
றும், பெண்டிர் அணிவது கோதை யென்றும் பெயர் பெற் றன. மகளிர் தழைகளால் தொடுத்த தழை யுடைகளை அணிந்தனர். இம் மாலைகளும் தழை யுடைகளும், ஒரே வகைப் பூவினாலும், ஒரே வகைத் தழையினாலும் செய்யப் பெற்றன, சில வேளைகளில், பல வகைப் பூக்களையும், தழைகளையும், உரிய முறையே விரவி, மாலைகளும் உடை களும் செய்தனர்.
தமிழர் தம் இல்லங்களை இயற்கை வனப்பு மிக்க இடங்களில் நிறுவினர். தம் நகரங்களில் பூம் பொழில் களையும், தோட்டங்களையும், இள மரக் காவுகளையும், இனிய சோலைகளையும் நிறுவினர். இல்லங்களின் முன்னே அழகிய பந்தர்கள் அமைத்து வைத்தனர். இறையனார் அகப்பொரு ஞூரையில் அழகுறக் கூறப் பெற்றுள்ள இல் லமும் பொழிலும், அக்காலத்து வனப்பினை ஒருவாறு காட்டுகின்றன. களவொழுக்கம் நிகழும் இடங்கள் எல் லாம் இயற்கை வனப்பு வாய்ந்த இடங்களாகவே தோன்று கின்றன. சங்கச் செய்யுட்களில், தலைவி தன் தோழியருடன் வேங்கை மலர் கொய்து விளையாடூ மிடத்துத் தலை வன் எதிர்ப்படும் வழக்கம் கூறப் பெற்றுள்ளது. வேங்கை மலர்கள் புலியின் நிறத்தை ஒப்பன. எனவே, புலி, புலி' எனப் பூச லிடின், வேங்கை தன் கிளைகளைத் தாழ்த்தி, மலர்களைக் கொடுக்கும் என்பது சிறுவர் நம்பிக்கை. வேங்கை மலர்கள் குறிஞ்சி நிலத்திற் குரிய அழகிய மலர் கள். அது பூக்கும் பரு வம் திருமணம் நிகழ்த்துதற் குரிய பருவம் எனக் கருதப் பெற்றது. இயற்கையுடன் அளவளாவிய தமிழ் மக்கள் வேங்கை மரத்தின் நறு நிழ லில் திருமணங்களை நிகழ்த்தி வந்தனர் என்பதற்குப்
மலரும் மாலையும் 67
போதிய சான்றுகள் உள்ளன. வேங்கை பூப்பின் வரை விடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைவர் தம் நாடு மீண்டு, தம்மை மணந்து கொள்வர் எனத் தலைவியர் எதிர் நோக்கி யிருப்பர். குறுந் தொகைப் பாட்டூ ஒன்றில், தலைவி ஒருத்தி வேங்கை பூத்தது கண்டதும், தன்னை அறி யாமலே கண்ணீர் சொரிந்தனள் எனப் புலவர் கூறுகின் றார். வேங்கை பூத்தும், தலைவன் வாராமையே அதற்குக் காரணம். - ல்,
வேங்கை மலர்களைத் தலைவர் கையுறையாகத் தம் தலைவியர்க்கு நல்கினர். தமக்குள்ளே அம் மலர் மாலை களை மாற்றிக் கொண்டனர். காதலன் தன் காதலிக்குத் தழை யுடையைக் கையுறையாகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. காதலி தன் தலைவன் நாட்டு மலைகளையும், அம் மலைகள் மீது தவழும் முகில்களையும், மலையிலிருந்து இழி யும் அருவியையும், அருவி நீரில் மிதந்து வரும் செடி கொடி மலர்களையும் காதலிப்பாள், தலைவி ஒருத்தி, தன் தலைவன் மலையில், மாலைப் பொழுதே மழை பொழிவதைக் கண்ணுற்றாள். அடுத்த நாட் காலையில், அருவி வெள்ளத் தில், காந்தட் செடி ஒன்று கிழங்குடன் மிதந்து வருதல் கண்டாள். ௮ச் செடியை மிக்க ஆர்வத்துடன் எடுத்து வைத்து முயங்கினாள். அவ் வெப்பத்தினால் இலைகள் வாடின. ஆயினும் அச் செடியிலுள்ள கிழங்கைத் தன் முற்றத்தில் நட்டு, மிகக் கருத்துடன் நீர் வார்த்து வளர்த்து வந்தாள். .. (குறுந்தொகை : ௩௬௧).
திருமணம் நிகழும்.பொழுது, தமிழ் மக்கள், மணப் பெண் மீது மலர்களைத் தூவி வாழ்த்தினர். .தம்: ஊர்க்
68 மலரும் மாலையும்
குப் புதிதாய் வந்த விருந்தினர்க்கு, அவ்வூர் மக்கள் மலர் கொய்து கொடுத்து வரவேற்பர். புலவரும், கூத்தரும், பாணரும், அரசர்பால் செல்லும் பொழுது, அவர்கட்குப் பரிசிலாக நாடும், ஊரும், களிறும் நல்குவதுடன், பொன் னால் செய்த தாமரைப் பூவினை அளிப்பதும் அவர் வழக் கம். சில வேளைகளில், வெள்ளி நாரினால் கட்டிய பொற் பூங் கொத்து நல்குவர். இசை வாணர் யாழ் முதலாய இசைக் கருவிகளுக்கு மலர்மாலை சூட்டி அணி செய்தனர். .
ச
௮௧ வொழுக்கத்திற்கு மாலைகளைப் பயன் படுத்திய வாறே, தமிழ் மக்கள் புற வொழுக்கத்திற்கும் அவற்றி னைப் பயன் படுத்தினர். போரின் ஓவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு பூ அடையாளம் ஆகும். ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டூ வருதற்குச் செல்லும் வீரர், கொத்துக் கொத்தான வெட்சி மலர் மாலைகளை அணிந்து சென்றனர். பகைவர் நாட்டின் மீது படை யெடுத்துச் செல்வோர் வஞ்சிமாலை அணிந்தனர். கோட்டைகளை முற்றுகை யிடவோர் உழிஞை மாலை சூடினர். கடும்போர் நிகழ்த்து மிடத்துத் தும்பை மாலை அணிவர். வெற்றி பெற்றோர் வாகை மா புனைந்து, அவ் வெற்றியைக் கொண்டாடுவர். ஆனிரை மீட்டற்குச் செல்வோர் கரந்தை மாலை சூடுதலும், கோட்டையைப் பகைவர்க்கு எதிராக நின்று காக்கும் வீரர் நொச்சி மாலை அணிதலும், நிலை யில்லாத உடம்பினை நீத்து, நிலையான புகழை நாட்ட விரும்பியோர் காஞ்சி மாலை பூண்டு போர் புரிதலும், பெரு வழக்காக இருந்தது. ட
மலரும் மாலையும் 69
தமிழ் மக்கள், அக வொழுக்கத்திற்கு மலர்களையும், மாலைகளையும், பயன் படுத்தினர் என்பது அத்துணை வியப் பன்று. அவற்றைப் புற . வொழுக்கத்திற்கு எவ்வாறு பயன் படூத்தினர் என்பதுதான் வியப்பு. இது “பநர- 1௦110” போன்ற தென்பது போப்பையர் கருத்து. மலர் களாலும் மாலைகளாலும், வீரர் மகிழ்ச்சியும் ஊக்கமும் அடைந்திருப்பர் எனக் கருத இடமுளது, எனினும், போரிலே தானும் அவற்றை வழங்கி வந்த செய்கை, தமிழ் மக்கள் பண்பாட்டின் உயர்ந்த சிறப்பிற்கு என்றும் குன் றச் சான்றாய் விளங்குகின்றது. வீரர் மலர் மாலை அணிந்து செல்லும் காட்சியின் அழகைப் புலவர் பலவாறு புனைந்து புகழ்வர். வெட்சி மாலை புனைந்து செல்லும் வீரர் “செவ்வானம் செல்வது போல் செலகின்றார்'' என்றார் புலவர் ஒருவர். மதுரையி லிருந்து திருபபரங்குன்றத் திற்குத் திருச் செலவாகச் செல்லும் மக்கள், மலர்களையும் மாலைகளையும் சூடிக்கொண்டு சென்றமையால், தெரு அனைத்தும் ஒரே மாலை இட்டது போல் தோன்றியது என ஒருவர் குறிப்பிடுகின்றார்,
மேல் நாடுகளில், உரோசா மலர், இலிலி மலர், எருக் கிலை மலர், அரசர்க்கும் அரசர் மரபினர்க்கும் அடையாளப் பூக்களாக வழங்கியுள்ளன. தமிழ் மக்கட்கும், தமிழ் அரசர்க்கும், அடையாளப் பூக்கள் இருந்தன, சேர மன் னர்க்குப் பனம் பூவும், சோழ மன்னர்க்கு ஆத்திப் பூவும், பாண்டிய மன்னர்க்கு வேப்பம் பூவும் அடையாளம். போருக்குச் செல்லும் வீரர் போர்க்குரிய மாலைகளை அணிந்தனர். போர் நடத்தும் மன்னர் தம் அடையாளப் பூமாலைகளுடன் போர்மாலைகளும் பூண்டனர். நெடுநல்
70 மலரும் மாலையும்
வாடையில், பாண்டியன் நெடுஞ்செழியன். போரிற் புண் பட்டுப் பாசறையில் தங்கியிருக்கும் தன் படை வீரர்க ளைப் பார்க்கச் சென்றனன். எனக்: கூறு மிடத்தே, அவ னது படைத் தலைவன், வேப்ப மாலை சூட்டி யுள்ள மன் னன் வேலினைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, அவன் முன்னர்ச் சென்றான் என நக்கீரர் குறிக்கின்றார். பண்டைத் தமிழர் எத்துணையாக ஓலைகளைக் கை: யாண்டு வந்தனர் என்பதற்கு, இன்றும் தமிழர்: அணியும் அணிகலன்களின் பெயர்கள் சான்றாகின்றன. தோடு, அரசிலை, குழை, ஓலை, கொந்திளவோலை, தாலிக்கொடி என்று அவ். வணிகலன்களுக்குப். பெயர் சொல்லும் பொழுது, அவை முதலில் ஓலையும் குழையு மாகவே இருக் திருத்தல் வேண்டும் எனக் கருத இடம் உண்டு. அக் காலத்தில் இயற்கையுடன் இசைந்து வாழ்ந்த தமிழ். மக் கள், ஆம்பல் கொடியையும், பனையோலையையும், இன்னும் பல் வகை இலைகளையும் கொண்டே தம்மை. அணி செய்தி ருந்தனர். அவர் தம் கட்டில், நாற்காலி, முதலிய பொருட் களும், செடி கொடி இலைகளின் வடிவங்களைக் காட்டின.
சங்க இலக்கியத்தில், அகத்துறை . புறத்துறைகளில் உவமிக்கப்படும் மலர்களை இதுகாறும். நன்கு ஆராய்ந் தார் அல்லர் தமிழ் அறிஞர், அவற்றைத் தக்கவாறு ஆராய்ந்துணர்ந்து, பண்டைத் தமிழ்ச் செய்யுட்களை இன் னும் பலர் பன்மடங்கு சுவை. நுகரச்: செய்வதே, . தமிழ் மொழியும் செடி நூலும் கற்ற அறிஞர் பெருங்: கடமை
௪. காப்பியக் கவிஞர்
காப்பிய கவிஞர் வீரமாமுனிவர்
க்
வீரமாமுனிவர், இத்தாலியா நாட்டில், மாந்துவா மாவட்டத்தில், காஸ்திலியோனே எனும் சிற்றூரில், 1680- ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் எட்டாம் நாளிலே பிறந் தார். பெரும் புகழ் பெற்ற இலத்தீன் கவிஞர் வெர்ஜில் என்பவர் பிறப்பிடமும் மாந்துவா மாவட்டமே, ஆத லால், மாந்துவா மாவட்டம் இரு பெருங் காப்பியக் கவி ஞரை உலகிற்கு ஈந்துள்ளது. வெர்ஜில் எழுதிய ஏனையிட் (Aeneid) எனும் காப்பியம் வீரமாமுனிவரின் தமிழ்க் காப்பியத்திற்கு எடுத்துக் காட்டாக நின்றது என்பது திண்ணம். நமது முனிவரின் தந்தையார் உயர்குடிப் பிறப்பினர், அவர் பெயர் கண்டோல்போ பெஸ்கி (Count Don Gandolfo Beschi). அவர் தமது அரும் பெறல் மைந்தர் பிறந்த ஐந்தாம் நாளில், சமய குரவரால் அவர்க்கு ஞானநீராட்டுச் செய்வித்து, ஜோசப் கொன்ஸ் டான்ஸ் எனும் திருப்பெயரும் சூட்டி னார், கொன்ஸ் டான்ஸ் எனும் அவரது இயற்பெயர் வடமொழியில் தைரி யம் என்று பொருள்படும். -அவர் தமிழ் நாட்டிற்கு வந்த
72 காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர்
பொழுது, தம்மைத் “தைரியநாத சுவாமி'' என அழைத் தார். அவரது இயேசு பணியின் ஆர்வமும், தமிழ்ப் புல மையும் கண்ட மதுரைச் சங்கத்தார், “வீரமா முனிவர்” என அவரை அழைத்தனர். சந்தாசாகிப் எனும் அவரது நண்பர் அவரது துறவின் மாண்பினை உணர்ந்து, “இஸ் மதி சன்னியாசி” என அவர்க்குப் பட்டம் தரித்தார்,
அவரது இளமைப் பருவத்தைப் பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்க வில்லை. தம் 18-ம் ஆண்டில் (1698) கத்தோலிக்குத் திருச்சபையின் துறவோர் குழுக்களுள் உலகப் புகழ் பெற்ற இயேசு சபையைச் சேர்ந்தார். பன் னீராண்டுகளாகக் குருப் பணிக்கு இன்றியமையாத கல் விப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இடையிடையே இயேசு சபைக் கல்லூரிகளில் கல்வி பயிற்றுவதிலும் சிறப் புற்று விளங்கினார். 1709-ம் ஆண்டு அவருக்குக் குரு பட்டம் அளித்தனர். 1710-ஆம் ஆண்டு இலிஸ்பன் துறை முகத்திலிருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டு வந்து, 1711- ஆம் ஆண்டு தென்பாண்டிய நாட்டில் தொண்டாற்றிய இயேசு சபைக் குருக்களுடன் சேர்ந்தார்.
இயேசு சபைக் குருக்கள் இந்தியாவில் பற்பல திருப் பணிகள் ஆற்றி வந்தனர். மதுரை மிஷன் என்பது அவர் தொண்டாற்றுதற் கெனப் போப் ஆண்டவரால் வகுக் கப். பெற்ற ஒரு மாவட்டம். ஆங்குத் தே நோபிலி எனும் தத்துவ போதகர் காலந் தொடங்கி, ௮க் குருக்கள் காவி யாடை அணிந்து ஊனுணவு கடிந்து, ஐரோப்பியரின் தொடர்பு துறந்து, தமிழ்ப் பழக்க வழக்கங்களை மேற் கொண்டு வந்தனர். . அதனால், கத்தோலிக்குச் சமயம்,
காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 79
அக் காலத் தமிழ் மக்கள் எண்ணியவாறு, பறங்கியர் சம யம் அன்று எனவும், அது மக்கள் அனைவர்க்கும் பொதுச் சமயம் எனவும் காட்டினர். அவர் அரிய தொண்டின் பய னாக, சோழ பாண்டிய நாடுகளில் உயர் குலத்தோரும் பலர் கத்தோலிக்குச் சமயத்தை மேற்கொண்டனர்.
௨
வீரமாமுனிவர் தமிழ் நாட்டிற்கு வந்த காலத்தில், மதுரை மிஷன் மாவட்டம் பாண்டிய நாட்டுக் காமநாயக் கன் பட்டியைத் தென் எல்லையாகவும்,தொண்டை நாட்டுக் கோனான்குப்பத்தை வட எல்லையாகவும் கொண்டு விளங்கியது. முனிவர், முதல் ஐந்து ஆறு ஆண்டுகள், காம நாயக்கன் பட்டி, கயத்தாறு, மதுரை, தஞ்சாவூர், அரிய லூர் முதலான இடங்களில் திருத்தொண் டாற்றினார். தமிழ் நாட்டின் தட்ப வெப்ப நிலைகளால் அவர் சிலகாலம் உடல் நலிவுற்று ராயினும், மனம் தளர்வுற்றார் அல்லர், அக்காலம் அரசியற் புரட்சிகளும் நாட்டைத் துன்புறுத் தின. அத் துன்பங்களில் முனிவர்க்கும் அவர் பங்கு கிடைத்தது. எனினும்,
“சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச் சுட நோற்கிற் பவர்க்கு” (குறள்: ௨௬௭)
என்பதுபோல், அவர் அவற்றினைத் தம் அரிய துறவொ
முக்கத்தினால் மேற் கொண்டு, தாம் தனிமறை எனக்
கொண்ட சமயத்தினைத் தமிழ் நாட்டில் தமிழனுக்குத் தமி
ழனாய் இருந்து போதிக்க உறுதி பூண்டு, தமிழ் மொழியை
வழுவறப் பேசவும் எழுதவும் கற்று, இலக்கிய இலக்கண 10
74 காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர்
நூல்களை ஐயந் திரிபற ஆராய்ந்து, தாமும் அத்தகைய பெரு நூல்கள் இயற்றும் ஆற்றல் பெற்று விளங்கினார்.
தமிழ் நாட்டிற்கு வரு முன்னரே இத்தாலியம், கிரேக் கம், ஈபுரு, இலத்தீன், போர்த்துக்கீஸ் முதலாய மொழி களையும், அவற்றின் இலக்கியங்களையும் கற்றுணர்ந்திருந் தார். இங்கு வந்ததும் தமிழ் மொழியை இணையற்ற முறையாய்ப் பயின்றறிந்தார். சமஸ்கிருதம், தெலுங்கு, உருது நன்கு கற்றார். அவர் சமயத் தொண்டு தமிழ்த் தொண்டிற்கு உதவியது போல், அவர் தமிழ்த் தொண்டு சமயத் தொண்டிற்கு உதவி யாயிற்று. வீரமாமுனிவர் தம் முப்பதாம் ஆண்டின் பின் தமிழ் மொழியைக் கற்றுப் பெரும் புலமை எய்தினார். இத்துணை ஆண்டின் பின் இத்துணைப் பெரும் மொழியைக் கற்று, இத்துணைப் பெரும் புலமை பெற்று விளங்கியதற்கு, உலக வரலாற்றில் இதுகாறும் இவருக்கு ஒப்பாயவர் எவரும் தோன்றிலர், சூசை கொன்றாடு (7௦5801 Conrad) என்னும் போலந்து நாட்டுப் பெரியார், தம் பதினேழாம் ஆண்டில் ஆங்கிலம் கற்கத் தொடங்கி, சிறந்த ஆங்கில நூலாசிரியர் ஆயினர், வீரமாமுனிவரின் திறம் கொன்றாடின் திறத்தினும் பன் மடங்கு உயர்ந்தது.
௩
இவர் ௩ம் தமிழ் மொழிக்குச் செய்துள்ள தொண்டு ஈடும் எடுப்பும் அற்றது. தமிழ் உரை நடைக்குத் தத்துவ போதகரே (De Nobile) தந்தை என்ப. அது உண்மை யெனினும், இவரால் அது வளம் பெற்று மிக்குயர்ந்தது. வேத விளக்கம், பேதகமறுத்தல், லுத்தேரினத்தார்
காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 75
இயல்பு, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குரு கதை முதலியன, அவற்றுள் தலை சிறந்தவை. தமிழ் உரை நடைக்கு வளர்ப்புத் தந்தையாக விளங்கிய முனிவர், தமிழ் அகராதிக்குத் தனித் தந்தையே ஆகிவிட்டார். அவர் செய்துள்ள சதுர் அகராதி தமிழ் அகராதிகட் கெல்லாம் முற்பட்டு விளங்குகின்றது. தொல்காப்பி யம், நன்னூல், சின்னூல் எனும் பழைய இலக்கண நூல் கள் பல இருப்ப, இவர் தொன்னூல் எனும் இலக்கண நூல் செய்தனர். அதுவும் இலக்கண நூல்களில் தனிச் சிறப்புடைய தாகும். எழுத்துக்களில் ஏ, ஓ வடிவ முதலிய வற்றில் அவர் அமைத்துள்ள சில மாற்றங்களைப் பின்னை யோர் அனைவரும் போற்றி வழங்குவராயினர். பொருளி யல் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கும் அழகும், பண்டை அணியியல் இருப்ப, மேலை நாட்டு மொழிகளில் வழங்கும் சொல் வன்மை இலக்கணத்தை (Rhetoric) நயம்பட விளக்கி யுரைத்துள்ள திறமும், பன்மொழிப் புலவர் பாராட்டிற் குரியன. தமிழ் மொழியில் வழங்கும் தொண்ணுற்றாறு வகைப் பனுவல்களில் கலம்பகம் என் பது ஒன்று. அவற்றுள் அழகர் கலம்பகம், மதுரைக் கலம்பகம், திருவரங்கக் கலம்பகம் முதலான ஒரு சில கலம்பகங்களே புகழ் பெற்றவை. முனிவர் இயற்றிய திருக்காவலூர்க் கலம்பகம் முற் கூறிய மூன்றனுள் எதற்கும் எட்டூணையும் தாழ்ந்த தன்று, அதனை ஆராய் வோர் அதன் தனிச் சிறப்பினைக் காண்பர். பத்தியை வளர்க்கும் கித்தேரி அம்மாள் அம்மானை . முதலிய பல் வகைச் சிறு நூல்களும், மக்கள் வாழ்க்கை ஆகிய “உருள்
76 காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர்
பெருந் தேர்க்கு அச்சாணி அன்ன” இன்றியமையாப் பெரும் பயன் விளைப்பன.
௪
இவை நிற்க, தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் இயற்றிய பேராற்றலாலும், பெரும் புகழாலும், இவர் திருத்தக்க தேவர், இளங்கோவடிகள், கம்பநாடர் முத லாய புலவர் வரிசையில் இடம் பெற்றுவிட்டனர், தேம் பாவணியில் அடங்கிய காண்டங்கள் மூன்று, படலங்கள் முப்பத்தாறு; செய்யுட்கள் மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து. வீரமாமுனிவரின் இயற் பெயர் சூசை (Joseph). எனவே, தாம் தாங்கிய பெயருடைத் தலைவரை இக்காப்பியத்தில் போற்றினார் போலும், இஸ்பானிய தேயத்தில் ஆகிர் என்பது ஒரு நகர், அங்கு இயேசு பற்று மிக்குடைய கன்னியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் இறைவனின் திரு அருளால் இயேசுநாதரின் காவல் தந்தையாகிய சூசையெனும் திருத்தொண்டரின் வர லாற்றை எழுதலானார். அந்நூலே ௩ம் புலவருக்கு முதல் நூலாகும், இனி, விவிலிய நூலில் வரும் பல வரலாறு களையும், தம்முடைய சொந்தக் கருத்துக்களையும் சேர்த்துக் காப்பியத்தை இயற்றினர்.
காப்பிய ஆசிரியர் அனைவரும் அவ்வாறே செய்வர். தமிழில் கம்பரும், ஆரியத்தில் வால்மீகியும், கிரேக்கில் 'ஹோமரும், இலத்தீனில் வெர்ஜிலும், இத்தாலியத்தில் தாந்தேயும், போத்துந்கீதத்தில் காமோஈவும் ஆங்கிலத் தில் மிலடனும், தம் காப்பியங்களில், நிகழ்ந்த வரலாற்றை மட்டும் கூற வில்லை. அடிப்படையான வரலாற்றை வைத்
காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 77 துக் கொண்டு, தங்கள் நோக்கத்தோ டொப்ப, காப்பி யத்தை விரிப்பர், பல சிற்றாறுகள் வந்து விழும் பேராற் றைப் போல், பல சிறுகதைகளும், வரலாறுகளும், செய்தி களும் திரண் டூ, சிறப்புறுப்போடு இயைந்து, தொடர் நிலைச் செய்யுள் உருவாகும்.
பாலைத்தீன் (Palestine) நாட்டில் யூதர் குலத்தில் பாட்டுடைத் தலைவராகிய சூசை பிறக்கின்றார். அவர் மக்களுள் ஒப்பாரும் மிக்காரு மின்றி வளர்ந்து, இளைஞ ராகவே துறவறம் புக எண்ணி, வனத்தை நோக்கிச் செல் கின்றார், வானுறையும் தேவதூதர் ஒருவர் அவரைக் கண்டு, அவர் இல்லறத்திலே துறவறம காண்பது இறை வன் ஆணை யெனக் கூறுகின்றார். அந்நாட்டில் தேவால யத்தில், கன்னித் தவம் பூண்டு, மங்கையர்க் கரசி யாயும், மாசறு நங்கை யாயும் விளங்கும் மரியாய்க்கும், தேவ தூதர் சென்று சூசையைத் திருமணம் செய்யும்படி கூறு கின்றார். இருவரும் தாம் முன் கொண்டூள்ள நோன்பிற் குச் சிறிதும் சிதைவிலலாமல் இல்லறத்தை .இனிது ் நடத்தும் பொழுது, இறைவனின் திருவருளால் கன்னி மரியம்மையார் “கரு வில்லாத கருத் தாங்கிக் கன்னித் தாயாகி'' “உரு விலலானை மனித உரு வாக” உலகிற்கு ஈந்தார், ஆயரும் அரசரும் இயேசுவை வணங்குகின்ற னர். ஆயினும், அவ்வூரின் அரசன் இயேசுவைக் கொல்ல எண்ணுவதால், திருக்குடூம்பத்தைச் சேர்ந்த மூவரும் எகிப்து தேயம் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழி யில் அமைந்திருக்கும் ஊர்களும் இடங்களும் விவிலிய வரலாறுகளோடு தொடர்புடையன. எனவே, ௮வ்வர லாறுகள் அனைத்தையும் காப்பியஆசிரியர் இணைத்துக் கூறு
78 - காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர்
கின்றார். இயேசு நாதரும், அவர் பெற்றோரும் நாசரேத் எனும் ஊருக்குத் திரும்பி, அங்குச் சில ஆண்டுகளாக ஒப் பற்ற இல்லற வாழ்க்கையில் ஈடூபட்டு வருகின்றனர். பாட்டுடைத் தலைவராகிய சூசையப்பரைப் பிணி சேர் வதும், அவர் அதனைப் பொறுமையுடன் தாங்குவதும், * அவர் உயிர் துறப்பதும், மண்ணுலகும் விண்ணுலகும் அவ ருக்கு முடி சூட்டி அவரைப் போற்றுவதும், இறுதிப் பட லங்களின் பொருளாவன.
சூசையப்பரின் வரலாற்றுடன் வேறு செய்திகள் இணைக்கப் பெறும் முறை குறிக்கற் பாலது, எடுத்துக் காட்டாக, வளன் எனும் சூசை யூதேயாவின் அரசு குலத் . தில் பிறந்தவர். அவ்வரச குலம் தாவீது அரசரை முதல் வராகக் கொண்டது, எனவே, சூசையின் குலத்தைப் பற்றிக் கூறும் புலவர் தாவீதின் அருஞ் செயல்களையும் வரைகின்றார். இவ்வாறு, விவிலிய .நூலிலிருந்து நூற். றைம்பது பகுதிகள் இக்காப்பியத்தில் இடம் பெறலாயின,
மேலும், கத்தோலிக்குத் திருச்சபையின் வரலாற்றுக் குறிப்புக்களை எதிர் கால முற்கூற்றுப் போல். நூலாசிரியர் கூறலானார். இயேசு நாதர் தம் தாய் தந்தையரோடு வாழும் பொழுது, தம் இல்லத்தைப் பிற்காலத்தில் வானோர் இத்தாலி நாட்டுக்கு எடுத்துச் செல்வ ரென்றும். ஆங்கு லொறெத்தோ நகரில் எக்காளும் அடியாரால் பெருஞ். செல்வமாய்க் காப்பாற்றப்படு மென்றும் கூறும்
காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 79
இடம் இத்தகையது, அப்படலத்தில் அவ்வில்லத்தைப் பற்றி ஒரு செய்யுள்;
ஓங்கியதோர் உடல்முகமோ முகக்கண்ணோ கண்மணியோ ஒளிசெய் மார்பிற்
" தூங்கியதோர் பூண்கலனோ சுடர்முடியோ முடிமணீயோ சொல்லுக் தன்மை நீங்கியதோர் வனப்பிவ்வில் நிலத்தெல்லை நிகரில்லா நேமி தன்னில்
_ வீங்கியதோர் பேரின்ப வீடதுவே
- மேல்வீட்டு வாயி லஃதே.
தேம்பாவணி கிறிஸ்து நீதி நூலாகவும் விளங்கு கின்றது. இயற்கை: வனப்பில் இறைவனின் தோற்றம், இல்லறம் துறவறங்களின் முதன்மை, தொழிலின் மாண்பு, வறுமையின் சிறப்பு, கற்பின் தலைமை, கடவுளின் இலக் கணம், வானோரின் உயர்வு, நரகரின் தாழ்வு, பாவத்தின் கொடுமை, அறத்தின் அருமை, காமத்தின் தீமை, காத லின் பெருமை, இவை யாவும் வெகு புலமையுடன் உரு வாக்கிக் காட்டப்பெற்றுள்ளன. மேலும், கத்தோலிக்கர் சிறப்பாகப் போற்றும் உண்மைகள் யாவையும் காப்பியத் தில் விளக்குகின்றார். ஞான நீராட்டு முதலிய அருள் அளிக்கும் வாயில்கள் எனும் தேவ திரவிய அனுமானங் களைப் பற்றியும், கத்தோலிக்கு மறைக்கு மனம் மாற்றுவ தற்கு ஒருவன் கூறக் கூடியவற்றையும், கதைமயமாகவும், தத்துவ மயமாகவும் கூறி யுள்ளார், சுருங்கச் சொல்லின் இக் காப்பியம் அவர் போதித்து வந்த திருமறையின்
80 காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர்
கோட்பாடுகளும், வரலாறுகளும், தத்துவங்களும், நீதி களும், வழிபாட்டு முறைகளும் அடங்கிய பெருங் களஞ்சியம்.
உவமை முதலிய: அணி நயங்களிலும், சொல் வளம் பொருள் வளங்களிலும், வீரமாமுனிவர். ஏனைய காப்பிய ஆசிரியருக்குக் குறைந்தவர் அல்லர், பிற காப்பிய ஆசி ரியர் செய்யுள் இயற்றினர். வீரமாமுனிவரோ, இலக்கண நூல்கள், மொழி நூல்கள், அகரவரிசைகள், உரைநடை நூல்கள், ஆகிய பல் வேறு நூல்களையும் இயற்றியும், காப் பிய ஆசிரியராக விளங்கும் தன்மையை எங்ஙனம் போற் றுவோம்?
இவை யாவற்றையும், வீரமாமுனிவர் தமிழ் மரபு வழுவாமல் கூறுவர். காப்பியத்தின் தோற்று வாயில், நாட்டுப் படலம், நகரப் படலம் ஆகிய படலங்களைக் காணலாம். கம்பரின் அயோத்தி தமிழ் நாட்டைப் போன்றது; கங்கை யென ஆற்றைப் பெயரிட்டாலும், அவர் புனைந்துரைக்கும் ஆறு காவேரி, வீரமாமுனிவர் காட்டும் பாலைத்தீன் நாடும் தமிழ்நாடு. ஆங்குள்ள ௭௬ சலேம் நகரும் ஒருவாறு தமிழ் நகர். காலத்தால் பின்னே வந்தவ ராதலால், வீரமாமுனிவர் முன்னோரின் மொழியைப் பொன்னே போல் போற்றினார். திருவள்ளு வர், திருத்தக்கதேவர், கம்பர், மாணிக்கவாசகர் முதலி யோரின் நடையும், முறையும், உவமையும், சொல்லும், இக்காப்பியத்தில் உள. தமிழ்க் காப்பியம், பரணி, உலா முதலிய இலக்கியங்கள் நன்கு, பயன்படுத்தப்பட் டிருக் கின்றன, மரியாயின் முகத்தி லிருந்து, கபிரியேல் தேவ
காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 81
தூதர் அவ்வம்மையாரின் எண்ணங்களை அறிந்தார் எனும் இடத்தில், “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்'' எனும் குறட்பா அமைவதைக் காண்க. எருசேலம் ௩கரை வர்ணிக்கப் போந்த புலவர் இவ்வாறு கூறுகின்றார் :-- மக்களின் மனங்கள் நீதியி லிருந்து அசைவன அல்ல; அங்கு அசைவன நீரின் அலை களே; களங்க மற்ற மக்களும் ஊரு மாதலால், மேகந் தான் கறுப்பா யிருக்கும்; வேறெங்கும் தூய்மை. ஒரு வகைப் போர்தான் அங்குண்டு; இரப்போர்க்கு ஈவதில் நிகழும் புகழ்ச்சிக் குரிய போட்டியே.
நீரல்லது மலையில்லது; நிறைவான் பொரு ளிடுவார் போரல்லது பகையில்லது; புரிவான்மழை பொழியுங் காரல்லது கறையில்லது; கடிகாவலு மறனாற் சீரல்லது சிறையில்லது திருமா௩க ரிடையே
(படலம் 2-66)
திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில், சேக்கிழார் திரு வாமூரைப் பற்றிக் கூறுவதுடன் ஒப்பிட்டு, இன்புறத் தக்க செய்புள் இது*
ஆங்கிலம் வணிகத்தின் மொழி யென்பர். இனி இலத்தீன் சட்டத்தின் மொழி யென்றும், கிரேக்கு இசையின்
நீரல்லதும் அலையில்லது என்க. அறனால் சீர் கடிகாவல் அல்லது சிறை (காவல்) இல்லது என்க.
- “ஒங்குவன மாடநிரை யொழுகுவன வழுவிலறம் நீங்குவன தீங்கு நெறி 9ெருங்குவன பெருங்குடிகள்.. ப புலர்நீல மிருள்காட்டும்...??
82 காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர்
மொழி யென்றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி யென் றும், பிரெஞ்சு தூதின் (Diplomacy) மொழி யென்றும், இத்தாலியம் காதலின் மொழி யென்றும் கூறுவது வழக் கம். இவ்வாறே தமிழும் இரக்கத்தின் மொழி, பத்தியின் மொழி. தமிழில் இரங்குவது போல் வேறெம் மொழி யிலும் இரங்குவது அரிது. தமிழில் இரப்பது போல் வேறெம் மொழியில் இரப்பதூஉம் அரிது. தமிழின் அவலச் சுவையை நன்கறிந்த வீரமாமுனிவர் இயேசு இசாவல் மறைந்த வரலாற்றைக் கூறும் பகுதி மிகச் சிறந் தது, தண்காவையும், பூம்பொழிலையும், இன்னிசைக் குயில்களையும், சூசை யெனும் வளன் விளித்து, இயேசு வைக் கண்டீரோ வெனப் புலம்புகின்றார். பறவைகளே! என் உயிரும், மரியாயின் அரசரு மாகியவர், பகைவரின் மனம் போல் இருண்ட காட்டில் சென்ற வழியைக் கூறுங் கள், அவரை யான் அடைய வேண்டும்.
பொன்னார் சிறகாற் புட்கரஞ்சேர் புட்குலமே யென்னா ருயிரே யென்னெஞ்சத் தாளரசே யொன்னார் மனநேர் வனஞ்சேர வுற்றவழி யன்ன னட வறையிரோ வெனக்கென்றான்.
(படலம் 31)
இப்பகுதியினைத் திருக்கோவையாரின் சில பகுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க.
அன்னான் நாட ௪ அவனைத் தேட; புட்கரம் ஆகாயம், ஒன் ஞர் - பகைவர் ஒன்னார் மனம் வனத்திற்கு உவமை.
காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 89
இசைப் பயிற்சி மிக்குடையவர் வீரமாமுனிவர். சில செய்யுட்கள் சிலப்பதிகார வரிப்பாட்டைப் போல் ஒலிக் கின்றன. பாற்கடலில் மலரும் தாமரை மிகவும் அழகாக மலரும்; என் உள்ளமும் அவ்வாறு மலர்ந்தது. வேத நூற் கடலாகிய நீ, நாங்கள் பாவம் செய்ததால் துன்பக் கண்ணீர் சொரிகின்றாய். நானோ இறைவனான நீ மனித னாய் உதித்ததால் ஈடேற்றம் அடைந்தேன் என்று ஆனந்தக் கண்ணீர் சொரிகின்றேன், பாற்கடல் என் உள்ளப் பதும மலர் அரும்ப நூற்கடலே நீஉதித்தாய் நும்மலர்க்கண் முத்தரும்ப நும்மலர்க்கண் முத்தரும்ப நோய்செய் வினைசெய்தோம் எம்மலர்க்கண் முத்தரும்ப இன்று வினைதீர்த்தாய் (படலம் 12). இனிக் கடவுளைப் பற்றிய செய்யு ளொன்று:-- அறக்கடல் நீயே; அருட்கடல் நீயே அருங் ௧௬ ணாகரன் நீயே திறக்கடல் நீயே; திருக்கடல் நீயே திருந்துளம் ஒளிபட ஞான நிறக்கடல் நீயே; நிகர் கடந் துலகில் நிலையும் நீ; உயிரும் நீ; நிலைகான் பெறக்கடல் நீயே; தாயும் நீ; எனக்குப் பிதாவும் நீ; அனைத்தும் நீ யன்றோ. (படலம் 6-34)
இச்செய்யுளினது பொருள் யாவர்க்கும் பலனாகும்; இங்கு திருவாசக மணம் கமழ்கின்றது.
84 காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர்
௫
மேலும் வீரமாமுனிவர் தனி முறையில் தமிழை வளர்த்ததை ஆராய்ச்சியாளர் இதுகாறும் கூறினார் அல்லர், தமிழ்ப் புலவரைப் பயன்படுத்தியது போல், வீரமா முனிவர் தாந்தே, தாசோ, வெர்ஜில் முதலிய மேல் நாட்டுப் புலவர் நூல்களையும் பயன்படுத்தி யுள்ளார். இருபதாவது படலத்தில் தாசோவின் காப்பியம் ““எருச லேமின் விடூதலை”' (Gerusalemme Liberata) sம்புலவ ருக்குத் துணை நூலாவதைக் காண்க. தமிழ் அன்னைக்கு அவரை அறிமுகப் படுத்திய பெருமை புலவ ருடையது. மேல்நாட்டுக் கலையாறும், தமிழ்நாட்டுக் கலையாறும், கலக் கும் ஏரியாம் தேம்பாவணி.
வீரமாமுனிவர், தமிழறிவு உள்ள ஐரோப்பியர் பலர் போல், தமிழ்த தூதராக விளங்கினார். தமிழின் பெருமை யைப் பிற மொழிகளில் பிற நாட்டவர்க்குக் கூறினார்; பிற இலக்கியங்களின் கருத்துக்களையும், சுவையையும் தமிழ் நாட்டார்க்குக் கொடுத்தார். அவர் இலத்தீன் மொழியிலும். போர்த்துக்கீசிய மொழியிலும் யாத்த தமிழ் இலக்கணங்களும், அகரவரிசை நூல்களும். பிற்காலத்தில் தமிழ் மொழி பயின்ற ஐரோப்பியர் அனைவர்க்கும் பயன் பட்டன. அவர் இலத்தீன் மொழியில் எழுதிய கொடுந் தமிழ் செந் தமிழ் இலக்கண நூல்களில், தமிழ் எடுத்துக் காட்டுகளுடன் இலத்தீன் இலக்கியத்தின் எடுத்துக் காட்டுகளை யும் புகுத்தியுள்ளார், இவ்வாறே, தொன்னூல் விளக்கம் எனும் ஐந்திலக்கண நூலில், அணி இலக்கணத் தில் கிரேக்கர் உரோமர் யாத்த அணி முறையைப் பயன் படுத்தி யுள்ளார் என முன்னர்க் கூறி யுள்ளோம்,
காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர் 85
தாந்தே எனும் இத்தாலியக் கவிஞர் இயற்றிய Divina Commedia எனும் பெருங்காப்பியத்தில் வீரமா முனிவர் பெரிதும் ஈடுபட்டு, அதில் ஈன்கு பயின்றிருந் தார் என முன்னர்க் குறித்தோம். தாந்தே கடவுளன் னையை நோக்கிக் கூறும் வழிபாட்டூரை மிகவும் சிறப்பு டையது, அது வருமாறு:--
“Vergine madre, figlia del tuo figlio, umile e alta piu che creatura, termine fisso d’etterno consiglio, tu se’ colei che l’umana natura nobilitasti si, che ’1 suo fattore non disdegno di farsi sua fattura.” (Par., 33, 1-6)
இவ்வடிகளின் கருத்துக்களை முனிவர் பின் வருமாறு
தமது திருக்காவலூர்க் கலம்பகத்தில் அமைத்திருத்தல் காண்க:
“உருவில்லான் உருவாகி உலகில் ஒரு மகன் உதிப்பக் கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தாய் ஆயினையே'” “உந்தையை ஈன்று நீ ஒருவற் கீங்கரும் வந்தையோ டன்னையும் மகளும் ஆயினை கனியரும் பயனொடு கலந்த பூவினைத் தனியருள் கன்னியும் தாயும் ஆயினை''
இவற்றின் பொருள்:--அன்னையே, அரு வடிவ முள்ள கடவுள் உரு வடிவ முள்ள மனுடன், ஆகி, உலகத்தில் உமக்கு மகனாக வந்து பிறக்க, நீர் இயற்கையின்படி கொள்ளும் கருவின்றிக் கருப்பம் கொண்டு, கன்னிமை
86 காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர்
குன்றாத அன்னை ஆயினீர். உமது தந்ைத ஆகிய கட வுளை நீர் மகனாக ஈன்று, அந்த ஒப்பற்ற கடவுளுக்கு இந்த உலகத்தில் அருமை பெருமையோடூ அன்னையும் புதல் வியும் ஆயினீர். கனி தன் அரிய பயன்கள் பலவற்றி னோடும் மலரில் கலந்துள்ளது; ஆதலின், அம் மல ரினை உய்த்துணர்ந்து நோக்குங்கால், அது பூவாகவும் கனியாகவும் ஒருங்கு விளங்குகின்றது. அவ்வாறே, நீர் ஒப்பற்ற அருள் நிறைந்த கன்னியும் அன்னையுமாக ஒருங்கே விளங்க லாயினீர்.
இவ்வாறு, வீரமாமுனிவர் செய்யுட்களில் பிற மொழிப் புலவர் பலரின் அரிய கருத்துக்கள் ஆங்காங்குப் பொதிந்துள்ளன. அவற்றை நன்கு ஆராய்ந்து தமிழுல கிற்குக் கூற வல்லுநர் இணையற்ற தமிழ்த் தொண்டு செய் தவர் ஆவார்.
௫. தமிழ் நாட்டின் ஆசிரியர்
தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை
க
எழுத்தாளரில் பல திறத்தா ரளர். அவருள் சிலர் தம் வாழ்நாளில் புகழ் பெறினும், அவர் மறைந்த பின் அவர் நூல்களைப் படிப்பவர் இலர். வேறு சிலர் பருவுடல் மறைந்த பின்னரே பெரும் புகழ் எய்துகின்றனர். இன் னும் ஒரு சிலர், தம் வாழ்நாளில் பெரிதும் போற்றப் படு வதுடன், இறந்த பின் இன்னும் போற்றப் பட்டு வருகின் றனர். சான்றோரின் நூலெனின், அதனைப் படிக்கப் படிக் கச் சுவை யூறும்; காலம் செல்லச் செல்ல, அதன் பெருமை தோன்றிக் கொண்டே போகும். இத்தகைய இறுதிப் பிரிவினருள் சார்ந்தவரே மயிலாடுதுறை வேதநாயகம் . பிள்ளை.
ஆம், நீவிர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அவரை அறிந்திருப்பது உண்மையே, அவர் காலத்தில் கூட, அவ்வூரை மாயூரம் என்றே அழைத்தனர். ஆயினும்,
88 தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை
தமிழ்நாட்டு ஊர்களுக்கு வட மொழிப் பெயர்கள் கொடுத் துத் தமிழ்ப் பெயர்களைச் சிதைக்கு முன், இவ்வூருக் குரிய அழகிய பெயர் மயிலாடுதுறை. எத்துணை வனப்புடைய தமிழ்நாட்டுக் காட்சிகள் இவ்வூரின் பெயரில் அடங்கி யிருக்கின்றன! இதன் இடத்தில், “மாயூரம்” என்று பெயரிட்டனர். ““மாயூரம்'' எனும் வடமொழிச் சொல் “மயில்” எனப் பொருள்படும் என்று எத்துணைத் தமிழர் அறிவர்? அம் மாயூரத்தின் பொருள் புரியாமல் அன்றோ “மாயவரம் என அழைக்கத் தொடங்கினர்? பழக் தமிழ்ப் பெயரே பண்புடைய பெயராகும் என அறிக,
மயிலாடுதுறை வேதநாயகம் பிள்ளை என்று அவரை அழைத்தாலும், அவர் முன்னோர் தோன்றிய ஊரும், அவர் பிறந்து வளர்ந்த ஊரும், குளத்தூர். அவர் மாயூரம் வரு முன், அவரைக் குளத்தூர் வேதநாயகம் பிள்ளை என்றே அழைத்தனர், இதனைத் ““தடாகபுரம்'' ௮ல்லது “சரா புரி” என மாற்றாதது பெரும் நலமே! இக் குளத்தூர் திருச்சிராப்பள்ளியை அடுத்த ஒரு சிற்றூர். இச் சிற் றூரே இப்பெரும் சான்றோரை உலகிற்கு நல்கியது என் றால், மக்கள் வியப்பினை அடைவர். ஆயினும்,உலகில் எத் துணைச் சிறந்த புலவர் சிறு ஊர்களில் பிறந்திருக்கின்ற னர்.
வேதநாயகம் பிள்ளை தோன்றிய குலம் குறிக்கற் பாலது. இவர் வேளாளர் குலத்தில் கொங்குராயர் . மரபி னைச் சார்ந்தவர் என்றும், கொங்குராயர் தமிழ் மன் னர்க்கு முடி சூட்டும் பெருமை பெற்றவர் என்றும், கூறு வர், மேலும் இவர் பெற்றோர், ஒரு வாறு செல்வம்
தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 89
படைத்த கத்தோலிக்கர். ஆவூரில் உள்ள இயேசு சபைக் குருக்களிடம், இவர் பாட்டனார் ஞான நீராட்டுப் பெற்ற தால், ஐரோப்பிய ருடனும், அவர் மொழிக ளுடனும், தொடர்பு பெற்றவர். வேதநாயகம் பிள்ளை இளைஞரா கவே, தமிழ், ஆங்கிலம், இலத்தீன், பிரெஞ்சு, சமஸ்கிரு தம், ஆகிய மொழிகளைப் படித்தவர். இவ் வேற்று மொழிப் பயிற்சியும், கத்தோலிக்குச் சமய நூல்களும், இவர் இயற்றிய இலக்கியம் சிறக்கத் துணையாய் இருந்தன என்பது ஒருதலை. உ
இவர் உழைத்து வந்த துறை நீதித் துறை. நீதிமன் றங்களில், முறையே, மொழி பெயர்ப்பாளரும், ஆவணப் பாதுகாவலரும், ஆனார். அதன் பின், மாவட்ட முறை மன்றத் தலைவரானார். இவ் வுயர்ந்த வேலைக்குத் தெரிந் தெடுக்கப்பட்ட முதல் தமிழர் இவரே. எனவே, இவருக்கு நூல் அறிவுடன், பயிற்சி அறிவும் இனிது பொருந்தியது. உலகியலில் நல்ல தேர்ச்சி பெற்றார். உயர்ந்தோரோடும் தாழ்ந்தோரோடும் பழகியதால், மக்கள் இயல்புகளிலும், உளநூல் துறையிலும், மிக்க பயிற்சி உடையர் ஆனார். அவர் நீதிமன்றம் நீதிக் கல்லூரியாக விளங்கியது. அங் கிருக்கும் அனைவர்க்கும் பயனுறுமாறு, நீதி வழங்குங் கால், அறிவுரைகளையும் அறவுரைகளையும் நிகழ்த்துவார். சட்டத் துறையை யொட்டி, “சித்தாந்த சங்கிரகம் '” எனும், சட்டத் தீர்ப்புக்களும் நுட்பங்களும் அடங்கிய சட்ட நூலை வெளியிட்டார். தமிழ்நாட்டில், நீதி வழங்கு . வதுடன், நீதி புகட்டவும் வன்மை பெற்றார். எனவே, நீதி மன்றத் தலைவர், 1859-ஆம் ஆண்டு “நீதி நூலை'” வெளி
12
90 தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை
யிட்டு, தமிழ் நாட்டிற்கு ஆசிரியராகத் திகழ்ந்தார், இந் ் நூல், திருக்குறள் நாலடியார் முதலிய நூல்களின் மரபில், தோன்றியது, ஆயினும், முற் கூறிய நூல்களுள் இல்லாத கருத்துக்கள் சில, இதனில் உள. இக் கருத்துக்களை, வேத நாயகம், தாம் தழுவிய கத்தோலிக்குத் திருமறையின் நூல்களிலும், தாம் அறிந்த வேற்றுமொழி இலக்கியங் களிலு மிருந்தே, அறிய வந்தார். அவர், “வேதம்!” “வேதாந்தம்'” என்பது, பத்துக் கற்பனைகளும், இயேசு பெருமானின் அருங் கூற் நொன்றும் ஆம்:-- “ஈசனையே துதித்தல் அவன் திருநாமத் தொடுதிருநா ளினைக்கொண் டாடல் நேசமார் அனை தந்தை வணங்கல்கொலை செய்யாமை நிதங்கா மத்தை நாசமாக் குதல்களவு பொய்நீக்கல் பிறர் மனை பொன்நா டாமை மாசறும்இவ் விதிபத்தும் வேதாந்தம் எனக்கடவுள் வகுத்திட் டானால்'? “முந்தைஇறைக் கன்புபின்பு தன்னுயிர்போல் மன்னுயிரை முறையின் ஓம்பல் இந்தஇரு விதிகளினுள் வேதம்எலாம் அடங்கும்”?
மக்களின் வாழ்க்கை கடவுள் வணக்கத்தை அடிப்ப டையாகக் கொள்ள வேண்டும் என்று, வேதநாயகம் பிள்ளை, தம் நூல்கள் அனைத்திலும் வலியுறுத்தி யுள்ளார், “தெய்வத் தன்மையும், வாழ்த்தும்'” பற்றிய பாக்களில், ஒளியைத் தன் நிழலாகக் கொண்டவன் இறைவன் என் கின்றார்: *சோதிதன் நிழலாக் கொண்ட சோதியைத்
தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 91
துதியாய் நெஞ்சே.” மேலும், அவன் திரு ௮ருட் கடலில் ஆடாமை வல்வினை என்பார், இங்ஙனம் கூறுவர் :--
“அருவமாய் உருவ மாய்௩ம் ஆருயிர்க் குயிராய் அண்டம் பெருநிலம் எங்கும் இன்பம் பெருக்கெடுத் தோங்கி நிற்கும் கருணை அம் கடலா டாது கழித்தனை வாழ்நாள் நெஞ்சே'' இயற்கை, எவ்வாறு தன் தலைவனைப் போற்றுகின்றது எனக் கூறும் அடிகள், நன்கு அறியப்பட்டவை:--
“கதிரவன் கிரணக் கையாற் கடவுளைத் தொழுவான்; புட்கள் சுதியொடும் ஆடிப் பாடித் துதிசெயும்; தருக்கள் எல்லாம் பொதிஅலர் தூவிப் போற்றும்; பூதம்தம் தொழில் செய் தேத்தும் அதிர்கடல் ஒலியால் வாழ்த்தும்; அகமே! நீ வாழ்த்தா தென்னே?” பிள்ளையவர்களின் பரந்த அறிவிற்கும், மனப்பான் மைக்கும், அவருடைய நூல்கள் சான்றாவன. தாம் பின் பற்றிய சமயத்தினை உயிரினும் அருமையாகப் போற்றி னார். எனவே, உலகெலாம் வாழவேண்டும் எனும் உள நெகிழ்ச்சியுடன், தம் சமயத்தவர்க்கு மட்டுமே அன்றி அனைவர்க்கும் நல்வாழ்வ கிட்டூுமாறு, பண்பு ௩லத்துடன் உழைத்தும், நூல்கள் யாத்தும் வந்தனர். இம் மனப் பான்மையால், இவர்க்குக் கிடைத்த ௩ண்பர் பலர். பல்
92 தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை
வகுப்பினர்; பல கொள்கையினர், இவர்களுள், பெரும் புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருவாடுதுறை மடத்தின் தலைவர் சுப்ரமணிய தேசிகர், வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள், ஈழத்து சி. வை, தாமோதரம் பிள்ளை, நல்லூர் ஆறுமுகநாவலர் குறிப்பிடத் தக்கவர்,
நீதிநூல் வெளியாகி இருபது ஆண்டுகட்குப் பின், இந் நீதிகளை இசைத் தமிழிலும் இயற்றினால், படிப்பறியாத வரும் பாட்டாகப் பாடி, தம் வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவர் என உணர்ந்து, “சர்வ சமய சமரசக் கீர்த் தனை”' எனும் இசைத் தமிழ் நீதி நூலை இயற்றினார். இந் நூலில் அடங்கியுள்ள அரும் பொருட்களைக் கூற யார் வல்லர்? இக் காலத்திற்கு ஏற்ற தன்மையிலும், எளிதாகப் படிக்கக் கூடிய முறையிலும், ஓசையுடைமை யுடனும், இவ் விசைப் பாட்டுக்களைப் புனைந்தார் ௩ம் பேரறிஞர். அக் காலத்தில், கருநாடக இசையில், பெரும்பாலும் தெலுங்குச் சொற்களே அமைக்கப் பெற்று வந்தன. புரி யாத இச் சொற்களைத் தமிழ் மக்கள் கேட்டு, தாம் இன் புறுவதாய் எண்ணினர். தமிழ்ச் சொற்களை அமைத்துப் பாடியது வேதநாயகம் பிள்ளை ஆற்றிய சிறந்ததோர் தொண்டு. அத்தொண்டின் பயனைத் தமிழ் இசை இயக்கம் இன்றும் நுகர்ந்து வருகின்றது.
மேலும் தாம் வேண்டிய சில சீர்திருத்தங்கள் பற்றிப் “பெண் கல்வி்” எனும் நூலை யாத்தார். இக்காலப் பெண் கல்வி இயக்கத்திற்கு, அக்காலமே வழி காட்டி ஆனார் வேதநாயகம் பிள்ளை. ்
தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 93 ௩
நீதிமொழிகளை எத்துணை எளிதாகப் பாட்டில் இயற் நினாலும், படிப்பறியா தார்க்கும், இளைஞர்க்கும் எளிதில் விளங்க வல்லது, உரைநடையும், கதையுமே ஆகும். ஆத லின், “பெண் -கல்வி'' உரைநடையில் வரைந்ததுடன், இரு கதை நூல்களையும் இயற்றினார். அவற்றின் பெயர், “பிரதாப முதலியார் சரித்திரம்,” “சுகுண சுந்தரி,” பிரதாப முதலியார் சரித்திரத்தைத் த மிழி ல் தோன்றிய முதல் நாவல் (Novel!) என்பர், இதுவோ உரை௩டையில் புனைந்த பெருங்காப்பியம்போல், பல கதைகளையும், நீதி களையும், முதுமொழிகளையும் கொண்ட களஞ்சியம், இதனை ஒருவாறு (Didactic Novel) அறிவுரைக் கதை நூல் எனக்கூறலாம்.மகளிர்க்குப் பொருந்தும் இலககணங் கள் அனைத்தையும் திரட்டி, சுகுண சுந்தரியை இலக்கிய மாக வரைந்தார். இக் கதைகளில், தாம் செய்யுளில் அமைத்த நீதிகள் வாழ்க்கையில் எவ்வாறு அமைவன என்றும், பயன் படுவன என்றும், காட்டினார். ஜோன்சன் (Johnson) கோல்டூசிமித் ((0௦10501(4) போன்றோரின் உரை௩டை நூல்கள் தமக்குப் பயந்த நன்மையை யுணர்ந்து, அவ்வாறே, தாமும் தமிழ்காட்டிற்குத் தொண் டாற்ற வேண்டு மென விருப்புடையவ ரானார், “வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமே அல்லாது, செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அல் லவா?'*' என்று கேட்கின்றார். நம்முடைய சுய பாஷை களில் வசன காவியங்கள் இல்லாம் லிருக்கிற வரையில், இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையா தென்பது நிச்சயம்” எனத் துணிந்துரைக்கின றார். தம் உரைநடை நூல்களில், உளப் பயிற்சி ஈன்கு படைத்த ஆசிரியர்
9& தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயம் பிள்ளை
போல். மூடப் பழக்க வழக்கங்களை நகைச் சுவை ததும் பப் பழித்துக் கடிந்துரைக்கின்றார்.
பிள்ளையவர்கள் அக்காலத்தே பல. சீர்திருத்தங்களை த் தமிழ்நாட்டில் நிகழ்த்த வேண்டு: மென்று உழைத்த பெருந்தகைமை, அவரது எதிர்கால நுண்ணறிவினைத் தெளிவாக்குகின்றது. மக்கள், வகுப்புச் செருக்குப் பாராட்டி வந்த அக்காலத்திலே, வகுப்பு வேற்றுமை எல் லாம் ஒழிப்பதற்கும், அனைவரும் உடன்பிறந்தார் போல் ஒற்றுமையாய் அன்புடன் வாழ்வதற்கும் வழிகோலுதல் வேண்டும் என வற்புறுத்தினார். அவர் பிற மொழிப் புலமை வாய்ந்தவராயினும், ௩ம் தாய் மொழியைத் தனி மோழியாகப் போற்றினார், ஆங்கிலத்தையும், பிரெஞ்சை யும், இலத்தீனையும், சமஸ்கிருதத்தையும் மிகுதியாகப் போற்றி, தமிழைக் குறைவாக நினைத்து இகழ்ந்தோரைக் குறித்து, அவர் கூறும் கட்டூரை ஈண்டுக் குறிக்கற் பாற்று.
“சமஸ்கிருதமும், இலத்தீனும் ,அதிகச் சிறப்பும், அழகும், அலங்காரமும் பொருந்திய பாஷைகள் என்ப தற்குச் சந்தேகம் இல்லை, அவகாச முள்ளவர்கள், சொந் தப் பாஷைகளோடுகூட அந்தப் பாஷைகளை யும் படிப்பது, அதிக விசேஷம்தான். என்றாலும், சொந்தப் பாஷைகளை நன்றாகப் படிக்காமல், அந்த அன்னிய பாஷைகளிலே காலமெல்லாம் போக்குவது அகாரியம் என்றுதான் நாம் ஆட்சேபிக்கின்றோம்.”'
“இங்கிலீஷ், பிரெஞ்சு முதலிய இராஜ பாஷைகளைப் படிக்க வேண்டாம் என்றும், நாம். விலக்க வில்லை. ஆனால்,
தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 95
மாதா வயிறெரிய மகேசுர பூசை செய்வது போல், சொந் தப் பாஷைகளைச் சுத்தமாக விட்டு விட்டு, இராஜ பாஷை களை மட்டூம் படிப்பது அனுசிதம் அல்லவா? அவர்கள் தமிழ்ப் பாஷையைப் பேசினாலும், முக்காற் பங்கு இங்கி லீசும், காற்பங்கு தமிழுமாக, கலந்து பேசுவார்கள். அவர்களுக்குத் தேசாபிமானமு மில்லை, பாஷாபிமானமு மில்லை.”
“இங்கிலீஷ்காரர் முதலிய ஐரோப்பியர்கள், தங்கள் தங்களுடைய சொந்தப் பாஷைகளை எவ்வளவோ கெளர வமாகப் போற்றி வருகிறார்கள் என்பதை, இந்த வித்தி யார்த்திகளே அறிவார்கள். இவர்கள் மட்டும், தங்கள் ஜென்ம பாஷை ஆகிய தமிழையும், தமிழ் வித்துவான்௧ளை யும் அவமதிக்கலாமா? தமிழ் நூற்களையே பாராத இவர் கள், அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக்கூடும்? திரு வள்ளுவருடைய குறளை அவர்கள் ஜென்மாந்திரத்திலும் பார்த்திருப்பார்களா? கம்பனுடைய கற்பனையைக் கன விலும் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களு டைய காலடியை யாவது கண்டிருப்பார்களா? ஒளவை யாருடைய நீதிநூலைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா? இன்னும் எண்ணிக்கை இல்லாத தமிழ்ப் புலவர்களுடைய பிரபந்தங்களை இவர்கள் எக்காலத்திலும் பார்த்திரார்கள்!””
நீதிகளைக் கூறுவது எளிது; அவற்றை வாழ்க்கையில் நிகழ்த்துவது அரிது. தம் வாழ்க்கையில், வேதநாயகம் பிள்ளை, தாம் கற்பித்தவற்றைக் கடைப் பிடித்து ஒழுகி
96 தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை
னார். நீதிகளைப் போதிப்பவர் அல்லர் பேரின்ப வீட்டிற் குச் செல்பவர்; நீதிகளைச் செய்து காட்டுபவரே அப் பேரின்ப வீட்டை அடைவர், மயிலாடுதுறை வேதநாய கம் பிள்ளை இறைப் பற்று மிகுந்த இல்லறத்தார். தம் மனையை மாட்சியுடன் ௩டத்தி வந்த தலைவர். தம் மக் களை மாண்புடன் வளர்த்த தந்தையார். யாவர்க்கும் நன் மையே செய்ய வேண்டூ மெனுங் கருத்துடன் வாழ்ந்தவர். அவர் வாழ்க்கையில் பல இன்னல்களுக் குட்பட்டார். ஆயினும், நெஞ்சு கலங்காமல், வைரத் தூணைப் போல் நின்றார். இவருக்கு நோய் வந்தது, இவரது வேலைக்கு இடையூறு நேர்ந்தது. இவ் வேளைகளில், தாம் பாடிய வாறு, அஞ்சா நெஞ்சத்துடன் துன்பங்களைப் புறங்கண் டார். மூன்று ஆண்டு சோழவளநாடு சோறின்மை உற்ற காலை, அப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்காகப் பல முயற்சிகள் செய்து, உயிர்களைக் காப்பாற்றினார். இச் செயல் கண்ட வர்-- இசை வாணர்-- கோபால கிருஷ்ண பாரதியார் -- மக்கள் எவரையும் பாடாத மாண்புலவர், இவரைப் “புருஷ மேரு'' என்று பாடினார்.
re
இவர் இறுதியில் பாடிய நூல் “தேவ தோத்திர மாலை.'' கடவுள் மீதும், அவர் அன்னையார் மீதும் பாடிய “திருவருள் மாலை”, “£தேவமாதா அந்தாதி'' முதலிய நூல்கள், இவர் பத்திக்குச் சான்றாவன. இறுதியில், இறைவற்கு நன் றிமலர்கள் அமைந்த பாமாலைகள் சாத்தி, அவர் திருவடிமலர் சேர்ந்தார்,
தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 97
வீரமாமுனிவர் காலம் தொடங்கி, தமிழில் கன்னி மரியம்மையார் மீது மிகவும் உருக்கமான இலக்கியப் பாடல்கள் பாடப் பெற்று வந்திருக்கின்றன. தமிழிற்குச் சிறப்பான இப் பத்திப் பாடல்கள் கத்தோலிக்குத் தமிழ் இலக்கியத்திலும், அதன் இளமையிலேயே நன்கு பொருந்தியுள்ளன. “*மரியன்னை இலக்கியம்'” (Marian Poetry) எனக் கத்தோலிக்கு நாடுகளில், கடவுளன்னை மீது உள்ள இலக்கியத்தைத் தொகையிடூவர். இத்தாலி யத்திலும், ஆங்கிலத்திலும், அவ்விலக்கியம் பெருந் தொகையாக உள்ளது. ஆயினும், தமிழ் மொழியில், கட வுளன்னையைப் பற்றிய பாடல்கள், சென்ற மூன்று நான்கு ' நூற்றாண்டுகளிலேதான் இயற்றப் பெற்றவை யாயினும், ஐரோப்பிய மரியன்னை இலக்கியத்திற்கு அளவிலோ சுவையிலோ வேறு எவ்வகையிலுமோ குறைந்தில. வீர மாமுனிவர் அன்னையை விளித்துக் கூறும் சில அடிகளைப் பார்க்க :--
துன்பநோய்க் குயிர்மருந்தே
துயர்க்கடலின் நிலைக்கரையே இன்பவீட் டுயர்வழியே
இருள்மயல்கொள் உயிர்க்கொளியே வழுவார்க்கு நீநிலையே மருள்வார்க்கு நீதெளிவே அழுவார்க்கு நீகளியே அயர்வார்க்கு நீதிதியே கல்லார்க்குக் கலைக்கடல்நீ கடவார்க்கு நிலைத்திறன்ரீ இல்லார்க்கும் இரணியம்நீ எல்லார்க்கும் எல்லாம்நீ நன்னையே ஆதரவே ௩ண்பொழியாத் தயைக்கடலே அன்னையே அடைக்கலமே அடிமைஎனை ஆள்அரசே
13
98 தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை
£ ஆடினும்நான் துறைத்துணைநீ அருந்தினும்கான் உயிர்ச்சுவைநீ பாடினும்நான் உரைப்பொருள்நீ படுக்கினும்நான் உயிர்ச்சுகம்நீ.
அவர் மரபில் தோன்றிய வேதநாயகம் பிள்ளை தேவ தாயின் பல இலக்கணங்களைப் பற்றி வெண்பாக்கள் இயற்றி யுள்ளார். அவர் அடைக்கல மாதா மீதே பாடிய வெண்பா எத்துணை ஓசை யுடைமையும், பொருட் செறி வும் அமைந்துள்ளது!
ஆரடா பேயேநீ அஞ்சாமல் என்னுடனே
போரடா செய்யப் புறப்பட்டாய்-- வீரப்
படைக்கலமாக் கொண்டேன்நான் பண்டுன்னைத்
அடைக்கலமா தாசீர் அடி, [தேய்த்த
பொறுமை மாதாவை நோக்கி இங்ஙனம் வேண்டுகின்றார்;
தானமிலேன் சாந்தமிலேன் சற்குணங்கள் ஏதுமி ஞானமிலே னேனுமுனை ௩ம்பினேன்--ஈனச் [லேன் சிறுமைமா தாவா நான் செய்பிழைகள் எல்லாம் பொறுமைமா தாவே பொறு.
கோனான் குப்பத்தில் வீரமாமுனிவர் எடுத்த திருக்கோயி லில் எழுந்தருளி யிருக்கும் தேவமாதா மீதும், அவர் உருக்கமாகப் பாடியுள்ளார்.
வேதநாயகம் பிள்ளை, உண்மையில், தமிழ் நாட்டின் ஆசிரியராய் இருந்தார், இன்னும் இருந்து வருகின்றார் என்பதற்கு, இவர் இறந்த காலை, “இந்து” (Hindu) எனும் ஆங்கில நாளிதழ் எழுதியது சான்றாகும்:
தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை 99
“இவரது இலக்கியத் தொண்டிற்கும், தம் நாட்டவ ரின் சமூக நிலையையும், சமய நிலையையும் உயர்த்த முயன்ற பேராண்மைக்கும், ௩ம் நன்றி என்றும் உரித்தா கும். இக்கால இளைஞர் போற்றுதற்கும், பின்பற்றுதற் கும், அவரது வாழ்க்கையில் பல பண்பு நலங்களைக் காண்பர்,''
இது, 1889-ஆம் ஆண்டு, ஆடித் திங்கள், 24-ஆம் நாள் வெளியாகியது. எனவே, இவர் காலத்தவரும், இவரு டைய அரிய பண்பு நலங்களை நன்குணர்ந்து போற்றினர் என்பது பெறப்படும்,
செந்தமிழ் வளர்ச்சி
செந்தமிழ் சிவணிய யாழ்ப்பாண நாட்டில், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் குடை நிழற்கீழ் நிகழ்ந்த தமிழ்த் திருவிழா, ஈழத் திருநாட்டில் மட்டுமே அன்றி, ஏனைய தமிழ் காட்டிலும், தமிழுணர்ச்சியினை ஒருவாறு பெருக் கியது. இக்காரணம் பற்றியே, எங்கள் ஈழ நாட்டிற்கு ஏனைய தமிழ் நாட்டி லிருந்து விருந்தாய் வந்த தமிழர் பலர். ஈழத்து ஆடவரும் பெண்டிரும் காட்டிய தமிழ் ஆர் வத்தைப பல கிழமைகளாகச் செய்தித் தாள்களில் வியந்து புகழ்ந்து வரைந்துள்ளார். வேற்று நாடூகளில் ஈராண்டுகளாகத் தமிழ்த் தொடர் பற்றுத் தவித்த: யான், மூன்று காட்களாய்த் தமிழ்த் தேனை மடுத்து மடுத்துப் பருகலானேன், தமிழ் அன்னையின் சாயலினையும், தமிழ் நாட்டின் எண் திசைகளிலு மிருந்து வந்தோரில் கண்டு களிப்புற்றேன்.
இதுகாறும் நிகழ்ந்த நான்கனுள், இதுவே நான் முதற் கண்ட தமிழ் விழா. ஆதலால், தமிழ் வளர்ச்சி யைப் பற்றியும், இற்றைய இலக்கியத்தைப் பற்றியும் சிறி
செந்தமிழ் வளர்ச்சி 101
தேனும் சிந்திப்பதற்கு, நான் கண்டவை கேட்டவைகள் முறையே காரண மாயின. தமிழகத்தின் எழுத்தின் வல் லாரும் பேச்சின் வல்லாரும் பலர் வந்திருந்தனர். புதிய நூல்களைப் போற்றி, அவற்றிற்குப் பரிசு வழங்கினர். தமிழ்ப் பெருங் கடலின் இக்காலைய நீரோட்டங்களைக் குறித்து உரைகளும் நிகழ்த்தினர்.
க
இருபது ஆண்டுகட்கு முன்னர்ச் செந்தமிழ் என்பது. அருகிய பண்டமாய் வழங்கியது. மறைமலை அடிகள், திரு. வி. கலியாணசுந்தரர் முதலான ஒரு சில நூலாசிரி யர் தவிர, ஏனையோர் பலர் பிற மொழிக் கலப்பினை விரும்பி, அக்கலப்பு நடையே தமிழ் ௩டையைச் சிறப்பித் துள்ள தெனக் கருதி வந்தனர். இன்று தமிழை நன்கு பயின்ற எழுத்தாளர் தமிழ் மகளின் கற்பைக் காப்பாற்றி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே, தமிழ் தனித்து இயங்க வல்லதாகுமோ, பிற மொழிக் கலப்பினால் அது வளம் பெறாதோ என ஐயுற்று, தமிழ் நடையில் வட சொற் களையும் திசைச் சொற்களையும் பெய்து வருகின்றனர். தமிழ் என்னும் பெயர்தானும், அது தனித்து இயங்க வல் லது எனக் குறிப்பதை அறியார்.*
இச் செந்தமிழ் இயக்கத்திற்கு, தமிழ் காடு என்னும் உ.அர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக் கங்களும் காரண மாயின, நம் பல்கலைக் கழகங்களிலும்,
- “தனிமையும் இனிமையும் தமிழ் எனல் ஆகும்" | ் பிங்கல நிகண்டு
102 செந்தமிழ் வளர்ச்சி
கல்லூரிகளிலும், பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பயிலுமாறு நிறுவியதும் காரணமென்று எண்ணுதற்கு இடமுண்டு. இவ் விலக்கியங்களைப் படிப்போர், தமிழில் கூற முடியாத பொருள் ஒன்றும் இல்லை என்றும், எழுதும் பொருளை எவ்வாறு எழுத வேண்டும் என்றும் அறிவர். இவ் விலக்கியங்களைப் பயிலாதார் செந்தமிழைப் பெரும் பாலும் சீரழித்து வருகின்றனர், தமிழ் நடை வளம்பெற வேண்டு மாயின், தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கியங்க ளில் போதிய அறிவு படைத்தவர். ஆதல் வேண்டும், இற்றை ஆங்கில இலக்கியத்தில் மேல்வரிச் சட்டமாக விளங்கும் எழுத்தாளர் அனைவரும், பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்ற புலவரே என்பது குறிக்கற்பாலது, அங்ங னமே, தமிழகத்தின் பல்கலைக் கழகங்களில் முறையே பாடங் கேட்டவர், செந்தமிழின் செஞ்சுவை நாட்டில் விஞ்சுமாறு உணர்த்தி வருகின்றனர்,
உ
பண்டை இலக்கியங்களில் தோய்ந்த அறிவு பெறின், அவ் வறிவு புதுமை இலக்கியம் படைத்தற்கு இடையூ ௫௧ நிற்கும் என்பது தவறு. சிலப்பதிகாரம் பயின்றால், புதிய இலக்கியம் இனிமை குறைந்து போகுமா? கம்ப ரைக் கற்பின், கற்பனையும் சொல் வளமும் குன்றி 'விடுமா? இத்தகைய நூல்கள் எக்காலத்திலும் படிப்போர்க்குப் பயன் அளித்தல் பற்றியே, இவற்றை இலக்கிய நூல்கள் என்று அழைக்கின்றோம். ஆங்கில அறிவும் எழுத்தாண் மையும் படைத்தல் வேண்டூ மெனின், பல்லாண்டுகட்கு முன் வாழ்ந்துள்ள சாசர் (hacer) என்னும் புலவரைப் படிக்க வேண்டும் என்பர், அதுபோலவே, புதுமை இலக்
செந்தமிழ் வளர்ச்சி 103
கியம் படைக்க வேண்டுமேல், பண்டைச் சங்க இலக்கியங் களில் போதிய அறிவினைப் படைத்தல் வேண்டும், எளிய நடைக்கும் அழகிய சொல் அமைதிக்கும், இவற்றையே அடிப்படை யாகக் கோடல் உறுதுணை ஆகும்.
இன்று நமது நாட்டு செய்தித் தாள்களும், கிழமைத் தாள்களும், செந்தமிழ் வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பன வாகத் தோன்றில. அவைதாமும் இவ் வியக்கத்தில் பங்கு பெறு மெனின், இது முற்றிலும் வெற்றி பெறும் என்பதற்கு ஐய மின்று.
செந்தமிழ் இயக்கத்திற்கு வேறொரு .தடையுமுளது. அமெரிக்க ௩ண்பர் ஒருவருடன் தென்னிந்தியாவில் புகை வண்டியில் சென்றுகொண் டிருந்தேன். அவ் வண்டியில், எமக்கு அருகில், தமிழர் சிலர் அமர்ந்திருந்தார். தமிழில் ஆங்கிலத் தமிழில் எனக் கூறின், இதனினும் மிகப் பொருத்தமாகும்--ஆங்கிலத் தமிழில் உரையாட லாயி னோம். அதனைச் செவியுற்ற என் நண்பர் என்னை நோக்கி, “தமிழ் தனித்து இயங்கும் மொழி என்றும், சொல்வளம் பெருகிய மொழி என்றும், நீங்கள் சொல்வீர்கள், ஆயின், தமிழ் உரையாடலில் இத்தகைய ஆங்கிலச் சொற்களையும் தொடர்களையும் சேர்க்க வேண்டு மெனின், அது எங்ஙனம் தனித்து இயங்கும் மொழி யாகும்!”' என்றார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் விழா நிகழ்ந்த பொழுது, இக் கலப்பு வழக்கைக் கண்டித்துச் சில கட்டூரைகள் எழுந்தன. இக் கலப்பு வழக்கிற்குக் காரணம் மடிமையே,
104 செந்தமிழ் வளர்ச்சி
தமிழிற் சொல்ல முடியாத பொருள் ஒன்றுமில்லை யென்ற பின், தமிழ் உரையாடலில், ஆசிரியரும் புலவரும் உள்ளிட் டோர் தாமும், “இந்த Poem-gஐ translate செய்ய வேண் டும்''. “Cholas History-இல வரும் Many Ministers Kings-உடைய Relations-ஆகவே இருந்தார்கள்'' என்ற பான்மையில் தமிழைக் கையாளும் பொழுது, தமிழ் வளர்ச்சி விரும்பும் சிலர்க்கு வெறுப்புண்டாதலில் வியப் பொன்றும் இல்லை. இத்தாலியத்தை இனிதுணர்ந்த ஆங் கிலேயர், தமக் குள்ளே பேசும் பொழுது, இத்தாலியத்தை ஆங்கிலத்துடன் கலந்தா பேசுகின்றனர்? ஆங்கிலம் நன் குணர்ந்த ஜப்பானியர் உரையாடூ மிடத்து, ஆங்கிலத்தை ஜப்பான் மொழியுடன் கலந்தா உரையாடுகின்றனர்? தமிழிற்குத் தானோ இந்தச் சீரழிவு? தமிழ் நாட்டில் இச் சீர்கேடு மல்கி யுள்ளதால், நாம் அதனை உணரா திருக்கின் றோம். பிற நாடுகளி லிருந்து ௩ம் நாட்டிற்கு வருபவர் அதை நன்கு குறிக்கின்றனர். ௩ம் எண்ணங்களைத் தமிழில் வெளிப்படுத்தும் பொழுது, பிற மொழிக் கலப்பின்றி வெளிப்படுத்த முயல்வோமாகில், ௩ம் மொழி வளம் பெறு தற்கும், ௩ம் இலக்கியம் உயர்வடைதற்கும், வழி காட்டு வோம்.
தமிழ் மொழியிற் கூற முடியாத கருத்துக்கள் எவை யும் இல்லை. பிற மொழிகளுடன் தொடர்பற்ற காலத்தில், தமிழர் தம் அரிய கருத்துக்களை எங்ஙனம் கூறினர்? அவர் மிக்க நுண்மையும் ஒண்மையும் வண்மையும் ஆகிய எண்ணங்களைப் பற்றி நூல்கள் யாத்துள்ளனர் அன்றோ? பண்டை இலக்கியத்தையும், உரையாசிரியர் நூல்களையும் படிக்கும் பொழுது, இற்றை நாட் கருத்துக்களைக் கையா
செந்தமிழ் வளர்ச்சி 105
ளுதற் குரிய சொற்களை அந் நூல்களிலேயே காண்கின் றோம். ஒரு முறை “[ரரஜகtion” எனும் ஆங்கிலச்சொல் லிற்குச் செமமையான தமிழ்ச் சொல் தேடினேன். திருக் குறளைப் புரட்டிப் பார்த்தேன். பரிமேலழகர் உரையில், “£ீர் கால் யாத்தல்' எனும் சொற்றொடரைக் கண்டு மிக வும் வியந்தேன். ஏனெனின், யான் தேடிய கருத்து ஆங்கு மிகவும் அழகுறக் காட்டப் பெற்றிருந்தது. இங்ங னம் எத்துணை அருமையான சொற்கள் பிற மொழிக் கலப் பினால் வழக் கொழிந்து போயின? ஞாயிற்றுக் கிழமை எனக் கூறும் தமிழ் மக்களுள் எத்துணைப் பெயர், ஞாயிறு, கிழமை எனும் அத் தனிச் சொற்களைத் தம் உரையாடலில் பயன் படுத்துகின்றனர்?
௩
செந்தமிழ் இயக்கத்தை விரும்பி, பழைய இலக்கியங் களில் வரும் வட சொற்களின் இடத்தில் தமிழ்ச் சொற் களைப் பெய்து பதிப்பிக்கும் முறை கேடு ஒன்று, அண்மை யில் தோன்றி யுளது, சிறப்பாக, மாயூரம் மாவட்ட நீதிபதி வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் போன்ற நூல்கள், இக் கொடிய அறுவை மருத்துவச் செயற்கு இலக்காயின. இம் மருத்துவச் செயற்குச் சான் றோர் எங்ஙனம் உடன்படுவர்? இங்ஙனம் வேறு படுத்தப் பெற்ற நூல்களை ஆசிரியரின் நூல்கள்தான் என அறைதல் எங்ஙனம்? ஆசிரியர் மறைந்த பின்னர், அவர் நூல்களை நமக்கு இசைந்தவாறு மாற்றிக் கொள்வது முறை யாகுமோ? சென்ற நூற்றாண்டின் தமிழ் நடையை -- அதன் பண்பை -- இயல்புகளை ஆய வேண்டுவோர், இவ் வாறு மாற்றப் பெற்ற நூல்களை வைத்து எவ்வாறு ஆய்ந்
14
106 செந்தமிழ் வளர்ச்சி துணர்வர்? செந்தமிழ் ஆர்வம் வரம்பின் மிக்கு இழுக் காகிய செயற்கு, இது ஒரு சான்றாகும்.
அண்மையில், பல புத்தகங்கள் பல துறைகளில் தோன்றி, தமிழ் அறிவைப் பெருக்கவும் விரிக்கவும் முயற்சி செய்கின்றன. அத்தகைய நூல்களின் பெருந் தொகுதியை எழுதும் ஆசிரியர், அவற்றைப் பள்ளிக்கூட மாணவர்க்குப் பாட புத்தக மாக நிறுவ வேண்டும் என் னும் கருத்தோடூ எழுதுகின்றார் போல் தோன்றுகின்றது. அவற்றைப் படித்து வளரும் தமிழ் இளைஞர்க்குத் தம் நற் கருத்துக்களைப் பரப்புவதே அவ் வாசிரியரின் நோக்கம் போலும். அற்றேல், பாட புத்தகமாக அமைத்து, அவற் றின் விற்பனை வாயிலாய்ப் பொருள் ஈட்டுமாறு எண்ணி அவற்றை எழுதுவா ராயின், நூலாசிரியரின் உயர்ந்த கொள்கையைப் பெரிதும் தாழ்த்துவார் ஆவர். இந் நோக்கத்தினால், சிறந்த ஆராய்ச்சியில் ஈடுபட வல்ல ஆசி ரியர் தாமும், சின்னஞ் சிறு பொலி வற்ற செறி வற்ற புத் தகங்களையே வரைகின்றனர்,
நூலாசிரியனும், எழுத்தாளனும், பாட்டூப் புலவனும், படைப்பு வலிமை பெற்றவர். இவர் கலைஞர், “இவர்க்கு எழுதுவேன், இவ்வாறு எழுதுவேன், எளிதாய் எழுது வேன், உயர்வாய் எழுதுவேன், என்னாது, தம் மனத்தின், எண்ணங்களைத் தத்தம் தனி ஆற்றற்கு ஏற்ற வண்ணம் தெரிவித்தல் இன்னோர் கடன். கலையை அடக்கி வைத்து, விலைக்காக அளந்து கொடுப்பது, வணிகன் இயல்பே அன்றி, உண்மை எழுத்தாளன் . இயல்பன்று, நூல்கள்
செந்தமிழ் வளர்ச்சி 107 வெளி வந்த பின்பு அவற்றின் நலங்களை ஆய்ந்து, சுருக்கி யும், விளக்கியும், மாணவர்க்கு ஏற்றவாறு அமைத்துக் கொடுப்பது, இரண்டாவது பொறுப்பாகவே இருத்தல் நலம்.
இக்காலைய நூல்களில் மொழி பெயர்ப்பு நூல்கள் பல. அம் மொழிபெயர்ப்புக்கள் இந்திய மொழிகளி லிருந்தும், வேற்று நாட்டு மொழிகளிலிருந்தும், செய்கின்றனர். ஆயி னும்,அவர் செயல் வெள்ளாடு நுனிப் புல் மேய்வது போல் இருக்கின்றது. ஆதலின், அவர் நூல்கள் குறைவுற்றுக் கிடக்கின்றனவே அன்றி, நிறை வுற்று விளங்கில. ஜப் பான் நாட்டில் பல புத்தகக் கடைக்குச் சென்று, அவர் நூல்களைப் பார்த்தேன். அன்னார் தம் முதனூல்களைப் . பெருக்குவதுடன், வேற்று நாடுகளில் வெளியாகும் முக் கிய நூல்களை எல்லாம், அதே யளவில், சுருக்காமல், உள் ளது உள்ளவாறே மொழி பெயர்க்கின்றனர். மேலும், அவர்தம் இளைஞர் பள்ளிக்கூடங்களில், எவை யேனும் இரண்டு ஐரோப்பிய மொழிகளை மாணவர் பயிலுகின்ற னர். ஜப்பானில் வேற்று மொழி வல்லார் தொகை பெரிது. மொழி பெயர்ப்பு நூல்கள் வாயிலாகவும் ஜப்பா னியர் மேம்பாடு அடைந்தனர், ஜப்பான், உலக நாடுக ளில், எழுத்தறிவாளர் தொகையில், முதல் இடம் பெற் றது. அன்னார் தொகை நூற்றுக்குத் தொண்ணூற்றேழு விழுக்காடு. ஆதலின், நூல்கள் படிப்போர் பலர், நாமும், அவர் போல் பிற நாட்டு நல்லறிஞர் நூல்களை முற்றிலும் மொழிபெயர்த்தல் வேண்டும். அத்தகைய
108 செந்தமிழ் வளர்ச்சி இலக்கியத் தொடர்பினால், ௩ம் எழுத்தாளர் புதிய உலகங் களைக் காண்பர், பிற மொழிக் கல்வியும், ௩ம் நாட்டில், இன்னும் பெரிது பரவுதல் வேண்டும். சிறு நூல்களையும், சிறு கட்டுரைகளையும் மிகுதியாகப் பரப்புதலால், ௩ம் இளைஞர் செறிந்த நூல் அறிவு படைத்திலர். “A 2௦00 book is the life blood of a master.” நல்ல நூல் தனிப் பெருந் தலைவர் உயிர்நாடி, அத்தகைய நூல் ஒன்றே பயிலி னும், பன்னூலால் வாராத நன்மை யெல்லாம் வரும். நாம் இயற்றும் முதனூல்கள் பிற மொழிகளில் பெயர்த்தற் குரிய ஆற்றல் அமைந்திருத்தல் வேண்டும்.
ஈழ நாட்டில், தாய்மொழி வாயிலாய்ப் பாடம் சொல் லும் திட்டம் இன்னும் முற்றிலும் இடம் பெற்றிலது. யாழ்ப்பாணத் தமிழ்த் திருவிழாவில், விஞ்ஞானக் கல்வித் துறைகளின் பொருள் பற்றித் தங்கு தடையின்றித் தெள் ளிய தமிழில் ஆற்றொழுக்காகச் சிலர் விரிவுரை நிகழ்த்திய பின்னரே, அங்குற்றார் பலர், விஞ்ஞான பாடஞ் சொல்லு தற்கும் தமிழ் உதவு மென் றுணர்ந்தனர்.
௪
சின்னாள் முன்னர், எழுத்தறி வியக்கத்தில் தலைசிறந்த தொண்டியற்றிய டாக்டர் உலோபேக்கின் கட்டூரை யொன்றைப் படித்தேன். உலக மக்கள் மூன்றி லொரு பகுதியினர் எழுத்தறியாது இருள் சூழ்ந்திருக்கின்றனர்” எனச் செப்பி யுள்ளார், புதியஎழுத்தறிவாளர் தம். கல்
செந்தமிழ் வளர்ச்சி 109
விப் பயிற்சியைத் தொடர்ந்து ௩டத்துதற் குதவி யாய எளிய நூல்கள் இல்லாமையையும் குறிப்பிட்டார். இந்தி யாவில் நூலாசிரியர் என்பார் பலர் பண்டித இலக்கண முறையிலேயே எழுதுகின்றன ரெனவும், பொது மக்கட் கேற்ற பொதுக் கருத்துக்கள் பொதுளிய நூல்கள் பல இன்றி யமையா வெனவும், -இயம்பினர். எளிய நடை யெனின், இழிந்த ௩டை யன்று; எவர்க்கும் எளிதாகப் பொருள் விளங்கும் நடையாம். எளிதாக நயம்பட எழுது தற்கு, இலக்கியத்தில் ஆழ்ந்து அகன்று நுணுகித் தோய்ந்த நல்லறிவு வேண்டும். அத்தகையோர் விரல் விட்டு எண்ணற் குரிய ஒரு சிலரே உளர் என்பது குறிப் பிடத் தக்கது.
இக் கால மறுமலர்ச்சிக்குத் தமிழ்ப் பற்று அடிப் படை ஆகின்றது. பாரதியார் இப் பற்றுப் பற்றி வரைந் துள்ள பாட்டுகள், முற் கூறிய எளிய நடைக்கும் எடுத் துக் காட்டாவன. அவரே மறுமலர்ச்சியின் நோக்கங்க ளையும் அழகுற எழுதியுள்ளார், “ பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற்
பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் ப் மகிமை யிலலை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக் செய்தல் வேண்டும்”. [கம்
110 செந்தமிழ் வளர்ச்சி
இத் திட்டத்தைச் சென்ற இருபது ஆண்டூகளில் நிறைவேற்றி யுள்ளோம். இந் நோக்கங்களை நிகழ்த்து தற்கு நமக்கு இன்னும் போதிய விரிவான இடம் உளது. இன்று தமிழ் நாட்டிற்கு வேண்டுவோர் ஆன்றமைந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலரே. ற்